»   »  ஸ்பெஷல்ஸ்

ஸ்பெஷல்ஸ்

Posted By:
Subscribe to Oneindia Tamil

அல்டிமேட் ஸ்டார் அஜீத், சென்னை கொட்டிவாக்கத்தில் அட்டகாசமான பங்களா ஒன்றைக் கட்டி வருகிறார். இதைமுன்பே கூறியிருந்தோம். அதில் ஒரு சின்ன அப்டேட்.

கடற்கரையோரம் எழும்பி வரும் இந்த வீட்டில் சகல வசதிகளும் இருக்கும் விதமாக பார்த்து பார்த்துக் கட்டிவருகிறார்கள் அஜீத்தும், ஷாலினியும்.

ஒரு வீட்டில் என்ன இருக்க வேண்டுமோ அதைத் தவிர வேறு ஒரு விசேஷம் இருக்கிறதாம். தானும், தனதுகுடும்பத்தினரும் படங்கள் பார்ப்பதற்கு வசதியாக சின்னதாக ஒரு தியேட்டரையும் கட்டி வருகிறாராம் அஜீத்.

தியேட்டருக்குத் தேவையான அனைத்து சாதனங்களும் வெளிநாட்டிலிருந்து இறக்குமதியாகியுள்ளதாம்.

இது இன்னொரு பங்களா:

பங்களா குறித்து இன்னொறு செய்தி.

பங்களா என்ற திகில் பிளஸ் ஜில் ஜில் படம் ஒன்று எடுக்கப்பட்டு வருகிறது.

இதில் அலெக்ஸும் ஷர்மிலியும் சேர்ந்து கவர்ச்சிக் களியாட்டம் நடத்தியிருக்கிறார்களாம்.

ஷூட்டிங் நடந்தபோது ஸ்பாட்டில் இருந்தவர்கள் பரவசப்பட்டு, பரவசப்பட்டு சோர்வடைந்து விட்டார்கள் என்றால்பார்த்துக் கொள்ளுங்களேன்.

மோணல் தோத்தா, ஜோதி:

தனக்கு மார்க்கெட் கொஞ்சம் போல டவுன் ஆகியதால் தங்கை மோணலைகளமிறக்கினார் சிம்ரன். ஆனால் மோணல் கோணலாகி விட்டதால், சற்றும் மனம் தளராத சிம்ரன் தனது இன்னொருதங்கையான ஜோதியை திரையுலகைக் கலக்கக் கொண்டு வருகிறார்.

ஜோதியின் பளபளா படங்களை பி.ஆர்.ஓக்களிடம் கொடுத்து திரையுலகில் வலம் வரச் செய்திருக்கிறாராம். ஜோதிஒளிர்வாரா?

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil