»   »  ஐஸ் கிஸ்.. கட் செய்த பிக் பி!

ஐஸ் கிஸ்.. கட் செய்த பிக் பி!

Subscribe to Oneindia Tamil

தூம் 2 படத்தில் இடம் பெற்றிருந்த ஹ்ருத்திக் ரோஷன், ஐஸ்வர்யா ராய் லிப் லாக் முத்தக் காட்சியை அமிதாப்பச்சன் வேண்டுகோளின் பேரில் நீக்கி விட்டார்களாம்.

ஐஸ்வர்யா, அபிஷேக் பச்சன் கல்யாணத்தை முடிவு செய்து விட்டார்கள். கல்யாணத்தை நிச்சயித்த கையோடுஅமிதாப் பச்சன் ஒரு முக்கியமான வேலையை செய்துள்ளார்.

அபிஷேக், ஐஸ், ஹ்ருத்திக் ரோஷன், பிபாசா நடித்த தூம் 2 படத்தில், ஐஸும், ரோஷனும் கொடுத்துக் கொண்டலிப் லாக் காட்சி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. ஆனால் அமிதாப் குடும்பத்துக்கு இது பெரும் சங்கடத்தைக்கொடுத்து விட்டதாம்.

இந்த முத்தக் காட்சியில் ஐஸும், ரோஷனும் படு ஆழமாக முத்தமிட்டு கொண்டுள்ளனர். இந்தக் காட்சியில்நடிப்பது குறித்து அபிஷேக்கிடம் கூட ஐஸ் தெரிவிக்கவில்லையாம்.

இந்தக் காட்சி அமிதாப் குடும்பத்துக்கு பெரும் அதிருப்தியைக் கொடுத்து விட்டது. நமது வீட்டு மருமகளாக வரப்போகிற ஐஸ் இப்படி ஒரு காட்சியில் நடித்து, அதை மற்றவர்கள் ரசிப்பதா என்று கடுப்பாகி தூம் 2தயா>ப்பாளர்களை அணுகி, தயவு செய்து இந்தக் காட்சியை படத்திலிருந்து நீக்க வேண்டும் என்று கோ>யுள்ளனர்.

தயாரிப்பாளர்களும் அமிதாப் கோரிக்கைக்கு மதிப்பு கொடுத்து படத்திலிருந்து அந்த கிஸ்ஸிங் காட்சியை தூக்கிவிட்டார்களாம்.

ஆனால் இது படத்தின் இயக்குனர் சஞ்சய் காத்விக்கு அதிருப்தியைக் கொடுத்துள்ளதாம். கிஸ்ஸிங் காட்சியைநீக்குவது குறித்து தன்னிடம் ஆலோசிக்கவில்லை என்பது அவரது கோபம். இருந்தாலும் ஒன்றும் சொல்லமுடியாமல் காத்வி அமைதியாகி விட்டார்.

எனவே, ஐஸ், ரோஷனின் ஆழமான மூத்தக் காட்சியைக் காணும் பாக்கியம் ரசிகர்களுக்குக் கிடைக்காமல் போய்விட்டது.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil