»   »  மீண்டும் மணிரத்னம்- ஐஸ்வர்யா ஆயுத எழுத்து அதன் இந்திப் பதிப்பு யுவா ஆகியவற்றின் பிரமாண்ட தோல்வியையடுத்து அமைதியாக இருந்த மணி ரத்னம்மீண்டும் இந்தியில் ஒரு படம் எடுக்கப் போகிறார்.அதில் நடிக்கப் போவது ஐஸ்வர்யா ராய். தனது இருவர் படத்தின் மூலம் ஐஸ்வர்யாவை சினிமாவுக்குக் கூட்டி வந்தவர்மணிரத்னம் தான். பின்னர் பாலிவுட்டின் நம்பர் ஒன் ஆகிவிட்ட ஐஸ், மீண்டும் மணியின் இயக்கத்தில் நடிப்பது இதுவேமுதன்முறை.மணியின் இந்த ப்ராஜெக்டில் ஹீரோவாக நடிக்கப் போது அபிஷேக் பச்சன். வழக்கம் போல் படத்தின் கதை, திரைக்கதை எழுதி,இயக்கவுள்ள மணிரத்னம் படத்தை தயாரிக்கவும் போகிறார். சூட்டிங் முழுக்கவும் மும்பையில் நடக்கப் போகிறதாம்.ஐஸ்வர்யா ராய்க்கு இந்தப் புத்தாண்டு மிகக் கலக்கலாகவே துவங்கியுள்ளது. இவர் நடித்த 3 ஆங்கில (ஹாலிவுட்) படங்களும்இந்த ஆண்டு வரிசை கட்டி வெளியாகப் போகின்றன.முதன் முதலில் குரீந்தர் சத்தாசின் பிரைட் அண்டு பிரி ஜூடிஸ் என்ற ஆங்கிலப் படத்தில் நடித்து ஹாலிவுட்டிலும் தனது காலைப்பதித்தார் ராய். அதற்குக் கிடைத்த வரவேற்பால் அடுத்தடுத்து ஹாலிவுட் படங்களில் நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டார்.ஜேம்ஸ் பாண்ட்டின் காதலியாகவும் ஒரு படத்தில் நடிக்க ஆபர் வந்தது.இந் நிலையில் இந்த ஆண்டு ஐஸ்வர்யா நடித்த தி லாஸ்ட் லெஜின், ப்ரோவோக்ட், மிஸ்ட்ரெஸ் ஆப் ஸ்பைஸ் ஆகிய 3ஹாலிவுட் படங்கள் வெளியாகவுள்ளன.த லாஸ்ட் லெஜின் படம் டுனீசியா, ஸ்லோவாக்கியாவில் எடுக்கப்பட்டுள்ளது. ரோம கால வரலாற்றுக் காதல் கதை இது. இதில்மிரா என்ற ரோமானியப் பெண்ணாக ஐஸ் நடித்துள்ளார். மற்ற இரண்டு ஆங்கிலப் படங்களிலுமே ஐஸ்வர்யாவுக்கு இந்தியப்பெண் வேடம் தான்.இந்தப் படங்கள் வெற்றி பெற்றால் இந்தியில் கடையை சாத்திவிட்டு ஒரேயடியாக ஹாலிவுட் பக்கமே ஐஸ்வர்யா கிளம்பிவிடுவார் என்கிறார்கள்.இதில் தி லாஸ்ட் லெஜின் படத்தின் இந்திய வினியோக உரிமையையும் ஐஸ்வர்யா பெற்றுள்ளார். இதன் மூலம் ஐஸ்வர்யாராய்சினிமா வினியோகத் துறையிலும் கால் பதித்துள்ளார்.

