Don't Miss!
- News
குமரியில் ரூ.75 லட்ச செலவில்.. அமைச்சர் மனோ தங்கராஜ் ஏற்றி வைத்த.. தேசிய கொடி ஒரே நாளில் கிழிந்தது!
- Finance
என்னது இந்த நிறுவனத்துடைய வயது 234-ஆ..!!
- Technology
உடனே நீக்குங்கள், அது சுத்தமான சீன உளவு செயலி: Google, Apple க்கு கடிதம்!
- Sports
யாரும் எடுக்காத துணிச்சல் முடிவு..? இந்திய ப்ளேயிங் 11ல் அஸ்வினின் நிலை என்ன?- டிராவிட்டின் ஐடியா
- Lifestyle
ஜூலை மாதம் உங்க ஆரோக்கியம் எப்படி இருக்கப்போகுது தெரியுமா? இந்த 5 ராசிக்காரங்களுக்கு ஆபத்து அதிகமாம்...!
- Automobiles
வெறும் ரூ.1 லட்சம் தான்... ஆட்டம் வடேர் அதிவேக எலக்ட்ரிக் பைக் அறிமுகம்!! 100கிமீ ரேஞ்ச்
- Travel
தென் கைலாயம் எனப் போற்றப்படும் வெள்ளியங்கிரி மலைகளுக்குள் ஒரு ஆன்மீகப் பயணம்!
- Education
ரூ.2.60 லட்சம் ஊதியத்தில் சென்னை துறைமுகத்தில் பணியாற்ற ஆசையா?
அஜித் என்னிடம் கேட்ட சந்தேகம்....ஆனால் இப்ப அவர் அதில் எக்ஸ்பர்ட்...நடிகர் ஜெயம் ரவி!
சென்னை: ஹெச் வினோத் இயக்கத்தில் அஜித் இரண்டாவது முறையாக இணைந்த வலிமை கலவையான விமர்சனங்களை பெற்று வெற்றி பெற்றுள்ளது
அஜித்தின் 61வது படத்தையும் ஹெச் வினோத் இயக்க ஒப்பந்தமாகி உள்ளார். படத்தின் முதல் கட்ட பணிகள் தொடங்கப்பட்டு உள்ளது.
இந்த நிலையில் அஜித் தன்னிடம் கேட்டதை அவரே செய்து முடித்துவிட்டார் என நடிகர் ஜெயம் ரவி தனியார் யூட்யூப் சேனல் நேர்காணலில் சுவாரசிய தகவல் ஒன்றை பகிர்ந்துள்ளார்.
என்னது ஆதி -நிக்கி கல்ராணி கல்யாணத்துல அஜித் கலந்துக்குறாரா... ஆதி சொன்ன தகவலை பாருங்க!

தொடர்ந்து நான்கு படங்களில்
ஒவ்வொரு படத்திற்கும் வித்தியாசம் காட்டி நடிக்க வேண்டும் என்ற உத்வேகத்தில் தனது ஒவ்வொரு படங்களையும் பார்த்து பார்த்து நடித்து வரும் அஜித் தனக்கு ஒரு இயக்குனரை பிடித்து விட்டால் அந்த இயக்குனரிடம் தொடர்ந்து பணியாற்றுவதை வழக்கமாக கொண்டுள்ளார். அந்த வகையில் சிறுத்தை சிவாவுடன் இணைந்து தொடர்ந்து நான்கு படங்களில் பணியாற்றினார். இப்பொழுது ஹெச் வினோத் உடன் இணைந்து பணியாற்றி வருகிறார்.

பெண்கள் மீதான பாலியல்
அஜித் மற்றும் ஹெச் வினோத் முதல் முறையாக இணைந்த நேர்கொண்டபார்வை மாபெரும் வெற்றி பெற்றது. இந்த படம் ஹிந்தியில் மாபெரும் வெற்றி பெற்ற பிங்க் படத்தின் தமிழ் ரீமேக்காக வெளியானது. அஜித் முதல் முறையாக வக்கீலாக வயதான தோற்றத்தில் நடித்து பட்டையை கிளப்பியிருப்பார். பெண்கள் மீதான பாலியல் வன்கொடுமை குறித்து எடுக்கப்பட்ட இந்த படம் அனைத்து தரப்பு ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெற்று வெற்றி பெற்றது. ஹெச் வினோத் மற்றும் அஜித் கூட்டணி இரண்டாவது முறையாக இணைந்த வலிமை திரைப்படம் மிக பிரம்மாண்டமான பொருட்செலவில் தயாராகி வந்தது. தயாரிப்பாளர் போனி கபூர் தயாரிப்பில் உருவாகி வந்த இந்த படம் சுமார் இரண்டரை ஆண்டுகளாக எடுக்கப்பட்டு வந்தது. பெரும் காத்திருப்புக்குப் பின்னர் இப்படம் பிப்ரவரி 24ஆம் தேதி வெளியாகி ரசிகர்களால் கொண்டாடப்பட்டது.

கலவையான விமர்சனங்களை
பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட வலிமை திரைப்படம் கலவையான விமர்சனங்களை பெற்ற போதும் படத்தில் ஹாலிவுட் தரத்தில் மேக்கிங்க பைக் ரேஸ் காட்சிகள் என பார்க்கும் அனைவரையும் பிரம்மாண்டத்தை ஏற்படுத்தியது. இந்த நிலையில் வினோத் மற்றும் அஜித் கூட்டணி இரண்டாவது மூன்றாவது முறையாக மீண்டும் இணைய உள்ளது உறுதியாகி உள்ளது

அஜித் என்கிட்ட கேட்டார்
அஜித்தின் 61வது படத்தை ஹெச் வினோத் இயக்க உள்ளார். இப்படத்தின் முதற்கட்ட பணிகள் தொடங்கப்பட்டு உள்ளது என செய்திகள் வெளிவந்துள்ளது. அதைத்தொடர்ந்து விக்னேஷ் சிவன் இயக்கத்தில் அஜித் 62வது திரைப்படத்தில் நடிக்க உள்ளார். இவ்வாறு தனது அடுத்தடுத்த படங்களின் அறிவிப்பை வெளியிட்டுவரும் அஜித் குறித்து ஜெயம் ரவி சுவாரஸ்ய தகவல் ஒன்றை பகிர்ந்துள்ளார். தனியார் யூடியூப் சேனல் ஒன்று நேர்காணலில் பகிர்ந்துள்ளார். அதில் அவர் கூறியுள்ளதாவது பேராண்மை படம் பண்ணும்போது அஜித் என்னிடம் எப்படி உடம்பைக் குறைத்தாய் எந்த மாதிரி எல்லாம் டயட் எடுத்துக் கொண்டாய் என ஒவ்வொரு விஷயத்தையும் கேட்டு கேட்டு தெரிந்து கொண்டார் ஆனால் இப்போ அவரு பண்ணிட்டாரு என வியந்து பாராட்டியுள்ளார்.