»   »  ஸ்பெஷல்ஸ்

ஸ்பெஷல்ஸ்

Posted By:
Subscribe to Oneindia Tamil

முன்பெல்லாம் ஹீரோயின்களுக்கு வரும் வாய்ப்புக்களைத் தான் அடுத்த ஹீரோயின் தட்டிச் செல்வார்கள்.

இப்போது குலுக்கல் நடிகைகளுக்குள் சான்ஸ் வேட்டையில் கடும் போரே நடந்து வருகிறது. குறிப்பாக தனக்குவரும் வாய்ப்புக்களைப் பறிக்க பெரும் கூட்டமே கிளம்பிவிட்டதாக புலம்புகிறார் அல்போன்ஸா.

முன்பு அல்போன்ஸாவுக்குப் போட்டியாக இருந்து வந்தது பாபிலோனா மட்டுமே. ஆனால், இப்போதுஅபிநயஸ்ரீயின் தாயார் அனுராதாவின் தீவிர முயற்சியால் அல்போன்ஸாவின் வாய்ப்புக்கள் அனைத்துமேஅபிநயஸ்ரீக்கே போய் வருகின்றன.

இதனால் வெறுத்துப் போய் தெலுங்குக்குச் சென்றார் அல்போன்ஸா. ஆனால், அங்கும் வந்துவிட்டார் அபிநயஸ்ரீ.இதில் அல்போன்ஸா தவிர ஜூனியர் சில்க்கின் வாய்ப்புக்களையும் அபிநயஸ்ரீ தனது திறமையால்வளைத்துவிடுகிறாராம்.

இதனால் இப்போது அபிநயஸ்ரீ மீது கடும் காட்டத்தில் உள்ளனர் அல்போனாவும் ஜூனியர் சில்க்கும்.

இவர்களே சான்சுக்கு அல்லாடிக் கொண்டிருக்க இடையில் வந்த லேகாவுஸ்ரீ வேறு போட்டியைதீவிரப்படுத்தியிருக்கிறார்.

அண்ணன் போதாதுன்னு தம்பி வேற..

அண்ணன் சிலம்பரசன் செய்யும் அலம்பல் போதாதென்று அவரது தம்பி குறளரசையும் நடிக்கக் கூட்டி வந்துள்ளார்டி.ராஜேந்தர்.

சிலம்பரசனின் அலை இப்போதுதான் தமிழ் சினிமாவில் ஆரம்பித்திருக்கிறது. ஆனால் அதற்குள் தன்னைரஜினியாக நினைத்துக் கொண்டு அவர் போடும் ஆட்டம் அனைவரையும் கலங்கடித்து வருகிறது

இப்போது சிலம்பரசனின் தம்பியையும் களத்தில் இறக்கி விட்டுள்ளார் டி.ஆர். அலை படத்தில் சிலம்பரசனின்தம்பியாக அவரது தம்பி குறளரசனே நடிக்கிறாராம். குழந்தை நட்சத்திரமாகவே 17 படங்களில் நடித்துவிட்டகுறளரசனுக்கு இது 18வது படமாம்.

சிலம்பரசனின் ஆடைகளை டிசைன் செய்வது அவரது தங்கை இலக்கியாதானாம்.

வீட்டையே கோடம்பாக்கத்துக்குள் இறக்கி சினிமாவை ஒரு வழி செய்து விட முடிவெடுத்துவிட்டார்போலிருக்கிறது டி.ஆர்.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil