»   »  திருட்டு ரசிகர்களிடம் சிக்கிய நடிகர்!

திருட்டு ரசிகர்களிடம் சிக்கிய நடிகர்!

Subscribe to Oneindia Tamil

தெலுங்கு திரையுலகின் இளம் நடிகரும், மெகா ஸ்டார் சிரஞ்சீவியின் மைத்துனர் மகனுமான அல்லு அர்ஜூனிடம் ரசிகர்கள் என்ற போர்வையில்திருடர்கள் சூழ்ந்த கொண்டு, பர்ஸ், செல்போன், தங்கச் சங்கிலி, மோதிரம் உள்ளிட்டவற்றைப் பறித்துக் கொண்டு எஸ்கேப் ஆகினர்.

சிரஞ்சீவியின் மைத்துனர் அல்லு அரவிந்த். இவரது சகோதரியைத்தான் சிரஞ்சீவி மணம் புரிந்துள்ளார். அரவிந்த்தின் அல்லு அர்ஜூன். தெலுங்குத்திரையுலகின் முன்னணி இளம் நடிகர்.

சமீபத்தில் இவர் நடித்த தேசமுதுரு படம் ரிலீஸாகி வெற்றி பெற்றது. 100வது நாள் விழா குண்டூரில் உள்ள ஸ்டேடியம் ஒன்றில் நடந்தது. விழாவில்ஆயிரக்கணக்கான ரசிகர்கள் கலந்து கொண்டனர்.

விழா முடிந்த பின்னர் அல்லு அர்ஜூனை ரசிகர்கள் சூழ்ந்து கொண்டனர். அவரைச் சுற்றி வளைத்த சில ரசிகர்கள் உண்மையில் திருடர்கள். ரசிகர்கள்என்ற போர்வையில் அர்ஜூனை சூழ்ந்து நின்று கொண்டு வாழ்க கோஷம் போட்டுக் கொண்டே வைர மோதிரம், தங்கச் சங்கிலி, பர்ஸ், தங்ககைக்கடிகாரம், பிரேஸ்லெட், செல்போன் உள்ளிட்டவற்றை பறித்துக் கொண்டனர்.

இதனால் அதிர்ந்து அர்ஜூனால் ஒன்றும் செய்ய முடியவில்லை. தன்னைசத் சற்றிலும் நின்றவர்கள் ரசிகர்கள் அல்ல, திருடர்கள் என்பதை அதிர்ந்துஅவர் அதிர்ந்து போனார்.

மிகுந்த வேதனை அடைந்த அவர் குண்டூர் போலீஸில் புகார் கொடுத்துள்ளார். அவர்களும் வழக்குப் பதிவு செய்து திருட்டு ரசிகர்களைத் தேடிவருகின்றனர்.

பொது நிகழ்ச்சியில், இவ்வளவு துணிச்சலாக திருடர்கள் தங்களது கைவரிசையைக் காட்டியது எனக்கு அதிர்ச்சியையும், வேதனையையும்அளித்துள்ளது என்று கூறியுள்ளார் அர்ஜூன்.

Please Wait while comments are loading...

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil