twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    இந்தி சந்திரமுகிக்கும் ஐஸ் நோ! தமிழில் சந்திரமுகியில் நடிக்க மறுத்து விட்ட ஐஸ்வர்யா ராய், இப்போது இந்தியில் தயாராகவுள்ளசந்திரமுகியிலும் நடிக்க மறுத்துள்ளார்.படையப்பா படத்தில் ரம்யா கிருஷ்ணன் நடித்த நீலாம்பரி கேரக்டரில் ஐஸவர்யாவை நடிக்க வைக்க கடுமையாகமுயற்சித்தார் ரஜினி. ஆனால் கால்ஷீட் இல்லை என்று கூறி மறுத்து விட்டார் ஐஸ்.பின்னர் பாபாவிலும் முயன்று பார்த்து தோற்றார்.இதையடுத்து சிவாஜி பிலிம்ஸ் நிறுவனத் தயாரிப்பான சந்திரமுகியில், ஜோதிகா நடித்த கேரக்டருக்கு முதலில்ஐஸ்வர்யாவைத்தான் அணுகினார்கள். ஆனால் அப்போதும் கால்ஷீட் இல்லை என்று கூறி விட்டார் ஐஸ்வர்யா.இதையடுத்து சிம்ரனை புக் செய்தார்கள். ஆனால் அவரும் ஜகா வாங்கி விடவே கடைசியில் ஜோதிகா நடித்துலகலகவென்று கலக்கி விட்டார்.தனது முயற்சிகளில் சற்றும் தளராத நவீன விக்ரமாதித்தனாக, சிவாஜி படத்திலும் ஐஸ்வர்யாவை நடிக்க வைக்கரஜினி கடுமையாக முயற்சித்தார். இம்முறை, கூட ஷங்கரும் சேர்ந்து ஐஸ்வர்யாவுக்காக மெனக்கெட்டார். என்னஅதிசயம், இப்படத்திலும் நடிக்க முடியாது என்று கூறி விட்டார் ஐஸ்வர்யா.இப்போதும் கால்ஷீட் டைட் என்பதுதான் ஐஸ் கூறிய காரணம். ஆனால் மணிரத்தினத்தின் படத்திற்கு மட்டும்உடனடியாக கால்ஷீட் கொடுத்து விட்டார். அத்தோடு சென்னைக்கு வந்து காதலர் அபிஷேக்குடன் அடுத்தடுத்துஇரண்டு படங்களைப் பார்த்து தனது கால்ஷீட் படு டைட் என்பதையும் நிரூபித்தார்.இப்படியாக ரஜினியுடன் நடிக்காமல் ஜகா வாங்கிக் கொண்டே இருந்த ஐஸ்வர்யா, இப்போது இந்தியில்தயாராகவுள்ள சந்திரமுகியிலும் நடிக்க மறுத்து விட்டாராம்.சந்திரமுகியை இந்தியில் தயாரிக்கும் உரிமையை டி-சீரிஸ் ஆடியோ நிறுவனம் பெற்றுள்ளது. மலையாளஇயக்குனர் பிரியதர்ஷன்தான் இந்தி சந்திரகியை இயக்கப் போகிறார்.ரஜினி வேடத்தில் அமிதாப் பச்சனை நடிக்க வைக்கப் போவதாக முதலில் கூறப்பட்டது. ஆனால் இப்போதுநடிக்கப் போவது அக்ஷய் குமார். இவருக்கு இந்தி திரையுலகின் அருண்பாண்டியன் என்று பெயர் வைக்கலாம்.அந்த அளவுக்கு வசனத்தை போட்டு பிய்த்து திண்பார். அப்படியொரு உச்சரிப்பு வளம்.ஜோதிகா நடித்த கேரக்டருக்காக ஐஸ்வர்யா ராயை அணுகினார்கள். ஆனால் ஸாரி சொல்லி விட்டாராம் ஐஸ்.ஏன்தான் இப்படி ஓடி ஒளிகிறாரோ ஐஸ் தெரியவில்லை.பிரியதர்ஷன் தான் மலையாளத்தில் இயக்கிய, தயாரத்த படங்களையெல்லாம் இந்தியில் ரீமேக் செய்து கொண்டுகாலத்தை தள்ளி வந்தார், நன்றாக பணமும் பாார்த்துவிட்டார்.இப்போது பிறமொழி ரீமேக் படங்களையும் இந்தியில் செய்ய ஆரம்பித்துள்ளார். முதலில் அவர் இயக்கிய ரீமேக்படம் தமிழில் உருவான தேவர் மகன். இந்தியில் அணில் கபூரும், தபுவும் நடிக்க விராசத் என்ற பெயரில்இப்படம் உருவானது. இப்போது சந்திரமுகியை இந்தியில் இயக்கவுள்ளார் பிரியன்.இந்தியிலும் லகலக இடம்பெறுமா, தெரியவில்லை...

