ஸ்பெஷல்ஸ்

By Staff

அஜீத் நடித்து வரும் ஆஞ்சநோயா படத்தின் சூட்டிங் ஒரு வழியாய் சூடு பிடிக்க ஆரம்பித்துவிட்டது. ஏகப்பட்டதடங்கல்களுடன் ஆரம்பித்த இந்தப் படத்தின் படப்பிடிப்பு இப்போது விறுவிறுப்பாக நடந்து வருகிறதாம்.

நீண்ட நாட்களுக்குப் பின் தான் நடித்து வெளிவரவிருக்கும் படம் என்பதால் இதை சூப்பர் ஹிட்டாக்க மிகவும்மெனக்கெட்டு வருகிறாராம் அஜீத். அத்தோடு மீரா ஜாஸ்மீனும் நல்ல ஒத்துழைப்பு தந்து வருகிறாராம். கேட்டஅளவுக்கு கவர்ச்சியும் காட்டி வருகிறார். இதனால் டைரக்டரும் மகிழ்ச்சியுடன் இருக்கிறார்.

இந்தப் படம் தவிர மகா, அட்டகாசம் என வேறு இரு படங்களிலும் நடித்துக் கொண்டிருக்கிறார் அஜீத். இந்தஇரு படங்களின் சூட்டிங்கும் மந்தகதியில் நடந்து வருகிறது. ஆஞ்சநேயாவை முடித்த பின் இந்தப் படங்களில் முமுமூச்சில் இறங்குவாராம் அஜீத்.

மற்றொரு படமான ஜனா டிராப் செய்யப்பட்டுவிட்டாலும், மீண்டும் அதை தூசி தட்டி எடுக்கும் முயற்சிகளும்நடக்கின்றன. இதில் அஜீத்துக்கு ஜோடியாக ஸ்னேகா புக் செய்யப்பட்டார்.

இந் நிலையில் சமீபத்தில் அஜீத்தைச் சந்தித்து ஒரு கதை சொல்லியிருக்கிறார் ஆனந்தம் பட புகழ் லிங்குசாமி. கதைமிகவும் பிடித்துப் போகவே உடனே நடிக்க ஒப்புக் கொண்டுவிட்டாராம் அஜீத். அஜீத்தின் பினாமியான நிக்ஆர்ட்ஸ் சக்கரவர்த்தி தான் படத்தை எடுக்கப் போகிறார்.

படத்துக்கு ஜீ என நாமகரணம் சூட்டியிருக்கிறார்கள். இதில் அஜீத்துக்கு ஹீரோயினாக முதலில் கன்னடத்தைச்சேர்ந்த ராதிகாவை புக் செய்தார்கள். இவர் இயற்கை என்ற தமிழ்ப் படத்தில் நடித்து வருகிறார். ஆனால், என்னநடந்ததோ ராதிகாவைத் தூக்கிவிட்டு இப்போது அமோகாவை புக் செய்திருக்கிறார்கள்.

அமோகா இப்போது சரண் இயக்கி வரும் ஜே.ஜே. என்ற படத்தில் மாதவனுக்கு ஜோடியாக நடித்துக்கொண்டிருக்கிறார். அஜீத்துடன் ஜோடி என்றவுடன் என்ன சம்பளம் கொடுத்தாலும் சரி என்று ஒப்புக்கொண்டாராம் அமோகா.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X