Akhil Akkineni Reception: மகேஷ் பாபு முதல் சூர்யா வரை.. நாகார்ஜுனா மகனை வாழ்த்த படையெடுத்த ஸ்டார்ஸ்!
ஹைதராபாத்: பிரபல தெலுங்கு நடிகர் நாகார்ஜுனாவுக்கும் நடிகை அமலாவுக்கும் மகனாக பிறந்த அகில் அக்கினேனியின் திருமணம் கடந்த ஜூன் 6ம் தேதி நாகார்ஜுனாவின் இல்லத்திலேயே மிகவும் எளிமையான முறையில் அதிகாலை பிரம்மமுகூர்த்தத்தில் நடைபெற்றது. சிரஞ்சீவி உள்ளிட்ட சில பிரபலங்கள் மட்டுமே பங்கேற்றனர். இந்நிலையில், நாகார்ஜுனாவுக்கு சொந்தமான அன்னபூர்ணா ஸ்டூடியோஸில் மகன் அகில் அக்கினேனியின் திருமண வரவேற்பு விழா ஞாயிற்றுக்கிழமை மாலை நடைபெற்றது.
தெலுங்கு திரையுலகின் முன்னணி நடிகர்கள் பலரும் அந்த திருமண வரவேற்பு விழாவில் பங்கேற்று மணமக்களை மனதார வாழ்த்தினர். டோலிவுட் நடிகர்களை கடந்து, தற்போது தெலுங்கு இயக்குநர் இயக்கத்தில் நடிக்கவுள்ள நடிகர் சூர்யாவும் திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் பங்கேற்றுள்ளார்.

தம்பியின் திருமணத்துக்கு வந்த திரையுலக பிரபலங்கள், அரசியல் தலைவர்கள் என அனைவரையும் அண்ணன் நாக சைதன்யா அன்புடன் உபசரித்த விதத்தையும் ரசிகர்கள் பாராட்டி வருகின்றனர்.
அகில் அக்கினேனி திருமணம்: கடந்த ஜூன் 6ம் தேதி நாகார்ஜுனாவின் இளைய மகன் அகில் அக்கினேனி தனது காதலி ஜைனாப் என்பவரை திருமணம் செய்துக் கொண்டார். கடந்த ஆண்டு இறுதியில் நடிகர் நாக சைதன்யா நடிகை சோபிதா துலிபாலாவை 2வதாக திருமணம் செய்துக் கொண்ட நிலையில், அண்ணனின் திருமணத்தை தொடர்ந்து இந்த ஆண்டு தம்பி அகில் அக்கினேனியும் திருமணம் செய்துக் கொண்டார்.

பிரமாண்டமாக நடைபெற்ற ரிசப்ஷன்: நாக சைதன்யா - சோபிதா துலிபாலாவின் திருமணம் நடைபெற்ற அன்னபூர்ணா ஸ்டூடியோவிலேயே அகில் அக்கினேனியின் திருமண வரவேற்பு விழா நேற்று கோலாகலமாக நடைபெற்றது. தெலங்கானா முதலமைச்சர் ரேவந்த் ரெட்டி உள்ளிட்ட அரசியல் தலைவர்களும் திருமணத்தில் கலந்துக் கொண்டு மணமக்களை வாழ்த்தினர்.
மகேஷ் பாபு, ராம் சரண்: தெலுங்கு திரையுலகின் முன்னணி நடிகர்களான மகேஷ் பாபு, ராம் சரண், நானி உள்ளிட்ட பலரும் திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் கலந்துக் கொண்டு மணமக்களை வாழ்த்திய புகைப்படங்கள் வெளியாகி உள்ளன. ராஜமெளலியின் இயக்கத்தில் நடித்து வரும் மகேஷ் பாபுவின் லேட்டஸ்ட் லுக்கை பார்த்த ரசிகர்கள் அவரது புகைப்படங்களை வைரலாக்கி வருகின்றனர். ராம்சரணின் லேட்டஸ்ட் லுக்கும் ரசிகர்களை ரொம்பவே வசீகரித்து வருகிறது.

சூர்யாவும் பங்கேற்றார்: ஆர்ஜே பாலாஜி இயக்கத்தில் த்ரிஷாவுடன் சூர்யா நடித்து வந்த படத்தின் படப்பிடிப்பும் நிறைவடைந்த நிலையில், அடுத்ததாக வெங்கி அட்லூரி இயக்கத்தில் நடிக்கவுள்ள சூர்யா சமீபத்தில், இயக்குநருடன் இணைந்து பழனிக்கு சென்று சாமி தரிசனம் செய்தார். இந்நிலையில், நேற்று நடைபெற்ற திருமண வரவேற்பு நிகழ்ச்சியிலும் இயக்குநர் வெங்கி அட்லூரியுடன் இணைந்தே கலந்துக் கொண்டு அகில் அக்கினேனியை வாழ்த்தினார் சூர்யா.


Click it and Unblock the Notifications