    By Staff
    |
    தமிழில் சந்திரமுகியில் நடிக்க மறுத்து விட்ட ஐஸ்வர்யா ராய், இப்போது இந்தியில் தயாராகவுள்ளசந்திரமுகியிலும் நடிக்க மறுத்துள்ளார்.

    படையப்பா படத்தில் ரம்யா கிருஷ்ணன் நடித்த நீலாம்பரி கேரக்டரில் ஐஸவர்யாவை நடிக்க வைக்க கடுமையாகமுயற்சித்தார் ரஜினி. ஆனால் கால்ஷீட் இல்லை என்று கூறி மறுத்து விட்டார் ஐஸ்.

    பின்னர் பாபாவிலும் முயன்று பார்த்து தோற்றார்.

    இதையடுத்து சிவாஜி பிலிம்ஸ் நிறுவனத் தயாரிப்பான சந்திரமுகியில், ஜோதிகா நடித்த கேரக்டருக்கு முதலில்ஐஸ்வர்யாவைத்தான் அணுகினார்கள். ஆனால் அப்போதும் கால்ஷீட் இல்லை என்று கூறி விட்டார் ஐஸ்வர்யா.இதையடுத்து சிம்ரனை புக் செய்தார்கள். ஆனால் அவரும் ஜகா வாங்கி விடவே கடைசியில் ஜோதிகா நடித்துலகலகவென்று கலக்கி விட்டார்.

    தனது முயற்சிகளில் சற்றும் தளராத நவீன விக்ரமாதித்தனாக, சிவாஜி படத்திலும் ஐஸ்வர்யாவை நடிக்க வைக்கரஜினி கடுமையாக முயற்சித்தார். இம்முறை, கூட ஷங்கரும் சேர்ந்து ஐஸ்வர்யாவுக்காக மெனக்கெட்டார். என்னஅதிசயம், இப்படத்திலும் நடிக்க முடியாது என்று கூறி விட்டார் ஐஸ்வர்யா.

    இப்போதும் கால்ஷீட் டைட் என்பதுதான் ஐஸ் கூறிய காரணம். ஆனால் மணிரத்தினத்தின் படத்திற்கு மட்டும்உடனடியாக கால்ஷீட் கொடுத்து விட்டார். அத்தோடு சென்னைக்கு வந்து காதலர் அபிஷேக்குடன் அடுத்தடுத்துஇரண்டு படங்களைப் பார்த்து தனது கால்ஷீட் படு டைட் என்பதையும் நிரூபித்தார்.

    இப்படியாக ரஜினியுடன் நடிக்காமல் ஜகா வாங்கிக் கொண்டே இருந்த ஐஸ்வர்யா, இப்போது இந்தியில்தயாராகவுள்ள சந்திரமுகியிலும் நடிக்க மறுத்து விட்டாராம்.

    சந்திரமுகியை இந்தியில் தயாரிக்கும் உரிமையை டி-சீரிஸ் ஆடியோ நிறுவனம் பெற்றுள்ளது. மலையாளஇயக்குனர் பிரியதர்ஷன்தான் இந்தி சந்திரகியை இயக்கப் போகிறார்.

    ரஜினி வேடத்தில் அமிதாப் பச்சனை நடிக்க வைக்கப் போவதாக முதலில் கூறப்பட்டது. ஆனால் இப்போதுநடிக்கப் போவது அக்ஷய் குமார். இவருக்கு இந்தி திரையுலகின் அருண்பாண்டியன் என்று பெயர் வைக்கலாம்.அந்த அளவுக்கு வசனத்தை போட்டு பிய்த்து திண்பார். அப்படியொரு உச்சரிப்பு வளம்.

    ஜோதிகா நடித்த கேரக்டருக்காக ஐஸ்வர்யா ராயை அணுகினார்கள். ஆனால் ஸாரி சொல்லி விட்டாராம் ஐஸ்.ஏன்தான் இப்படி ஓடி ஒளிகிறாரோ ஐஸ் தெரியவில்லை.

    பிரியதர்ஷன் தான் மலையாளத்தில் இயக்கிய, தயாரத்த படங்களையெல்லாம் இந்தியில் ரீமேக் செய்து கொண்டுகாலத்தை தள்ளி வந்தார், நன்றாக பணமும் பாார்த்துவிட்டார்.

    இப்போது பிறமொழி ரீமேக் படங்களையும் இந்தியில் செய்ய ஆரம்பித்துள்ளார். முதலில் அவர் இயக்கிய ரீமேக்படம் தமிழில் உருவான தேவர் மகன். இந்தியில் அணில் கபூரும், தபுவும் நடிக்க விராசத் என்ற பெயரில்இப்படம் உருவானது. இப்போது சந்திரமுகியை இந்தியில் இயக்கவுள்ளார் பிரியன்.

    இந்தியிலும் லகலக இடம்பெறுமா, தெரியவில்லை...

      உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
      Enable
      x
      Notification Settings X
      Time Settings
      Done
      Clear Notification X
      Do you want to clear all the notifications from your inbox?
      Settings X
      X