twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    என் உழைப்பை பார்த்து அஜித் தான் என்னை முதலில் இயக்குநராக ஏற்று கொண்டார்.. எஸ்.ஜே. சூர்யா நெகிழ்ச்சி!

    |

    சென்னை: 1995 ஆம் ஆண்டு அஜித்குமார் நடிப்பில் வெளியான திரைப்படம் தான் ஆசை. இப்படத்தில் சுவலட்சுமி இவருக்கு ஜோடியாக நடித்திருப்பார்.

    ஆசை படத்தை எழுதி இயக்கியவர் வசந்த். இப்படத்தின் உதவி இயக்குனராக வேலை செய்தவர் எஸ் ஜே சூர்யா.

    தனக்கு இயக்குநர் ஆகும் வாய்ப்பை அஜித் கொடுத்ததை பற்றியும், ஆசை படத்தை பற்றியும் சுவாரஸ்யமான தகவல்களை பகிர்ந்துள்ளார் இயக்குநர் எஸ் ஜே சூர்யா.

    விக்ரம்..வெளியானது பத்தல பத்தல..அட இதிலயும் இல்லை ஒன்றியத்தின் தப்பாலே..கரெக்டாய் கட் செய்த படக்குழு விக்ரம்..வெளியானது பத்தல பத்தல..அட இதிலயும் இல்லை ஒன்றியத்தின் தப்பாலே..கரெக்டாய் கட் செய்த படக்குழு

    பல ஹிட் கொடுத்த அஜித்

    பல ஹிட் கொடுத்த அஜித்

    அமராவதி படத்தின் மூலம் அறிமுகமானவர் நடிகர் அஜித்குமார். ஆசை படத்தின் மூலம் ஒட்டுமொத்த ரசிகர்களையும் திரும்பி பார்க்க வைத்தார். இயக்குநர் வசந்த் எழுதி, இயக்கிய இந்த திரைப்படத்தில் சுவலட்சுமி அஜித்துக்கு ஜோடியாக நடித்திருப்பார். இப்படத்தில் பிரகாஷ் ராஜ், ரோகினி, பூர்ணம் விஸ்வநாதன், நிழல்கள் ரவி போன்ற பலரும் நடித்திருந்தனர். அஜித்தின் சினிமா வாழ்க்கையில் இந்த படம் ஒரு மறக்க முடியாத படமாக அமைந்தது.

    உதவி இயக்குநர்

    உதவி இயக்குநர்

    ஆசை திரைப்பட வெற்றிக்கு பிறகு இவருக்கு வான்மதி, கல்லூரி வாசல், மைனர் மாப்பிள்ளை, காதல் கோட்டை போன்ற பல ஹிட் படங்களை கொடுக்கும் வாய்ப்பும் கிடைத்தது. ஆசை படத்தில் உதவி இயக்குனராக வேலை செய்து வந்தார் எஸ் ஜே சூர்யா. எஸ் ஜே சூர்யா வேலை செய்வதை பார்த்த அஜித்குமார், தான் பெரிய நடிகராக வளர்ந்தவுடன் கண்டிப்பாக இவருக்கு ஒரு வாய்ப்பு கொடுக்க வேண்டும் என்ற எண்ணம் அவர் மனதில் இருந்திருப்பது போல, எஸ் ஜே சூர்யா இயக்குனராக அறிமுகமான வாலி படத்தில் அஜித் ஹீரோவாக நடித்தார். அஜித் டூயல் ரோலில் நடித்த இந்த படம் மிகப்பெரிய பிளாக்பஸ்டர் படமாக அமைந்தது.

    வாலி எஸ் ஜே சூர்யா, அஜித் காம்போ

    வாலி எஸ் ஜே சூர்யா, அஜித் காம்போ

    எஸ் ஜே சூர்யாவுக்கு மட்டுமல்லாமல் அஜித்துக்கும் வாலி படம் நல்ல பெயரை பெற்று தந்தது. அதன் பிறகு இயக்குனர் எஸ் ஜே சூர்யா குஷி, நியூ அன்பே ஆருயிரே போன்ற பல படங்களை இயக்கினார். தான் இயக்கிய படங்களில் சிறிய கதாபாத்திலும் நடித்து வந்த எஸ் ஜே சூர்யா. பிறகு நியூ படத்தில் ஹீரோவாக அறிமுகமானார். அன்பே ஆருயிரே, கள்வனின் காதலி, வியாபாரி, நியூட்டனின் மூன்றாம் விதி, நண்பன், இசை, இறைவி போன்ற பல படங்களில் நடித்திருந்தார். ஸ்பைடர், மெர்சல் படங்களில் வில்லன் கதாபாத்திரத்தில் நடித்த மிரட்டினார். ஹீரோவாக மட்டும் இல்லாமல் வில்லனாகவும், குணசேத்திர கதாபாத்திரங்களும் நடித்து தனக்கென ஒரு தகுதியான நிலையை வைத்துள்ளார்.

    பல படங்களில் வாய்ப்பு

    பல படங்களில் வாய்ப்பு

    ஸ்பைடர், மெர்சல் படங்களில் வில்லன் கதாபாத்திரத்தில் நடித்த மிரட்டினார். ஹீரோவாக மட்டும் இல்லாமல் வில்லனாகவும், குணசேத்திர கதாபாத்திரங்களும் நடித்து தனக்கென ஒரு தகுதியான நிலையை வைத்துள்ளார். ஆனால் முதல் வாய்ப்பு என்பதை யாராலும் மறக்க முடியாது என்பதனால் தனக்கு கிடைத்த முதல் வாய்ப்பை பற்றியும் அஜித் தனக்கு கொடுத்த வாய்ப்பைப் பற்றியும் எஸ் ஜே சூர்யா கூறியுள்ளார். இது தற்போது அஜித் ரசிகர்களாலும், எஸ் ஜே சூர்யாவாலும் ரசிகர்களாலும் பகிரப்பட்டு வருகின்றது. ஆசை படத்தில் நான் உதவி இயக்குனராக வேலை செய்வதை அஜித் பார்த்தார், ஆசை படத்தில் அஜித்துக்கு 75 ஆயிரம் மட்டுமே சம்பளமாக கொடுக்கப்பட்டது. நான் வேலை செய்வது அஜித்துக்கு பிடித்து போக, நான் எழுதி, இயக்கிய முதல் படமான வாலி திரைப்படத்தில் அஜித் நடித்திருந்தார் என்று கூறியுள்ளார். வாலி திரைப்படத்தில் அஜித்துக்கு ஜோடியாக சிம்ரன் நடித்திருப்பார். ஜோதிகா மற்றும் விவேக் துணை கதாபாத்திரத்தில் நடித்து இருப்பார்கள்.

    English summary
    Ajith is the First Hero to Recognize me as a Director says SJ Surya
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X