இன்று 'தல' டே: ஹேப்பி பர்த்டே அஜீத்
சென்னை: அஜீத் குமார் இன்று தனது 42வது பிறந்தநாளை கொண்டாடுகிறார்.
தல என்று பாசமாக அழைக்கப்படும் அஜீத் குமார் இன்று தனது 42வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். அதற்காக அவர் வெளிநாட்டுக்கு சென்று பார்ட்டி கொடுத்து பிறந்தநாளை கொண்டாடவில்லை.
மாறாக ராஜஸ்தான் மாநிலத்தில் விஷ்ணுவர்தன் பட ஷூட்டிங்கில் உள்ளார். அங்கே தனது பிறந்நதாளை எளிமையாக கொண்டாடுகிறார்.

42 வயசாச்சு
அஜீத் குமார் தனது பிறந்தநாளை மனைவி ஷாலினி மற்றும் மகள் அனௌஷ்காவுடன் ராஜஸ்தானில் கொண்டாடுகிறார்.

குவியும் வாழ்த்துக்கள்
அஜீத் குமாருக்கு திரை பிரபலங்கள், ரசிகர்கள் என்று ஏராளமானோர் வாழ்த்துக்கள் தெரிவித்துள்ளனர்.

வயதுக்கேற்ற மெச்சூரிட்டி
ஒரு காலத்தில் கோபக்காரராக இருந்த அஜீத் தற்போது சாந்தமே உருவாக உள்ளார். அதனால் தான் என்னவோ அவரை சக நடிகர், நடிகைகளில் இருந்து அனைவருக்கும் பிடிக்கிறது.
Comments


Click it and Unblock the Notifications