மீண்டும் மணிரத்னம்- ஐஸ்வர்யா ஆயுத எழுத்து அதன் இந்திப் பதிப்பு யுவா ஆகியவற்றின் பிரமாண்ட தோல்வியையடுத்து அமைதியாக இருந்த மணி ரத்னம்மீண்டும் இந்தியில் ஒரு படம் எடுக்கப் போகிறார்.அதில் நடிக்கப் போவது ஐஸ்வர்யா ராய். தனது இருவர் படத்தின் மூலம் ஐஸ்வர்யாவை சினிமாவுக்குக் கூட்டி வந்தவர்மணிரத்னம் தான். பின்னர் பாலிவுட்டின் நம்பர் ஒன் ஆகிவிட்ட ஐஸ், மீண்டும் மணியின் இயக்கத்தில் நடிப்பது இதுவேமுதன்முறை.மணியின் இந்த ப்ராஜெக்டில் ஹீரோவாக நடிக்கப் போது அபிஷேக் பச்சன். வழக்கம் போல் படத்தின் கதை, திரைக்கதை எழுதி,இயக்கவுள்ள மணிரத்னம் படத்தை தயாரிக்கவும் போகிறார். சூட்டிங் முழுக்கவும் மும்பையில் நடக்கப் போகிறதாம்.ஐஸ்வர்யா ராய்க்கு இந்தப் புத்தாண்டு மிகக் கலக்கலாகவே துவங்கியுள்ளது. இவர் நடித்த 3 ஆங்கில (ஹாலிவுட்) படங்களும்இந்த ஆண்டு வரிசை கட்டி வெளியாகப் போகின்றன.முதன் முதலில் குரீந்தர் சத்தாசின் பிரைட் அண்டு பிரி ஜூடிஸ் என்ற ஆங்கிலப் படத்தில் நடித்து ஹாலிவுட்டிலும் தனது காலைப்பதித்தார் ராய். அதற்குக் கிடைத்த வரவேற்பால் அடுத்தடுத்து ஹாலிவுட் படங்களில் நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டார்.ஜேம்ஸ் பாண்ட்டின் காதலியாகவும் ஒரு படத்தில் நடிக்க ஆபர் வந்தது.இந் நிலையில் இந்த ஆண்டு ஐஸ்வர்யா நடித்த தி லாஸ்ட் லெஜின், ப்ரோவோக்ட், மிஸ்ட்ரெஸ் ஆப் ஸ்பைஸ் ஆகிய 3ஹாலிவுட் படங்கள் வெளியாகவுள்ளன.த லாஸ்ட் லெஜின் படம் டுனீசியா, ஸ்லோவாக்கியாவில் எடுக்கப்பட்டுள்ளது. ரோம கால வரலாற்றுக் காதல் கதை இது. இதில்மிரா என்ற ரோமானியப் பெண்ணாக ஐஸ் நடித்துள்ளார். மற்ற இரண்டு ஆங்கிலப் படங்களிலுமே ஐஸ்வர்யாவுக்கு இந்தியப்பெண் வேடம் தான்.இந்தப் படங்கள் வெற்றி பெற்றால் இந்தியில் கடையை சாத்திவிட்டு ஒரேயடியாக ஹாலிவுட் பக்கமே ஐஸ்வர்யா கிளம்பிவிடுவார் என்கிறார்கள்.இதில் தி லாஸ்ட் லெஜின் படத்தின் இந்திய வினியோக உரிமையையும் ஐஸ்வர்யா பெற்றுள்ளார். இதன் மூலம் ஐஸ்வர்யாராய்சினிமா வினியோகத் துறையிலும் கால் பதித்துள்ளார்.

Subscribe to Oneindia Tamil

ஆயுத எழுத்து அதன் இந்திப் பதிப்பு யுவா ஆகியவற்றின் பிரமாண்ட தோல்வியையடுத்து அமைதியாக இருந்த மணி ரத்னம்மீண்டும் இந்தியில் ஒரு படம் எடுக்கப் போகிறார்.

அதில் நடிக்கப் போவது ஐஸ்வர்யா ராய். தனது இருவர் படத்தின் மூலம் ஐஸ்வர்யாவை சினிமாவுக்குக் கூட்டி வந்தவர்மணிரத்னம் தான். பின்னர் பாலிவுட்டின் நம்பர் ஒன் ஆகிவிட்ட ஐஸ், மீண்டும் மணியின் இயக்கத்தில் நடிப்பது இதுவேமுதன்முறை.

மணியின் இந்த ப்ராஜெக்டில் ஹீரோவாக நடிக்கப் போது அபிஷேக் பச்சன். வழக்கம் போல் படத்தின் கதை, திரைக்கதை எழுதி,இயக்கவுள்ள மணிரத்னம் படத்தை தயாரிக்கவும் போகிறார். சூட்டிங் முழுக்கவும் மும்பையில் நடக்கப் போகிறதாம்.


ஐஸ்வர்யா ராய்க்கு இந்தப் புத்தாண்டு மிகக் கலக்கலாகவே துவங்கியுள்ளது. இவர் நடித்த 3 ஆங்கில (ஹாலிவுட்) படங்களும்இந்த ஆண்டு வரிசை கட்டி வெளியாகப் போகின்றன.

முதன் முதலில் குரீந்தர் சத்தாசின் பிரைட் அண்டு பிரி ஜூடிஸ் என்ற ஆங்கிலப் படத்தில் நடித்து ஹாலிவுட்டிலும் தனது காலைப்பதித்தார் ராய். அதற்குக் கிடைத்த வரவேற்பால் அடுத்தடுத்து ஹாலிவுட் படங்களில் நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டார்.

ஜேம்ஸ் பாண்ட்டின் காதலியாகவும் ஒரு படத்தில் நடிக்க ஆபர் வந்தது.


இந் நிலையில் இந்த ஆண்டு ஐஸ்வர்யா நடித்த தி லாஸ்ட் லெஜின், ப்ரோவோக்ட், மிஸ்ட்ரெஸ் ஆப் ஸ்பைஸ் ஆகிய 3ஹாலிவுட் படங்கள் வெளியாகவுள்ளன.

த லாஸ்ட் லெஜின் படம் டுனீசியா, ஸ்லோவாக்கியாவில் எடுக்கப்பட்டுள்ளது. ரோம கால வரலாற்றுக் காதல் கதை இது. இதில்மிரா என்ற ரோமானியப் பெண்ணாக ஐஸ் நடித்துள்ளார். மற்ற இரண்டு ஆங்கிலப் படங்களிலுமே ஐஸ்வர்யாவுக்கு இந்தியப்பெண் வேடம் தான்.

இந்தப் படங்கள் வெற்றி பெற்றால் இந்தியில் கடையை சாத்திவிட்டு ஒரேயடியாக ஹாலிவுட் பக்கமே ஐஸ்வர்யா கிளம்பிவிடுவார் என்கிறார்கள்.

இதில் தி லாஸ்ட் லெஜின் படத்தின் இந்திய வினியோக உரிமையையும் ஐஸ்வர்யா பெற்றுள்ளார். இதன் மூலம் ஐஸ்வர்யாராய்சினிமா வினியோகத் துறையிலும் கால் பதித்துள்ளார்.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil