ஒரு நொடியில் பூஜா ஹெக்டே போல் மாறிய ஐஸ்வர்யா ராஜேஷ்.. அவரே வெளியிட்ட அசத்தல் வீடியோ!

சென்னை: நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் தற்போது டிரைவர் ஜமுனா, தீ கிரேட் இந்தியன் கிச்சன் படத்தில் நடித்து முடித்துள்ளார்.

டிரைவர் ஜமுனா படத்தின் cool dude பாடல் சமீபத்தில் வெளியாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

கின்ஸ்லி இயக்கத்தில் உருவாகி இருக்கும் டிரைவர் ஜமுனா படத்திற்கு இசையமைத்துள்ளார் ஜிப்ரான். சமீபத்தில் ஐஸ்வர்யா ராஜேஷ் வெளியிட்ட வீடியோ பார்த்த ரசிகர்கள் வர்ணித்து வருகின்றனர்.

கதைக்கு முக்கியத்துவம்

கதைக்கு முக்கியத்துவம்

எப்பொழுதும் கதைக்கும், தனது கதாபாத்திரத்துக்கும் முக்கியத்துவம் கொடுத்து நடித்து வரும் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ், தற்போது டிரைவர் ஜமுனா, தீ கிரேட் இந்தியன் கிச்சன் படங்களில் நடித்து முடித்துள்ளார். தற்போது இந்த படத்திற்கான போஸ்ட் ப்ரொடக்ஷன் பணிகள் நடந்து கொண்டு இருக்கின்றது.

ஹிட் படங்கள் அதிகம்

ஹிட் படங்கள் அதிகம்

ரம்மி ,பண்ணையாரும் பத்மினியும், காக்கா முட்டை, செக்கச் சிவந்த வானம், கனா, கா /பெ ரணசிங்கம் போன்ற படங்களில் நடித்ததன் மூலம் தனக்கென ஒரு தனி ரசிகர்கள் பட்டாளத்தையும் உருவாக்கி வைத்துள்ளார். தற்போது இவர் நடித்திருக்கும் டிரைவர் ஜமுனா மற்றும் தீ கிரேட் இந்தியன் கிச்சன் திரைப்படம் ஹீரோயினுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் கதாபாத்திரமாக அமைந்துள்ளது. டிரைவர் ஜமுனா படத்தில் டாக்ஸி டிரைவராக நடித்திருக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் பல சண்டைக் காட்சிகளிலும் நடித்துள்ளார்.

அதிகரிக்கும் எதிர்பார்ப்பு

அதிகரிக்கும் எதிர்பார்ப்பு

டிரைவர் ஜமுனா படத்தில் நரேன், கவிதா பாரதி போன்ற பலரும் நடித்துள்ளனர். இந்த படத்தின் டிரைலர் ஏற்கனவே வெளியாகிய நிலையில் சமீபத்தில் இப்படத்தின் கூல் டியூட் பாடல் வெளியாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இந்த படம் கிரைம் திரில்லர் படமாக உருவாகி இருப்பதும் குறிப்பிடத்தக்கது. ஐஸ்வர்யா ராஜேஷ் படங்களுக்கு எப்பொழுதும் அதிக ஆர்வம் இருந்து வரும் நிலையில் இப்படத்திற்கான எதிர்பார்ப்பும் கூடியுள்ளது.

வர்ணிக்கும் அழகு

வர்ணிக்கும் அழகு

சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருக்கக்கூடிய நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் சமீபத்தில் பாவாடை தாவணியில் வெளியிட்டுள்ள வீடியோ ஒன்று அனைவரையும் அசர வைத்துள்ளது, அதற்கு காரணம் அந்த பாவாடை தாவணி காஸ்டியூம் பூஜா ஹெட் அணிந்தது போல் இருப்பது தான். பாவாடை தாவணி அணிந்து, மல்லிகை பூ வைத்துக்கொண்டு, வளையல் போட்டு லட்சணமாக இருக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ், ட்ரெஸ்ஸிங் ஸ்டைல் பூஜா ஹெக்டேவை போல் இருப்பதை அவரே வெளியிட்டுள்ளார். இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் அவரது ரசிகர்களால் பகிரப்பட்டு வருகின்றது. இவரது அழகை ரசிகர்கள் வர்ணித்து கமெண்ட் செய்து வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X