twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    மலையாள 'மைனா'வுக்கு இன்னிக்கு ஹேப்பி பர்த்டே! #HBDAmalapaul

    By Shankar
    |

    சென்னை : மலையாள தேசத்திலிருந்து வந்து தமிழ் ரசிகர்களால் கொண்டாடப்பட்ட நடிகைகளில் ஒருவரான அமலாபாலின் 26-வது பிறந்ததினம் இன்று.

    ஆரம்பத்தில், யதார்த்தமான வேடங்களில் நடித்து ரசிகர்களின் அபிமானத்தைப் பெற்ற அமலாபால், பின்னர் கமர்ஷியல் படங்களிலும் தனது நடிப்பால் முத்திரை பதித்தார்.
    திருமணத்திற்குப் பிறகு கொஞ்சம் கேப் விட்டவர், இப்போது அடுத்த ரவுண்டுக்கு ரெடியாகி இருக்கிறார். தமிழ், மலையாளம் என இப்போதும் அமலாபாலிடம் சிலபல படங்கள் கைவசம் இருக்கின்றன.

    லால் ஜோஸின் அறிமுகம்

    லால் ஜோஸின் அறிமுகம்

    கோலிவுட்டில் மைனாவாகப் பறந்த மலையாளத்து வரவு நடிகை அமலாபால். கேரள மாநிலம் எர்ணாகுளத்தின் அலுவாவில் 1991-ல் பிறந்தவர் அமலாபால். மாடலிங் துறையில் இருந்தவரை மலையாள இயக்குநர் லால்ஜோஸ் சினிமாக் கரைக்கு அழைத்து வந்தார். லால் ஜோஸ் இயக்கிய 'நீலத்தாமரா' படத்தில் ஒரு முக்கிய வேடத்தில் அறிமுகமானார் அமலா பால்.

    மலையாள வரவு

    மலையாள வரவு

    மலையாளப் படத்தில் ஒரு முக்கிய வேடத்தில் நடித்த கையோடு தமிழ் சினிமாவில் களமிறங்கிய அமலாபால் 'வீரசேகரன்' எனும் படத்தில் நாயகியாக நடித்தார். அதன்பிறகு சாமி இயக்கத்தில் 'சிந்து சமவெளி' படத்தில் நடித்தார். ஆனால், 'சிந்து சமவெளி' படம் ரிலீஸில் முந்திக் கொண்டது. இப்படத்தில் அமலாபாலின் கேரக்டர் வெகுவாக விமர்சிப்புக்கு உள்ளானது.

    மைனா மைனா

    மைனா மைனா

    பிரபு சாலமன் இயக்கத்தில் நடித்த 'மைனா' படம்தான் அமலாபாலை உச்சத்திற்குக் கொண்டு சென்றது. அந்தப் படத்தில் நடித்ததற்காக, தமிழக அரசின் விருதையும் சிறந்த நடிகைக்கான பல விருதுகளையும் அள்ளினார். அதற்குப் பிறகு 'தெய்வத் திருமகள், 'வேட்டை' என நல்ல படங்களாகத் தேர்ந்தெடுத்து நடிக்கத் தொடங்கினார். 'கத்தி' படத்தில் டாப் ஹீரோ விஜய், 'வேலையில்லா பட்டதாரி' படத்தில் தனுஷ் என பெரிய ஹீரோக்களோடு சேர்ந்து நடித்தார்.

    ஏ.எல்.விஜய்யுடன் திருமணம்

    ஏ.எல்.விஜய்யுடன் திருமணம்

    தமிழ், மலையாளம், தெலுங்கு ஆகிய மொழிகளில் அமலாபால் தொடர்ந்து நடித்துக்கொண்டிருக்கும்போதே இயக்குநர் ஏ.எல்.விஜய்யை திருமணம் செய்துகொண்டார். திருமணத்திற்குப் பிறகு நடிப்பதைக் குறைத்துக் கொண்ட அமலாபால், தனக்கு முக்கியத்துவம் உள்ள கேரக்டர்களில் மட்டுமே நடித்து வந்தார்.

    திருமணத்திற்கு பிறகு

    திருமணத்திற்கு பிறகு

    கணவர் ஏ.எல்.விஜய் அனுமதியுடன் நடிகர் சூர்யாவுடன், 'பசங்க 2' படத்திலும் தனுஷ் தயாரித்த 'அம்மா கணக்கு' படத்திலும் நடித்தார். இப்படி சினிமாவில் மீண்டும் ஒரு ரவுண்டு வர நினைத்த அமலாபால் கணவரை விவாகரத்து செய்து திரையுலகினர் மற்றும் ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தினார்.

    அடுத்த ரவுண்ட்

    அடுத்த ரவுண்ட்

    இப்போது அடுத்த ரவுண்டை தொடங்கியிருக்கும் அமலாபால் 'வேலையில்லா பட்டதாரி 2', 'திருட்டு பயலே 2', 'பாஸ்கர் ஒரு ராஸ்கல்', 'வட சென்னை' ஆகிய படங்களில் நடித்திருக்கிறார். அடுத்து, தமிழில் 'சின்ட்ரெல்லா' படத்திலும், மலையாளத்தில் நிவின் பாலி நடிக்கும் 'காயங்குளம் கொச்சுண்ணி' படத்திலும் நடித்து வருகிறார் அமலாபால்.

    வாவ்.. அமலாபால்

    வாவ்.. அமலாபால்

    பல நடிகைகள் சில படங்களின் தோல்விக்குப் பிறகு சினிமாவுக்கு முழுக்கு போட்டுவிட்டு செட்டிலாகி விடுவார்கள். முதல் சில படங்களில் புகழ்பெறவில்லை என்றாலும், அடுத்தடுத்த படங்களின் மூலம் ரசிகர்களை ஈர்த்த அமலாபால் சினிமாவை விடாமல் கைக்குள்ளேயே வைத்திருக்கிறார். விவாகரத்துக்குப் பின்னும் நாயகியாக நடித்து, தனது நம்பிக்கையையும் ரசிகர்களிடையே விதைக்கும் அமலாபாலுக்கு பிறந்தநாள் வாழ்த்துகள்!

    English summary
    Amala paul's 26th birthday is today and she is one of the actresses who have come from Malayalam. Amala Paul, who has been fond of fans with realistic performances, is playing the role of a sowing believer in the film industry.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X