twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    உங்க பொடணிக்குப் பின்னாடிதான் நிக்கிறேன்.. மறக்க முடியாத 'அல்வா' வாசு!

    By Vignesh Selvaraj
    |

    சென்னை: சினிமாவில் சில காட்சிகள் மட்டுமே வந்து போனாலும் ரசிகர்களின் மனதில் இடம்பிடிக்கிற வாய்ப்பு சிலருக்கு மட்டுமே வாய்க்கும். அதிலும், அவர்களது நடிப்பைக் காலம் கடந்தும் பேசுவதெல்லாம் அரிதினும் அரிது.

    மறைந்த காமெடி நடிகர் 'அல்வா' வாசு சிறிய கதாபாத்திரங்களில் இதுவரை 900 படங்களுக்கும் மேல் நடித்திருக்கிறார். வடிவேலுவோடு அவர் நடித்த நகைச்சுவைக் காட்சிகளில் தனது அலட்டல் இல்லாத நடிப்பால் ரசிகர்களால் விரும்பப்பட்டார். வடிவேலுவின் நடிப்புக்கு ஈடுகொடுத்து நடித்து தன்னையும் கவனிக்க வைத்தவர் அல்வா வாசு. ஆனால், அவர் காமெடிக்கு வந்ததே யதேச்சையாகத்தான்.

    இசையமைப்பாளராவதற்காகச் சென்னைக்குக் கிளம்பியவர், உதவி இயக்குநராகி, காமெடி நடிகராகிப் போனார். மிகுந்த கற்பனை வளம் கொண்ட வாசு, எப்படியாவது ஒருநாள் இயக்குநர் ஆகிவிடலாம் என்றே எண்ணியிருந்தாராம். கடைசிவரை, இயக்குநராகும் ஆசை கைகூடாமலேயே காற்றோடு கலந்துவிட்டது வாசுவின் ஆன்மா.

    நகைச்சுவை வசனங்கள் :

    அவர் நடித்த நகைச்சுவைக் காட்சிகள், அவர் கும்பல் நடிகர்களில் ஒருவர் அல்ல எனத் தெளிவாகச் சொல்லும்.
    "ஊருக்குள்ள ஒருபய நம்மளயே நம்புறதில்ல"
    "உங்க ஆட்டையே புதுரகமா இருக்குண்ணே..."
    ''வக்கீல் வண்டுமுருகன்ன்ன்...' என வாய்ஸிலேயே வண்டி ஓட்டுவார்.
    "என்ன கேள்வி கேட்டாலும் சிரிச்சிக்கிட்டே பதில் சொல்லுங்க பாஸ்! அப்பத்தான் நமக்குள்ள இருக்குற பயம் வெளில தெரியாது!"
    "சிந்தனைச் சிற்பி... சயனைடு குப்பி..." எனப் பேசி வடிவேலுவையே டரியல் ஆக்குவார். அவரது பேச்சு நடையும் குரலும், வசனங்களைப் பேசும்போதான முகபாவனையும் எங்கும் தனித்துத் தெரியக்கூடியது.

    கூலிங் கிளாஸ்... ஆபரேஷன் :

    கூலிங் கிளாஸ்... ஆபரேஷன் :

    "பாஸ்... இப்படி போனாலும் சாப்பிடுற இடம் வந்துடும்..."
    "உங்க பொடணிக்குப் பின்னாடிதான் நிக்கிறேன் ஓவர் ஓவர்!"
    என வடிவேலுவோடு ரணகளத்திலும் கிச்சுக்கிச்சு மூட்டியவர்.

    கிடைத்த கேப்பில் எல்லாம் சிக்ஸர் அடிப்பவர் :

    காமெடிக்கான ஸ்கோப் இல்லாத இடங்களிலும் ஒரு தேர்ந்த கற்பனை கொண்டவனால் விளையாட முடியும் என அல்வா வாசு நிரூபித்த படம் ஆடுகளம். ஆடுகளம்' படத்தின் சேவல் சண்டைக்கு மைக் அனௌன்ஸ்மென்ட் இவர்தான்.
    "ஹலோ மைக் டெஸ்டிங் 1,2,3 என்னயா கொர கொரன்னு கேக்குது" என அவர் ஸ்டைலில் நையாண்டி செய்வார்.

    காமெடியும் யதார்த்தமும்:

    அல்வா வாசு ஒரு உயரமான கட்டிடத்தின் உச்சியில் தற்கொலை செய்ய முயன்று பயந்து உட்கார்ந்திருப்பார். அவர் எப்படா தற்கொலை செய்து கொள்வார் என்று ஒரு பெருங்கூட்டமே பந்தயம் கட்டி ஆர்வத்துடன் காத்திருக்க, ஆர்வக் கோளாறு வடிவேலு மட்டும் அவரை நெருங்கிப் போய்,' 'டேய்..டேய்... இப்ப என்ன பண்ணப்போற?' என்பார்.
    ‘கீழ குதிக்கப் போறேன்'
    'ஆமா அதுக்கு ஏன் உக்காந்திருக்க?'
    ‘நின்னு குதிக்க பயமாருக்கு. அதான்'
    ‘சரி இப்ப உனக்கு என்னடா பிரச்சினை?
    ‘என் காதல் ஃபெயிலாயிடுச்சி. நான் லவ் பண்ண பொண்ணு திடீர்னு ஒருநா அவ புருஷன் கூட ஓடிப்போயிட்டா'
    ‘அட நன்னாரிப் பயலே.. சரி இப்ப நீ கீழ குதிச்சும் சாகலை. அப்ப என்ன செய்வ.. அப்ப என்ன செய்வ?'
    'இந்தா இந்தக் கயிறுல தொங்குவேன்'
    'அப்பயும் சாகலைன்னா?'
    ‘இந்த இந்தக் கத்தி எடுத்து கழுத்தை அறுத்துக்குவேன்'
    ‘அட அப்பயும் சாகலைன்னா?'
    ‘இருக்கவே இருக்கு வெடிகுண்டு'
    ‘அதெங்கடா இருக்கு?
    ‘அடப் போங்கண்ணே அதுமேலதான நீங்க உக்காந்திருக்கீங்க. எந்திரிச்சிராதீங்க வெடிச்சிரும்' என்று போகும் அந்தக் காமெடியை அப்படியே மனதில் ஓட்டிப் பாருங்கள். வடிவேலுவுக்கு இணையாகக் கவுன்டர் அடிக்கவும், கிடைக்கிற கேப்பில் எல்லாம் காமெடி சிக்ஸர் அடிக்கவும் செய்யும் ஒரு நல்ல நடிகன் அல்வா வாசு...!

    நிச்சயம் பெரிய இழப்புதான்.

    English summary
    Alwa vasu was famous for his dialogues and effortless performances. Some of his famous dialogues in the movies.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X