»   »  அஜீத்துக்கு ரஜினி கொடுத்த பூஸ்ட்! கேரக்டருக்காக குறுகிய காலத்தில் உடலை வருத்தி மெலிந்த அஜீத்தின் விடாமுயற்சியைப் பார்த்து வியந்து போனேன் என்று ரஜினிகாந்த், அஜீத்தைப்பாராட்டியுள்ளார்.இயக்குநர் பாலாவின் தயாரிப்பில், உருவாகவுள்ள புதிய படம் பரமசிவன். இதில் அஜீத் நாயகனாக நடிக்கிறார். பி.வாசு படத்தை இயக்குகிறார்.வித்யாசாகர் இசையமைக்கிறார். இப்படத்தின் பூஜை சனிக்கிழமை நடந்தது. இதில் ரஜினிகாந்த் கல்நது கொண்டு படத்தைத் தொடங்கி வைத்தார்.நிகழ்ச்சியில் ரஜினி பேசுகையில், அஜீத்தை ஏகமாக பாராட்டினார். மிகக் குறுகிய காலத்தில், படத்தின் தேவைக்காக உடலை வருத்தி, மெலிந்துள்ளீர்கள்.உங்களது விடாமுயற்சி என்னை ஆச்சரியப்படுத்துகிறது. தொடர்ந்து இதேபோல உடலை மெயின்டெய்ன் செய்ய வேண்டும். அதற்கு யோகா உங்களுக்குஉதவியாக இருக்கும். உடலை கட்டுக் கோப்பாக வைத்துக் கொள்வது நடிகர்களுக்கு மிகவும் அவசியம். இந்தப் படம் மிகப் பெரும் வெற்றி பெறவாழ்த்துக்கள் என்றார் ரஜினி.ரஜினியின் பாராட்டால் நெகிழ்ந்து போன அஜீத், அவரிடம் ஆசியும் பெற்றுக் கொண்டார். பின்னர் பி.வாசுவிடமும் தனது வாழ்த்துக்களைத் தெரிவித்தார்ரஜினி.பாலா இயக்கத்தில் அஜீத் நானே கடவுள் படத்தில் நடிப்பதாக இருந்தது. ஆனால் கதை சரியாக அமையாத காரணத்தால் அப்படத்தை பாலாஒத்திவைத்துள்ளார். ஆனால் அஜீத் கால்ஷீட்டை வீணடிக்க விரும்பாமல், தனது தயாரிப்பில் பி.வாசுவை வைத்து பரமசிவன் படத்தைத் தயாரிக்கிறார்.பட பூஜை விழாவில் மலேசிய அமைச்சர் டத்தோ சாமிவேலு, இயக்குநர்கள் பாலா, பாலுமகேந்திரா, தயாரிப்பாளர் கலைப்புலி தாணு, இசையமைப்பாளர்வித்யாசாகர் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.பரமசிவன் படத்தைத் தொடர்ந்து ஏவி.எம் நிறுவன தயாரிப்பில் உருவாகும் திருப்பதி படத்தில் அஜீத் நடிக்கவுள்ளார்.

அஜீத்துக்கு ரஜினி கொடுத்த பூஸ்ட்! கேரக்டருக்காக குறுகிய காலத்தில் உடலை வருத்தி மெலிந்த அஜீத்தின் விடாமுயற்சியைப் பார்த்து வியந்து போனேன் என்று ரஜினிகாந்த், அஜீத்தைப்பாராட்டியுள்ளார்.இயக்குநர் பாலாவின் தயாரிப்பில், உருவாகவுள்ள புதிய படம் பரமசிவன். இதில் அஜீத் நாயகனாக நடிக்கிறார். பி.வாசு படத்தை இயக்குகிறார்.வித்யாசாகர் இசையமைக்கிறார். இப்படத்தின் பூஜை சனிக்கிழமை நடந்தது. இதில் ரஜினிகாந்த் கல்நது கொண்டு படத்தைத் தொடங்கி வைத்தார்.நிகழ்ச்சியில் ரஜினி பேசுகையில், அஜீத்தை ஏகமாக பாராட்டினார். மிகக் குறுகிய காலத்தில், படத்தின் தேவைக்காக உடலை வருத்தி, மெலிந்துள்ளீர்கள்.உங்களது விடாமுயற்சி என்னை ஆச்சரியப்படுத்துகிறது. தொடர்ந்து இதேபோல உடலை மெயின்டெய்ன் செய்ய வேண்டும். அதற்கு யோகா உங்களுக்குஉதவியாக இருக்கும். உடலை கட்டுக் கோப்பாக வைத்துக் கொள்வது நடிகர்களுக்கு மிகவும் அவசியம். இந்தப் படம் மிகப் பெரும் வெற்றி பெறவாழ்த்துக்கள் என்றார் ரஜினி.ரஜினியின் பாராட்டால் நெகிழ்ந்து போன அஜீத், அவரிடம் ஆசியும் பெற்றுக் கொண்டார். பின்னர் பி.வாசுவிடமும் தனது வாழ்த்துக்களைத் தெரிவித்தார்ரஜினி.பாலா இயக்கத்தில் அஜீத் நானே கடவுள் படத்தில் நடிப்பதாக இருந்தது. ஆனால் கதை சரியாக அமையாத காரணத்தால் அப்படத்தை பாலாஒத்திவைத்துள்ளார். ஆனால் அஜீத் கால்ஷீட்டை வீணடிக்க விரும்பாமல், தனது தயாரிப்பில் பி.வாசுவை வைத்து பரமசிவன் படத்தைத் தயாரிக்கிறார்.பட பூஜை விழாவில் மலேசிய அமைச்சர் டத்தோ சாமிவேலு, இயக்குநர்கள் பாலா, பாலுமகேந்திரா, தயாரிப்பாளர் கலைப்புலி தாணு, இசையமைப்பாளர்வித்யாசாகர் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.பரமசிவன் படத்தைத் தொடர்ந்து ஏவி.எம் நிறுவன தயாரிப்பில் உருவாகும் திருப்பதி படத்தில் அஜீத் நடிக்கவுள்ளார்.

Subscribe to Oneindia Tamil

கேரக்டருக்காக குறுகிய காலத்தில் உடலை வருத்தி மெலிந்த அஜீத்தின் விடாமுயற்சியைப் பார்த்து வியந்து போனேன் என்று ரஜினிகாந்த், அஜீத்தைப்பாராட்டியுள்ளார்.

இயக்குநர் பாலாவின் தயாரிப்பில், உருவாகவுள்ள புதிய படம் பரமசிவன். இதில் அஜீத் நாயகனாக நடிக்கிறார். பி.வாசு படத்தை இயக்குகிறார்.வித்யாசாகர் இசையமைக்கிறார். இப்படத்தின் பூஜை சனிக்கிழமை நடந்தது. இதில் ரஜினிகாந்த் கல்நது கொண்டு படத்தைத் தொடங்கி வைத்தார்.


நிகழ்ச்சியில் ரஜினி பேசுகையில், அஜீத்தை ஏகமாக பாராட்டினார். மிகக் குறுகிய காலத்தில், படத்தின் தேவைக்காக உடலை வருத்தி, மெலிந்துள்ளீர்கள்.உங்களது விடாமுயற்சி என்னை ஆச்சரியப்படுத்துகிறது. தொடர்ந்து இதேபோல உடலை மெயின்டெய்ன் செய்ய வேண்டும். அதற்கு யோகா உங்களுக்குஉதவியாக இருக்கும். உடலை கட்டுக் கோப்பாக வைத்துக் கொள்வது நடிகர்களுக்கு மிகவும் அவசியம். இந்தப் படம் மிகப் பெரும் வெற்றி பெறவாழ்த்துக்கள் என்றார் ரஜினி.

ரஜினியின் பாராட்டால் நெகிழ்ந்து போன அஜீத், அவரிடம் ஆசியும் பெற்றுக் கொண்டார். பின்னர் பி.வாசுவிடமும் தனது வாழ்த்துக்களைத் தெரிவித்தார்ரஜினி.

பாலா இயக்கத்தில் அஜீத் நானே கடவுள் படத்தில் நடிப்பதாக இருந்தது. ஆனால் கதை சரியாக அமையாத காரணத்தால் அப்படத்தை பாலாஒத்திவைத்துள்ளார். ஆனால் அஜீத் கால்ஷீட்டை வீணடிக்க விரும்பாமல், தனது தயாரிப்பில் பி.வாசுவை வைத்து பரமசிவன் படத்தைத் தயாரிக்கிறார்.

பட பூஜை விழாவில் மலேசிய அமைச்சர் டத்தோ சாமிவேலு, இயக்குநர்கள் பாலா, பாலுமகேந்திரா, தயாரிப்பாளர் கலைப்புலி தாணு, இசையமைப்பாளர்வித்யாசாகர் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

பரமசிவன் படத்தைத் தொடர்ந்து ஏவி.எம் நிறுவன தயாரிப்பில் உருவாகும் திருப்பதி படத்தில் அஜீத் நடிக்கவுள்ளார்.

Please Wait while comments are loading...

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil