»   »  மணிரத்தினம் படத்தில் ஐஸ்! ரஜினி படத்திற்கு டேக்கா கொடுத்து வரும் ஐஸ்வர்யா ராய், இப்போது மணிரத்தினத்தின் புதிய இந்திப் படத்தில் நடிக்க கால்ஷீட்கொடுத்துள்ளார். உலக அழகியாக தேர்ந்தெடுக்கப்பட்ட பின்னர் திரைத் துறையில் நுழைந்தார் ஐஸ்வர்யா. அவரது முதல் திரைப்படம் தமிழில்தயாரான ஜீன்ஸ். இப்படத்திற்குப் பின்னர் இருவர், கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன் ஆகிய மேலும் இரு தமிழ்ப்படங்களில் ஐஸ்வர்யா நடித்தார். அதன் பிறகு அவர் இந்தியில் பிசியான நடிகையாகி விட்டார். இந்திக்குப் போன பிறகு அறிமுகப்படுத்திய தமிழை அவர் மறந்துவிட்டார். ரஜினியின் சந்திரமுகி படத்தில் ஜோதிகா நடித்த கேர்டருக்காக ஐஸ்வர்யாவை தீவிரமாக முயற்சித்து வந்தார்கள்.ஆனால் கால்ஷீட் இல்லை என்று கை விரித்து விட்டார் ஐஸ். இப்போது சிவாஜி படத்திற்கும் கூட ஐஸ்வர்யாவை கேட்டு வருகிறார்கள். இதுவரை அவர் ஒத்துக் கொண்டதாகத்தெரியவில்லை. இருப்பினும் கடைசி நேரத்தில் ஐஸ்வர்யா அப்படத்தில் நடிக்கக் கூடும் என்ற எதிர்பார்ப்பு இருக்கிறது. இந்த நிலையில் மணிரத்தினத்தின் அடுத்த இந்திப் படத்தில் ஐஸ்வர்யா நடிக்கவுள்ளார். நீண்ட இடைவெளிக்குப் பிறகுமணிரத்தினத்தின் படத்தில் நடிக்கவுள்ளார் ஐஸ்வர்யா. இப்படத்திற்கு குரு என்று பெயர் வைத்துள்ளார் மணிரத்தினம். இதில் அபிஷேக் பச்சன் ஜோடியாக ஐஸ்வர்யா நடிக்கவுள்ளார்.மணிரத்தினம் சமீபத்தில் இந்தியில் தயாரித்த யுவா படத்தில் மூன்று ஹீரோக்களில் ஒருவராக அபிஷேக் பச்சன் நடித்திருந்ததுநினைவிருக்கலாம். குரு படத்தின் ஒளிப்பதிவாளராக ராஜீவ் மேனன் பணியாற்றவுள்ளார். கடைசியாக அவர் பாம்பே படத்திற்கு பணியாற்றினார்.கிட்டத்தட்ட 10 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் மணியுடன் சேருகிறார். ஏ.ஆர். ரஹ்மான் இசையமைக்கிறார். முன்னதாக அமீர்கானை வைத்து மணிரத்தினம் ஒரு படத்தை இயக்கப் போவதாக கூறப்பட்டது. ஆனால் தற்போது அந்தத்திட்டத்தை ஒத்தி வைத்திருக்கிறார் மணி. அதற்குப் பதிலாக குரு படத்தை இயக்கப் போகிறார். இதை முடித்து விட்டேஅமீர்கான் படத்தை இயக்கப் போகிறாராம். ஷங்கரால் சாதிக்க முடியாததை இந்தி வழியாக சாதித்து விட்டார் மணிரத்தினம்.

மணிரத்தினம் படத்தில் ஐஸ்! ரஜினி படத்திற்கு டேக்கா கொடுத்து வரும் ஐஸ்வர்யா ராய், இப்போது மணிரத்தினத்தின் புதிய இந்திப் படத்தில் நடிக்க கால்ஷீட்கொடுத்துள்ளார். உலக அழகியாக தேர்ந்தெடுக்கப்பட்ட பின்னர் திரைத் துறையில் நுழைந்தார் ஐஸ்வர்யா. அவரது முதல் திரைப்படம் தமிழில்தயாரான ஜீன்ஸ். இப்படத்திற்குப் பின்னர் இருவர், கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன் ஆகிய மேலும் இரு தமிழ்ப்படங்களில் ஐஸ்வர்யா நடித்தார். அதன் பிறகு அவர் இந்தியில் பிசியான நடிகையாகி விட்டார். இந்திக்குப் போன பிறகு அறிமுகப்படுத்திய தமிழை அவர் மறந்துவிட்டார். ரஜினியின் சந்திரமுகி படத்தில் ஜோதிகா நடித்த கேர்டருக்காக ஐஸ்வர்யாவை தீவிரமாக முயற்சித்து வந்தார்கள்.ஆனால் கால்ஷீட் இல்லை என்று கை விரித்து விட்டார் ஐஸ். இப்போது சிவாஜி படத்திற்கும் கூட ஐஸ்வர்யாவை கேட்டு வருகிறார்கள். இதுவரை அவர் ஒத்துக் கொண்டதாகத்தெரியவில்லை. இருப்பினும் கடைசி நேரத்தில் ஐஸ்வர்யா அப்படத்தில் நடிக்கக் கூடும் என்ற எதிர்பார்ப்பு இருக்கிறது. இந்த நிலையில் மணிரத்தினத்தின் அடுத்த இந்திப் படத்தில் ஐஸ்வர்யா நடிக்கவுள்ளார். நீண்ட இடைவெளிக்குப் பிறகுமணிரத்தினத்தின் படத்தில் நடிக்கவுள்ளார் ஐஸ்வர்யா. இப்படத்திற்கு குரு என்று பெயர் வைத்துள்ளார் மணிரத்தினம். இதில் அபிஷேக் பச்சன் ஜோடியாக ஐஸ்வர்யா நடிக்கவுள்ளார்.மணிரத்தினம் சமீபத்தில் இந்தியில் தயாரித்த யுவா படத்தில் மூன்று ஹீரோக்களில் ஒருவராக அபிஷேக் பச்சன் நடித்திருந்ததுநினைவிருக்கலாம். குரு படத்தின் ஒளிப்பதிவாளராக ராஜீவ் மேனன் பணியாற்றவுள்ளார். கடைசியாக அவர் பாம்பே படத்திற்கு பணியாற்றினார்.கிட்டத்தட்ட 10 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் மணியுடன் சேருகிறார். ஏ.ஆர். ரஹ்மான் இசையமைக்கிறார். முன்னதாக அமீர்கானை வைத்து மணிரத்தினம் ஒரு படத்தை இயக்கப் போவதாக கூறப்பட்டது. ஆனால் தற்போது அந்தத்திட்டத்தை ஒத்தி வைத்திருக்கிறார் மணி. அதற்குப் பதிலாக குரு படத்தை இயக்கப் போகிறார். இதை முடித்து விட்டேஅமீர்கான் படத்தை இயக்கப் போகிறாராம். ஷங்கரால் சாதிக்க முடியாததை இந்தி வழியாக சாதித்து விட்டார் மணிரத்தினம்.

Subscribe to Oneindia Tamil

ரஜினி படத்திற்கு டேக்கா கொடுத்து வரும் ஐஸ்வர்யா ராய், இப்போது மணிரத்தினத்தின் புதிய இந்திப் படத்தில் நடிக்க கால்ஷீட்கொடுத்துள்ளார்.

உலக அழகியாக தேர்ந்தெடுக்கப்பட்ட பின்னர் திரைத் துறையில் நுழைந்தார் ஐஸ்வர்யா. அவரது முதல் திரைப்படம் தமிழில்தயாரான ஜீன்ஸ். இப்படத்திற்குப் பின்னர் இருவர், கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன் ஆகிய மேலும் இரு தமிழ்ப்படங்களில் ஐஸ்வர்யா நடித்தார்.

அதன் பிறகு அவர் இந்தியில் பிசியான நடிகையாகி விட்டார். இந்திக்குப் போன பிறகு அறிமுகப்படுத்திய தமிழை அவர் மறந்துவிட்டார். ரஜினியின் சந்திரமுகி படத்தில் ஜோதிகா நடித்த கேர்டருக்காக ஐஸ்வர்யாவை தீவிரமாக முயற்சித்து வந்தார்கள்.ஆனால் கால்ஷீட் இல்லை என்று கை விரித்து விட்டார் ஐஸ்.


இப்போது சிவாஜி படத்திற்கும் கூட ஐஸ்வர்யாவை கேட்டு வருகிறார்கள். இதுவரை அவர் ஒத்துக் கொண்டதாகத்தெரியவில்லை. இருப்பினும் கடைசி நேரத்தில் ஐஸ்வர்யா அப்படத்தில் நடிக்கக் கூடும் என்ற எதிர்பார்ப்பு இருக்கிறது.

இந்த நிலையில் மணிரத்தினத்தின் அடுத்த இந்திப் படத்தில் ஐஸ்வர்யா நடிக்கவுள்ளார். நீண்ட இடைவெளிக்குப் பிறகுமணிரத்தினத்தின் படத்தில் நடிக்கவுள்ளார் ஐஸ்வர்யா.

இப்படத்திற்கு குரு என்று பெயர் வைத்துள்ளார் மணிரத்தினம். இதில் அபிஷேக் பச்சன் ஜோடியாக ஐஸ்வர்யா நடிக்கவுள்ளார்.மணிரத்தினம் சமீபத்தில் இந்தியில் தயாரித்த யுவா படத்தில் மூன்று ஹீரோக்களில் ஒருவராக அபிஷேக் பச்சன் நடித்திருந்ததுநினைவிருக்கலாம்.


குரு படத்தின் ஒளிப்பதிவாளராக ராஜீவ் மேனன் பணியாற்றவுள்ளார். கடைசியாக அவர் பாம்பே படத்திற்கு பணியாற்றினார்.கிட்டத்தட்ட 10 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் மணியுடன் சேருகிறார். ஏ.ஆர். ரஹ்மான் இசையமைக்கிறார்.

முன்னதாக அமீர்கானை வைத்து மணிரத்தினம் ஒரு படத்தை இயக்கப் போவதாக கூறப்பட்டது. ஆனால் தற்போது அந்தத்திட்டத்தை ஒத்தி வைத்திருக்கிறார் மணி. அதற்குப் பதிலாக குரு படத்தை இயக்கப் போகிறார். இதை முடித்து விட்டேஅமீர்கான் படத்தை இயக்கப் போகிறாராம்.

ஷங்கரால் சாதிக்க முடியாததை இந்தி வழியாக சாதித்து விட்டார் மணிரத்தினம்.

Please Wait while comments are loading...

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil