»   »  திரிஷாவுக்கு புது 'அம்மா'

திரிஷாவுக்கு புது 'அம்மா'

Posted By:
Subscribe to Oneindia Tamil
Click here for more images
பிரகாஷ் ராஜ் தயாரிப்பில் உருவாகும் அபியும் நானும் படத்தில் திரிஷாவுக்கு அம்மாவாக நடிக்க குஷ்பு, மலையாள நடிகை லட்சுமி கோபாலசாமி ஆகிய இருவரும் மறுத்து விட்டனர். இதனால் லட்சுமியின் மகள் ஐஸ்வர்யாவை அம்மா ஆக்கி விட்டனராம்.

மோசர் பெயர் நிறுவனத்துடன் இணைந்து பிரகாஷ் ராஜின் டூயட் மூவிஸ் நான்கு படங்களைத் தயாரிக்கிறது. அதில் ஒன்றுதான் அபியும், நானும். திரிஷாதான் நாயகியாக நடிக்கிறார். புதுமுகங்கள் படத்தில் நிறைய இடம் பிடித்துள்ளனர். பிரகாஷ் ராஜ், திரிஷாவின் அப்பா வேடத்தில் நடிக்கிறார்.

திரிஷாவின் அம்மாவ வேடத்தில் யாரைப் போடுவது என பலரையும் யோசித்தனர். சிலரை அணுகினர். அவர்களில் குஷ்புவும் ஒருவர். ஆனால் குஷ்பு நடிக்க மறுத்து விட்டார்.

இதையடுத்து மலையாளத்திலும், தமிழிலும் சில படங்களில் நடித்துள்ள, சில டி.வி. தொடர்களில் தலை காட்டியுள்ள லட்சுமி கோபாலசாமியை அம்மாவாக நடிக்க அணுகினர், அவரும் சம்மதித்தார்.

ஆனால் திடீரென படத்திலிருந்து விலகுவதாக கூறி விட்டாராம் லட்சுமி கோபாலசாமி. என்ன காரணம் என்று தெரியவில்லை. இதையடுத்து புதிய அம்மாவைத் தேடினர். இந்த நிலையில்தான் நடிகை லட்சுமியின் மகளும், இப்போது அம்மா, வில்லி வேடங்களில் நடித்து வருபவருமான நடிகை ஐஸ்வர்யாவை போடலாம் என நினைத்து அணுகினர். அவர் எந்த ஆட்சேபனையும் சொல்லாமல் ஓ.கே. சொல்லி விட்டாராம்.

திரிஷாவுக்குப் புது அம்மா கிடைத்த சந்தோஷத்தில் படப்பிடிப்பை விறுவிறுப்பாக தொடங்கி பிக்கப் ஆகி போய்க் கொண்டிருக்கின்றனராம்.

Read more about: trisha

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil