திரைத் துளி
அமெரிக்காவின் புகழ் பெற்ற டாக் ஷோக்களில் ஒன்றான டேவிட் லெட்டர்மேனின் லேட் ஷோ நிகழ்ச்சியில் நடிகையும்முன்னாள் உலக அழகியுமான ஐஸ்வர்யா ராய் இன்று (9ம் தேதி) தோன்றுகிறார்.
நாளை ஒளிபரப்பாக இருந்த இந் நிகழ்ச்சி ஒரு நாள் முன்னதாகவே ஒளிபரப்பாகிறது. இன்றிரவு 11.30 மணிக்கு இந் நிகழ்ச்சியைப்பார்க்கலாம். லேட் ஷோ நிகழ்ச்சி எம்மி விருது பெற்ற நிகழ்ச்சியாகும்.
நியூயார்க் எட் சுல்லிவன் அரங்கில் நடைபெறும் லேட் ஷோ நிகழ்ச்சியில் ஐஸ்வர்யா ராய் தனது முதல் ஹாலிவுட் படமான பிரைட்அண்ட் பிரிஜூடிஸ் குறித்து டேவிட் லெட்டர்மேனுடன் உரையாடுகிறார். இந்தப் படத்தின் பிரீமியர் ஷோ வரும்வெள்ளிக்கிழமை அமெரிக்காவில் நடப்பது குறிப்பிடத்தக்கது.
இந்தப் படத்தில் இந்தி நடிகர் அனுபம் கேரும் நடித்துள்ளார்.


Click it and Unblock the Notifications











