»   »  நிக்குக்கு அஜீத் வைத்த செக்!

நிக்குக்கு அஜீத் வைத்த செக்!

Posted By:
Subscribe to Oneindia Tamil

ஒரு காலத்தில் நெருங்கிய நண்பராகவும், பின்னர் எதிரியாகவும் மாறிய நிக் ஆர்ட்ஸ் சக்கரவர்த்திக்கு அஜீத் வசமான செக் வைத்துள்ளாராம்.

அஜீத்தும், நிக் ஆர்ட்ஸ் சக்கரவர்த்தியும் ஈருடல் ஓருயிராக இருந்தவர்கள். அஜீத் தும்மினால், "நிக் மாத்திரை சாப்பிடுவார். அந்த அளவுக்கு இருவரும் திக்ஃபிரண்ட்ஸாக இருந்தனர். இதனால் நிக்கை வைத்தே பல அஜீத் படங்கள் தயாராகின. அஜீத்தின் பினாமி என்று கூட நிக்கை கூறுவார்கள்.

ஆனால் யார் கண் பட்டதோ, திடீரென, அஜீத்துக்கும், நிக் சக்கரவர்த்திக்கும் இடையே பிளவு ஏற்பட்டது. சிட்டிசன் படத்திற்குப் பிறகு தான் இந்த பிளவு ஏற்பட்டது.மேலும், தனது சரிவுக்கு நிக் தான் காரணம் என அஜீத் நம்பும் படியாக சில காரியங்கள், தகவல்கள் அவரது காதுகளுக்குப் போனதால் அப்செட் ஆகிப் போனார் அஜீத்.

அதே நேரத்தில் நிக்கை விட்டு விலகினால் தான் எதிர்காலம் பிரைட்டாக இருக்கும் என்று காதல் மனைவி ஷாலினி வேறு அட்வைஸ் செய்ததால், நீண்ட யோசனைக்குப்பிறகு நிக்கை விட்டு விலகினார் அஜீத்.

அஜீத்தின் முடிவினால் கடுப்பாகிப் போன நிக், தயாரிப்பாளர் சங்கத்தில் ஒரு புகார் கொடுத்தார். அதில், எனக்கு அஜீத் நிறைய பணம் கொடுக்க வேண்டியுள்ளது.அந்தப் பணத்தை அவர் கொடுக்க வேண்டாம்.

ஆனால் எனக்காக அவர் ஒரு படம் செய்து தர வேண்டும் என்று கூறியுள்ளார். அஜீத் இதற்கு ஒப்புக் கொண்டார். ஆனால் 60 நாட்களுக்குள் படத்தை முடித்து விடவேண்டும் என நிபந்தனை விதித்தார்.

நிபந்தனைக்கு நிக் ஒப்புக் கொள்ளவே படம் தொடங்கியது. அந்தப் படம் தான் காட்ஃபாதர். கே.எஸ்.ரவிக்குமார் இயக்கத்தில் அஜீத் 3 வேடங்களில் நடிக்கும்இப்படத்தின் படப்பிடிப்பை ஜரூராகத் தொடங்கினார் நிக்.

படம் முக்கால் கிணற்றைத் தாண்டியிருந்த நேரத்தில் திடீரென நிக்குக்கு பணப் பற்றாக்குறை ஏற்பட்டு விட்டது. அதே நேரத்தில் அஜீத் விதித்திருந்த காலக் கெடுவும்நெருங்கி வருகிறது. இதனால் குழம்பிப் போன நிக், பணத்தைப் புரட்ட அங்கும் இங்கும் அலைந்து கொண்டிருக்கிறாராம்.

மற்றொரு பக்கத்தில் அஜீத்திடம் இன்னும் கொஞ்ச நாள் கால்ஷீட் கேட்டும் பேசியிருக்கிறார். ஆனால் அஜீத் ஒரே ஆட்டாக ஆட்டி விட்டாராம் - தலையை. பணம்இல்லாமல் நிக் தவிப்பதைப் பார்த்த இயக்குநர் கே.எஸ்.ரவிக்குமார், இந்தப் படத்தில் தனது எதிர்காலமும் இருப்பதை உணர்ந்து, சமீபத்தில் ஹைதராபாத்தில் நடந்தபடப்பிடிப்பை தனது சொந்த செலவில் முடித்தாராம்.


இருந்தும் இன்னும் முக்கியமான காட்சிகள் எடுக்க வேண்டியுள்ளதால், படம் அப்படியே நிற்கிறதாம். அஜீத் கொஞ்சம் கூட இறங்கி வருகிற மாதிரி தெரியாததால், நிக்என்ன செய்வதென்று தெரியாமல் விழி பிதுங்கி நிற்கிறாராம்.

ஆனால் அதைப் பற்றிக் கொஞ்சம் கூட கவலைப்படாத அஜீத், தனது அடுத்த படத்திற்கான முஸ்தீபுகளில் இறங்கி விட்டார். அது தான் பாலாவின் இயக்கத்தில்வளரவுள்ள "நான் கடவுள் படம். இந்தப் படத்திற்காக தனது கெட்டப்பை மாற்றி நீண்ட தாடியும், முடியும் வளர்க்க ஆரம்பித்து விட்டாராம் அஜீத்.

அஜீத்தின் போக்கால் வெறுத்துப் போயுள்ள நிக்குக்கும் தாடி, மீசை வளர ஆரம்பித்து விட்டதாம். என்ன வித்தியாசம், அஜீத் விருப்பத்துடன் வளர்க்கிறார், அவருக்கோ,வெறுப்பிலும், சோகத்திலும் தானாகவே வளர்கிறது!

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil