»   »  தங்கர்... குஷ்பு.. அஜீத்.. அஜீத் மிரட்டப்பட்ட விவகாரத்தில் ஒரு நாள் ஸ்டிரைக் செய்ய வேண்டும் என்றுமுன்னணி நடிகர்கள், நடிகர் விஜயகாந்த்தை வலியுறுத்தி வருகின்றனர். ஆனால் அஜீத்புகார் கொடுக்காமல் எப்படி நாமாக போராட்டம் நடத்துவது என விஜயகாந்த் தயக்கம்காட்டுவதாக கூறப்படுகிறது.ஆனால் விஜயகாந்த் பேச்சில் நியாயம் இல்லை என்று நடிகர் நாசர் உள்ளிட்ட சிலமுன்னணி நடிகர்கள் குமுறல் வெளியிட்டுள்ளனராம்.தங்கர்பச்சான் விஷயத்தில் எந்த நடிகையும் புகார் தராத நிலையிலும், விஜயகாந்த்உள்ளிட்ட நிர்வாகிகள் படு வேகமாக செயல்பட்டு தங்கரை நடிகர் சங்கத்திற்குஇழுத்து வந்து மன்னிப்பு கேட்க வைத்தனர்.அதே போல குஷ்புவின் கற்பு கருத்து விஷயத்திலும் அவருக்கு ரொம்பவே பரிதாபம்காட்டினர்.ஆனால், அஜீத் விஷயத்தில் மட்டும் நடிகர் சங்கம் ஏன் ஆவேசமாகசெயல்படவில்லை என்று நாசர் கேட்டுள்ளாராம்.ஒரு முன்னணி நடிகரை கூலிப் படையை வைத்துக் கடத்திச் சென்றதைப் போலஹோட்டலுக்கு வரவழைத்து அறையில் அடைத்து வைத்து தாறுமாறாக பேசிமிரட்டியுள்ளனர். இப்படிப்பட்ட ரவுடித்தனமான செயலை ஒருபோதும் அனுமதிக்கமுடியாது.இந்த விஷயத்தில் நடிகர் சங்கம் உறுதியாக செயல்பட்டு, இயக்குனர் பாலாஉள்ளிட்டோருக்கு கடும் கண்டனத்தைத் தெரிவிக்க வேண்டும். இல்லாவிட்டால்எதிர்காலத்தில் திரைத் துறையில் ரவுடியிஸம், குண்டாயிசம் தலை தூக்கி விடும்.அதற்கு அத்தனை நடிகர், நடிகைகளும் பலியாகக் கூடிய வாய்ப்புகளை நாம் மறுக்கமுடியாது என்று தனது திரைப்பட நண்பர்களிடம் நாசர் குமுறியுள்ளார்.நாசர் பலமுறை புகார் கொடுக்கக் கூறியும் மறுத்து விட்ட அஜீத் தொடர்ந்து இந்தவிஷயத்தில் மெளனம் சாதித்து வருகிறார்.மதுரையைச் சேர்ந்த பைனான்சியர் அன்புச் செழியனுக்கு எதிராக புகார் கொடுக்கஅவர் தயங்குவதாக கூறப்படுகிறது. சசிகலாவுக்கு வேண்டியவர் என்று கூறப்படும்அன்பு, கடந்த அதிமுக ஆட்சியில் கொடி கட்டிப் பறந்தார். திரையுலகில் உள்ளமுக்கால்வாசிப் பேர் அவரிடம் கடன் வாங்கியிருக்கிறார்கள்.அவரை அவ்வளவு எளிதாக யாராலும் பகைத்துக் கொள்ள முடியாத நிலை உள்ளது.அந்த அளவுக்கு மிகவும் சாதுரியமாக நடிகர், நடிகைகளை தனது கடன் வலையில்வளைத்துப் போட்டுள்ளார் அன்பு. இவரது நெருக்குதல் தாங்க முடியாமல்தான்தயாரிப்பாளர் ஜீவி இறந்ததாகக் கூட கூறப்பட்டது.அதேபோல நடிகை ரம்பா, தேவயானி உள்ளிட்ட பலருக்கும் இவர் சிம்மசொப்பனமாக இருந்து வந்தார். அன்புச்செழியன் போட்ட வழக்குகளால் ரம்பாஇன்னும் கோர்ட்டுக்கும் வீட்டுக்குமாக அலைந்து கொண்டிருக்கிறார்.நடிகை தேவயானியையும் அன்புச் செழியன் ஒருகட்டத்தில் மிரட்டியதாககூறப்பட்டது. இப்படிப்பட்ட பலம் வாய்ந்த பின்னணியைக் கொண்டுள்ளவருக்குஎதிராக களம் இறங்க விஜயகாந்த்தும் கூட தயங்குவதாக கூறப்படுகிறது.ஆனால் குஷ்புவுகுக்கு ஒரு நியாயம், அஜீத்திற்கு ஒரு நியாயம் என நடிகர் சங்கம்செயல்படக் கூடாது. உடனடியாக ஒரு நாள் அடையாள வேலைநிறுத்தம் செய்து நமதுஎதிர்ப்பையும், கண்டனத்தையும் காட்ட வேண்டும். அஜீத்துக்கு முழு ஆதரவாக நடிகர்சங்கம் செயல்பட வேண்டும் என்று பல முன்னணி நடிகர்கள் விஜயகாந்த்தை நெருக்கிவருகிறார்களாம்.அதேசமயம், இந்த சர்ச்சையில் சிக்கியுள்ளவர்களில் தேனப்பன் தயாரிப்பாளர், பாலாஇயக்குனர், அன்புச் செழியன் பைனான்சியர், அருள்பதி வினியோகஸ்தர் சங்கத்தலைவர்.இதனால் அவர்களுக்கு ஆதரவாக அவரவர்களின் துறைகளைச் சேர்ந்தவர்கள்நடிகர்களுக்கு எதிராக ஒன்று சேரக் கூடிய வாய்ப்பும் இருக்கிறது. அப்படி நடந்தால்திரைத் துறையில் மிகப் பெரிய சிக்கல் ஏற்பட்டுவிடும்.இப்போதைய நிலையில் திரையுலகம் மீது கருமேகம் கூடி வருகிறது. எப்போதுவேண்டுமானாலும் இடி, மின்னலுடன் கனமான சண்டை மழை பெய்யக் கூடியவாய்ப்பு உள்ளது.

தங்கர்... குஷ்பு.. அஜீத்.. அஜீத் மிரட்டப்பட்ட விவகாரத்தில் ஒரு நாள் ஸ்டிரைக் செய்ய வேண்டும் என்றுமுன்னணி நடிகர்கள், நடிகர் விஜயகாந்த்தை வலியுறுத்தி வருகின்றனர். ஆனால் அஜீத்புகார் கொடுக்காமல் எப்படி நாமாக போராட்டம் நடத்துவது என விஜயகாந்த் தயக்கம்காட்டுவதாக கூறப்படுகிறது.ஆனால் விஜயகாந்த் பேச்சில் நியாயம் இல்லை என்று நடிகர் நாசர் உள்ளிட்ட சிலமுன்னணி நடிகர்கள் குமுறல் வெளியிட்டுள்ளனராம்.தங்கர்பச்சான் விஷயத்தில் எந்த நடிகையும் புகார் தராத நிலையிலும், விஜயகாந்த்உள்ளிட்ட நிர்வாகிகள் படு வேகமாக செயல்பட்டு தங்கரை நடிகர் சங்கத்திற்குஇழுத்து வந்து மன்னிப்பு கேட்க வைத்தனர்.அதே போல குஷ்புவின் கற்பு கருத்து விஷயத்திலும் அவருக்கு ரொம்பவே பரிதாபம்காட்டினர்.ஆனால், அஜீத் விஷயத்தில் மட்டும் நடிகர் சங்கம் ஏன் ஆவேசமாகசெயல்படவில்லை என்று நாசர் கேட்டுள்ளாராம்.ஒரு முன்னணி நடிகரை கூலிப் படையை வைத்துக் கடத்திச் சென்றதைப் போலஹோட்டலுக்கு வரவழைத்து அறையில் அடைத்து வைத்து தாறுமாறாக பேசிமிரட்டியுள்ளனர். இப்படிப்பட்ட ரவுடித்தனமான செயலை ஒருபோதும் அனுமதிக்கமுடியாது.இந்த விஷயத்தில் நடிகர் சங்கம் உறுதியாக செயல்பட்டு, இயக்குனர் பாலாஉள்ளிட்டோருக்கு கடும் கண்டனத்தைத் தெரிவிக்க வேண்டும். இல்லாவிட்டால்எதிர்காலத்தில் திரைத் துறையில் ரவுடியிஸம், குண்டாயிசம் தலை தூக்கி விடும்.அதற்கு அத்தனை நடிகர், நடிகைகளும் பலியாகக் கூடிய வாய்ப்புகளை நாம் மறுக்கமுடியாது என்று தனது திரைப்பட நண்பர்களிடம் நாசர் குமுறியுள்ளார்.நாசர் பலமுறை புகார் கொடுக்கக் கூறியும் மறுத்து விட்ட அஜீத் தொடர்ந்து இந்தவிஷயத்தில் மெளனம் சாதித்து வருகிறார்.மதுரையைச் சேர்ந்த பைனான்சியர் அன்புச் செழியனுக்கு எதிராக புகார் கொடுக்கஅவர் தயங்குவதாக கூறப்படுகிறது. சசிகலாவுக்கு வேண்டியவர் என்று கூறப்படும்அன்பு, கடந்த அதிமுக ஆட்சியில் கொடி கட்டிப் பறந்தார். திரையுலகில் உள்ளமுக்கால்வாசிப் பேர் அவரிடம் கடன் வாங்கியிருக்கிறார்கள்.அவரை அவ்வளவு எளிதாக யாராலும் பகைத்துக் கொள்ள முடியாத நிலை உள்ளது.அந்த அளவுக்கு மிகவும் சாதுரியமாக நடிகர், நடிகைகளை தனது கடன் வலையில்வளைத்துப் போட்டுள்ளார் அன்பு. இவரது நெருக்குதல் தாங்க முடியாமல்தான்தயாரிப்பாளர் ஜீவி இறந்ததாகக் கூட கூறப்பட்டது.அதேபோல நடிகை ரம்பா, தேவயானி உள்ளிட்ட பலருக்கும் இவர் சிம்மசொப்பனமாக இருந்து வந்தார். அன்புச்செழியன் போட்ட வழக்குகளால் ரம்பாஇன்னும் கோர்ட்டுக்கும் வீட்டுக்குமாக அலைந்து கொண்டிருக்கிறார்.நடிகை தேவயானியையும் அன்புச் செழியன் ஒருகட்டத்தில் மிரட்டியதாககூறப்பட்டது. இப்படிப்பட்ட பலம் வாய்ந்த பின்னணியைக் கொண்டுள்ளவருக்குஎதிராக களம் இறங்க விஜயகாந்த்தும் கூட தயங்குவதாக கூறப்படுகிறது.ஆனால் குஷ்புவுகுக்கு ஒரு நியாயம், அஜீத்திற்கு ஒரு நியாயம் என நடிகர் சங்கம்செயல்படக் கூடாது. உடனடியாக ஒரு நாள் அடையாள வேலைநிறுத்தம் செய்து நமதுஎதிர்ப்பையும், கண்டனத்தையும் காட்ட வேண்டும். அஜீத்துக்கு முழு ஆதரவாக நடிகர்சங்கம் செயல்பட வேண்டும் என்று பல முன்னணி நடிகர்கள் விஜயகாந்த்தை நெருக்கிவருகிறார்களாம்.அதேசமயம், இந்த சர்ச்சையில் சிக்கியுள்ளவர்களில் தேனப்பன் தயாரிப்பாளர், பாலாஇயக்குனர், அன்புச் செழியன் பைனான்சியர், அருள்பதி வினியோகஸ்தர் சங்கத்தலைவர்.இதனால் அவர்களுக்கு ஆதரவாக அவரவர்களின் துறைகளைச் சேர்ந்தவர்கள்நடிகர்களுக்கு எதிராக ஒன்று சேரக் கூடிய வாய்ப்பும் இருக்கிறது. அப்படி நடந்தால்திரைத் துறையில் மிகப் பெரிய சிக்கல் ஏற்பட்டுவிடும்.இப்போதைய நிலையில் திரையுலகம் மீது கருமேகம் கூடி வருகிறது. எப்போதுவேண்டுமானாலும் இடி, மின்னலுடன் கனமான சண்டை மழை பெய்யக் கூடியவாய்ப்பு உள்ளது.

Posted By:
Subscribe to Oneindia Tamil
அஜீத் மிரட்டப்பட்ட விவகாரத்தில் ஒரு நாள் ஸ்டிரைக் செய்ய வேண்டும் என்றுமுன்னணி நடிகர்கள், நடிகர் விஜயகாந்த்தை வலியுறுத்தி வருகின்றனர். ஆனால் அஜீத்புகார் கொடுக்காமல் எப்படி நாமாக போராட்டம் நடத்துவது என விஜயகாந்த் தயக்கம்காட்டுவதாக கூறப்படுகிறது.

ஆனால் விஜயகாந்த் பேச்சில் நியாயம் இல்லை என்று நடிகர் நாசர் உள்ளிட்ட சிலமுன்னணி நடிகர்கள் குமுறல் வெளியிட்டுள்ளனராம்.

தங்கர்பச்சான் விஷயத்தில் எந்த நடிகையும் புகார் தராத நிலையிலும், விஜயகாந்த்உள்ளிட்ட நிர்வாகிகள் படு வேகமாக செயல்பட்டு தங்கரை நடிகர் சங்கத்திற்குஇழுத்து வந்து மன்னிப்பு கேட்க வைத்தனர்.

அதே போல குஷ்புவின் கற்பு கருத்து விஷயத்திலும் அவருக்கு ரொம்பவே பரிதாபம்காட்டினர்.

ஆனால், அஜீத் விஷயத்தில் மட்டும் நடிகர் சங்கம் ஏன் ஆவேசமாகசெயல்படவில்லை என்று நாசர் கேட்டுள்ளாராம்.

ஒரு முன்னணி நடிகரை கூலிப் படையை வைத்துக் கடத்திச் சென்றதைப் போலஹோட்டலுக்கு வரவழைத்து அறையில் அடைத்து வைத்து தாறுமாறாக பேசிமிரட்டியுள்ளனர். இப்படிப்பட்ட ரவுடித்தனமான செயலை ஒருபோதும் அனுமதிக்கமுடியாது.

இந்த விஷயத்தில் நடிகர் சங்கம் உறுதியாக செயல்பட்டு, இயக்குனர் பாலாஉள்ளிட்டோருக்கு கடும் கண்டனத்தைத் தெரிவிக்க வேண்டும். இல்லாவிட்டால்எதிர்காலத்தில் திரைத் துறையில் ரவுடியிஸம், குண்டாயிசம் தலை தூக்கி விடும்.அதற்கு அத்தனை நடிகர், நடிகைகளும் பலியாகக் கூடிய வாய்ப்புகளை நாம் மறுக்கமுடியாது என்று தனது திரைப்பட நண்பர்களிடம் நாசர் குமுறியுள்ளார்.

நாசர் பலமுறை புகார் கொடுக்கக் கூறியும் மறுத்து விட்ட அஜீத் தொடர்ந்து இந்தவிஷயத்தில் மெளனம் சாதித்து வருகிறார்.

மதுரையைச் சேர்ந்த பைனான்சியர் அன்புச் செழியனுக்கு எதிராக புகார் கொடுக்கஅவர் தயங்குவதாக கூறப்படுகிறது. சசிகலாவுக்கு வேண்டியவர் என்று கூறப்படும்அன்பு, கடந்த அதிமுக ஆட்சியில் கொடி கட்டிப் பறந்தார். திரையுலகில் உள்ளமுக்கால்வாசிப் பேர் அவரிடம் கடன் வாங்கியிருக்கிறார்கள்.

அவரை அவ்வளவு எளிதாக யாராலும் பகைத்துக் கொள்ள முடியாத நிலை உள்ளது.

அந்த அளவுக்கு மிகவும் சாதுரியமாக நடிகர், நடிகைகளை தனது கடன் வலையில்வளைத்துப் போட்டுள்ளார் அன்பு. இவரது நெருக்குதல் தாங்க முடியாமல்தான்தயாரிப்பாளர் ஜீவி இறந்ததாகக் கூட கூறப்பட்டது.

அதேபோல நடிகை ரம்பா, தேவயானி உள்ளிட்ட பலருக்கும் இவர் சிம்மசொப்பனமாக இருந்து வந்தார். அன்புச்செழியன் போட்ட வழக்குகளால் ரம்பாஇன்னும் கோர்ட்டுக்கும் வீட்டுக்குமாக அலைந்து கொண்டிருக்கிறார்.

நடிகை தேவயானியையும் அன்புச் செழியன் ஒருகட்டத்தில் மிரட்டியதாககூறப்பட்டது. இப்படிப்பட்ட பலம் வாய்ந்த பின்னணியைக் கொண்டுள்ளவருக்குஎதிராக களம் இறங்க விஜயகாந்த்தும் கூட தயங்குவதாக கூறப்படுகிறது.

ஆனால் குஷ்புவுகுக்கு ஒரு நியாயம், அஜீத்திற்கு ஒரு நியாயம் என நடிகர் சங்கம்செயல்படக் கூடாது. உடனடியாக ஒரு நாள் அடையாள வேலைநிறுத்தம் செய்து நமதுஎதிர்ப்பையும், கண்டனத்தையும் காட்ட வேண்டும். அஜீத்துக்கு முழு ஆதரவாக நடிகர்சங்கம் செயல்பட வேண்டும் என்று பல முன்னணி நடிகர்கள் விஜயகாந்த்தை நெருக்கிவருகிறார்களாம்.

அதேசமயம், இந்த சர்ச்சையில் சிக்கியுள்ளவர்களில் தேனப்பன் தயாரிப்பாளர், பாலாஇயக்குனர், அன்புச் செழியன் பைனான்சியர், அருள்பதி வினியோகஸ்தர் சங்கத்தலைவர்.

இதனால் அவர்களுக்கு ஆதரவாக அவரவர்களின் துறைகளைச் சேர்ந்தவர்கள்நடிகர்களுக்கு எதிராக ஒன்று சேரக் கூடிய வாய்ப்பும் இருக்கிறது. அப்படி நடந்தால்திரைத் துறையில் மிகப் பெரிய சிக்கல் ஏற்பட்டுவிடும்.

இப்போதைய நிலையில் திரையுலகம் மீது கருமேகம் கூடி வருகிறது. எப்போதுவேண்டுமானாலும் இடி, மின்னலுடன் கனமான சண்டை மழை பெய்யக் கூடியவாய்ப்பு உள்ளது.


சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil