ஐஸ்வர்யா ராய்க்கு 11-11-11-ல் பிரசவம்? - பல கோடி ரூபாய் பெட்டிங் ஆரம்பம்!!

By Shankar

Aishwarya Rai
நடிகை ஐஸ்வர்யா ராய் பிரசவத்தை வைத்து பல கோடி ரூபாய் பெட்டிங் ஆரம்பமாகியுள்ளது. ஏராளமான புக்கிகள் இந்த பெட்டிங்கில் ஈடுபட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

அபிஷேக்பச்சனை திருமணம் செய்த ஐஸ்வர்யா ராய் தற்போது 9 மாதம் கர்ப்பமாக உள்ளார். நேற்று மும்பையில் உள்ள வீட்டில் அவருக்கு ஆடம்பரமாக வளைகாப்பு விழா நடந்தது. இதில் அமிதாப்பச்சன், அபிஷேக்பச்சன், உறவினர்கள் மற்றும் பாலிவுட் நடிகைகள் பங்கேற்றனர்.

அப்பாவாகும் சந்தோஷத்தில் உள்ள அபிஷேக் பச்சன் இம்மாத இறுதிக்குள் படப்பிடிப்புகளை முடித்து விட தீவிரம் காட்டுகிறார். பிரசவத்தின் போதும், அதற்கடுத்த தினங்களிலும் ஐஸ்வர்யாராய் மற்றும் குழந்தையுடன் இருக்க திட்டமிட்டுள்ளார் அபிஷேக் பச்சன்.

இதற்கிடையே, ஐஸ்வர்யா ராய்க்கு நவம்பர் இரண்டாவது வாரத்தில் குழந்தைப் பிறக்கலாம் என டாக்டர்கள் தேதி குறித்துள்ளனர்.

நவம்பர் மாதம் 11-ம் தேதிக்குள் அவருக்கு டெலிவரி நடக்கலாம் என டாக்டர்கள் கூறியுள்ளனர். ஆனாலும் சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த தேதியாகக் கருதப்படும் 11-11-11 அன்று அவரது பிரசவம் நடக்க வேண்டும் என ஐஸ்வர்யா ராய் மற்றும் பச்சன் குடும்பம் விரும்புவதால், அதற்கேற்ப ஏற்பாடுகள் நடந்து வருகின்றன.

இருந்தாலும் குழந்தையின் பிரசவத் தேதி யார் கையிலும் இல்லை அல்லவா? அமிதாப்பச்சனின் மொத்த குடும்பமும் குழந்தையை ஆவலோடு எதிர்பார்த்து காத்திருக்கிறது. அவருக்குப் பெண் குழந்தைதான் பிறக்கும் என சில ஜோசியர்கள் கணிப்பு வெளியிட்டுள்ளனர். மேலும் இந்தப் பிரசவம் 11-ம் தேதிதான் நடக்கும் என இந்த ஜோசியர்களும் கூறியுள்ளனர்.

பல கோடி பெட்டிங் ஆரம்பம்...

இந்த நிலையில், ஐஸ்வர்யா ராய்க்கு 11-11-11ல் பிரசவம் நடக்குமா நடக்காதா என்று பெரிய பெட்டிங்கே ஆரம்பித்துள்ளது மும்பையில். இதில் ஏராளமான புக்கிகள் ஈடுபட்டுள்ளனர்.

அதுமட்டுமல்ல, இந்த பெட்டிங்கில் பல கோடி ரூபாய் பணத்தையும் கட்டி வருகின்றனர் மக்கள். ஐஸ்வர்யா ராய்க்கு 11-11-11 தேதியிலேயே பிரசவம் நடக்க வேண்டும் என்றும் இவர்கள் பிரார்த்தனை செய்து வருகிறார்களாம்.

காரணம், "எங்களுக்கு பெட்டிங்கில் பணம் வரும் என்பது மட்டுமல்ல, ஐஸ்வர்யா ராய் என்ற உலக அழகிக்குப் பிறக்கும் குழந்தை ஒரு சிறப்பான நாளில் பிறந்தால் நல்லதுதானே," என்றார் இந்த பெட்டிங்கில் பணம் கட்டியுள்ள ஒரு நபர்.

நடிகை ஒருவரின் பிரசவத்துக்காக பெட்டிங் நடப்பது இந்தியாவில் இதுவே முதல்முறை.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X