சொந்தப்படம் எடுத்து கையைச் சுட்டுக்கொண்ட அஜித்...சசிகுமார் பகிர்ந்த சுவாரஸ்ய தகவல்!
சென்னை : நடிகர் அஜித்குமார் தனது ஆரம்ப காலத்தில் சொந்தமாக படத்தயாரிப்பில் ஈடுபட்டு நஷ்டத்தை சந்தித்துள்ளார் என நடிகர் சசிகுமார் தெரிவித்துள்ளார்.

ஹெச் வினோத் கூட்டணியில்
நடிகர் அஜித் நடிப்பில் வெளியாகும் திரைப்படங்கள் இந்திய அளவில் மிகப்பெரிய கவனத்தைப் பெற்று வருகிறது. விஸ்வாசம் கொடுத்த பிரம்மாண்ட வெற்றியைத் தொடர்ந்து இயக்குநர் ஹெச் வினோத் இயக்கத்தில் அஜித் நடித்த நேர்கொண்ட பார்வை திரைப்படம் மிகப் பெரிய வெற்றி பெற்று வசூலை வாரி குவித்தது. பெண்கள் மீதான பாலியல் வன்கொடுமை குறித்து வெளியான இப்படம் அனைத்து தரப்பு ரசிகர்கள் மத்தியிலும் நல்ல வரவேற்பை பெற்று வெற்றி பெற்றது.

வலிமை பெற்ற வரவேற்பு
எனவே தொடர்ந்து ஹெச் வினோத் இயக்கத்தில் படங்களில் பணியாற்றி வரும் அஜித் ஹெச் வினோத் கூட்டணியில் கடைசியாக வெளியான வலிமை படம் கலவையான விமர்சனங்களைப் பெற்றது. ஹாலிவுட் தரத்தில் மேக்கிங் பிரமிக்க வைக்கும் பைக் ரேஸ் காட்சிகள் என மிரட்டியது.

பான் இந்தியா படமாக
இந்த நிலையில் அடுத்ததாக மீண்டும் அஜித் 61வது படத்தில் ஹெச் வினோத் உடன் இணைகிறார். அதை தொடர்ந்து அஜித் 62வது படத்தை விக்னேஷ் சிவன் இயக்க உள்ளார். இந்த இரண்டு திரைப்படங்களும் பான் இந்தியா படமாக உருவாக உள்ளது. இந்நிலையில் தனியார் யூடியூப் சேனல் நேர்காணலில் பேசிய நடிகர் சசிகுமார் அஜித் நிறைய படங்களில் நடித்து நஷ்டத்தை சந்தித்தார் என சுவாரஸ்ய தகவலைப் பகிர்ந்துள்ளார்

குற்றப்பரம்பரை வெப் சீரிஸை
நடிகர், இயக்குனர், தயாரிப்பாளர் என பல முகங்களைக் கொண்டுள்ள சசிகுமார் இப்பொழுது தொடர்ந்து நடிப்பில் மட்டும் கவனம் செலுத்தி வருகிறார். அப்புறம் என்ற படத்தை இயக்கியதன் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குனராக அறிமுகமான சசிகுமார் முதல் படத்திலேயே பிரம்மாண்ட வெற்றியை கண்டார். இயல்பான நடிப்பின் மூலம் தனி ரசிகர்கள் பட்டாளத்தை கொண்டுள்ள சசிகுமார் தொடர்ந்து கிராமத்து கதைகளில் நடித்து வருகிறார். நீண்ட இடைவெளிக்குப் பிறகு குற்றப்பரம்பரை வெப் சீரிஸை இயக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

நஷ்டத்தை சந்தித்த அஜித்
இந்த நிலையில் தனியார் யூடியூப் நேர்காணலில் பேட்டி அளித்துள்ள சசிகுமார், "அஜித் ஒரு காலத்தில் நிறைய படங்களில் நடித்தார். அப்போது அதிக படங்களையும் எடுத்து நஷ்டத்தை சந்தித்தார். அனைத்து நடிகர்களுக்கும் இது போன்ற நிலை ஏற்பட்டுள்ளது. அஜித்தைப் போல நானும் ஒரு காலத்தில் அதிக படங்களில் நடித்து நஷ்டத்தை சந்தித்து மிகப்பெரிய நெருக்கடிக்கு ஆளானேன்" என்று கூறியுள்ளார்.


Click it and Unblock the Notifications











