Sivakarthikeyan:ரூ. 300 கோடியெல்லாம் அசால்ட்.. சிவகார்த்திகேயன் பாக்ஸ் ஆபீஸ் மன்னனாக மாறிய கதை!
சென்னை: நடிகர் சிவகார்த்திகேயன் தமிழ் சினிமாவின் வளர்ந்து வரும் நடிகர்களில் ஒருவராக, அதிலும் கவனிக்கத் தகுந்தவராக உள்ளார். நடிகராக மட்டும் இல்லாமல், பாடலாசிரியராக, பாடகராக, தயாரிப்பாளராகவும் மிளிர்கிறார். சினிமாவில் தான் கால் வைக்கும் துறைகளில் எல்லாம், சாதித்து வருகின்றார். கடைசியாக அவரது நடிப்பில் வெளியான அமரன் படம் வசூல் ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் மாபெரும் வெற்றிப் படமாக மாறியது. சூர்யா போன்ற உச்ச நடிகரின் படம் ரிலீஸ் ஆகும்போது கூட, திரையரங்க உரிமையாளர்கள் கங்குவாவிற்காக திரைகளை ஒதுக்க யோசித்தார்கள். அப்படியான இடத்திற்கு தன்னை உயர்த்திக் கொண்ட சிவகார்த்திகேயன் பாக்ஸ் ஆபீஸ் மன்னனாக உருவான கதை குறித்து இந்தத் தொகுப்பில் காணலாம்.
திருச்சி பையன், விஜய் டிவி வளர்ப்பு என்பதெல்லாம் சிவகார்த்திகேயனின் ஆரம்பகால அடையாளம். ஆனால் இன்றைக்கு ஒரே ஆண்டில் பொங்கல் மற்றும் தீபாவளிக்கு படங்களை ரிலீஸ் செய்து ரசிகர்களுக்கு ட்ரீட், தயாரிப்பாளர் மற்றும் விநியோகிஸ்தர்களுக்கு உறுதியான லாபத்தினைச் சம்பாதித்துக் கொடுக்கும் நடிகராக மாறியுள்ளார். சின்னத்திரையில் நிகழ்ச்சித் தொகுப்பாளராக இருந்த சிவகார்த்திகேயனை தமிழ் சினிமாவின் கதாநாயகனாக அறிமுகம் செய்து வைத்தது இயக்குநர் பாண்டிராஜ்.

மெரினா படத்தின் மூலம் தமிழ் சினிமாவுக்கு கதாநாயகனாக வந்த சிவகார்த்திகேயனைப் பார்த்த பலரும் நினைத்தது, காமெடி படங்களில் நடித்தால் ஏதோ பத்தோட பதினொன்றாக இருக்கலாம் எனக் கமெண்ட் அடித்தார்கள். இந்தக் கமெண்ட்க்கு ஏற்றவகையில், சிவகார்த்திகேயனும் முழுக்க முழுக்க நகைச்சுவைக் காட்சிகள் அடங்கிய, படங்களையே தேர்வு செய்து நடித்தார். இவரது ஆரம்பகால சினிமா வாழ்க்கையில் மிகவும் முக்கியமான படங்கள் என்றால், எதிர்நீச்சல் மற்றும், காக்கிச் சட்டை படத்தினைக் கூறலாம்.

ஆக்ஷன்: அதிலும் குறிப்பாக காக்கிச் சட்டை படம், சிவகார்த்திகேயனுக்கு ஆக்ஷன் வரும், அது மக்களால் ஏற்றுக்கொள்ளப்படும் எனவும் காட்டிய படம். இந்தப் படத்தில் காவல் அதிகாரியாக சிவகார்த்திகேயன் நடித்திருப்பார். குறிப்பாக கான்ஸ்டெபிள் கதாபாத்திரம். இந்தப் படத்தில் மட்டும் ஒருவேளை சிவகார்த்திகேயனின் கதாபாத்திரம், காவல் துறையில் உயர்ந்த பொறுப்பில் இருக்கும் கதாபாத்திரமாக இருந்தால், மக்கள் சிவகார்த்திகேயனை கொண்டாடியிருப்பார்களா என்றால் கேள்விக் குறிதான். மேலும் இந்தப் படத்திற்கு முன்னர் வெளியான மான் கராத்தே படமும் சிவா ஆக்ஷன் நாயகனாக மாற அடித்தளமிட்ட படம் எனலாம்.

இமேஜ் செட்டிங்: படத்தின் முடிவில் இன்ஸ்பெக்ட்டராக வரும் சிவகார்த்திகேயனை மக்கள் ஏற்றுக் கொண்டார்கள். இப்படி தனது இமேஜை சிறுக சிறுக உருவாக்கிக் கொண்டவர் சிவகார்த்திகேயன். மேலும் தனது படங்களின் கதை குடும்ப ரசிகர்கள் மத்தியில் வரவேற்பினைப் பெறுமா என யோசித்து தேர்வு செய்து நடித்து வருகின்றார். ஒரு கதை கிராமத்து பின்புலத்தில் தேர்வு செய்தால், அடுத்த கதையில் நகரத்து கதைக்களத்துக்கு வந்து விடுகின்றார். இப்படி வளர்ந்து வந்த சிவகார்த்திகேயன் இன்று பாக்ஸ் ஆபிஸில் ரூபாய் 300 கோடிகள் வசூல் செய்த மன்னனாக மாறி நிற்கின்றார்.
வசூல் வேட்டை: தமிழ் சினிமாவிலேயே மொத்தம் நான்கு நடிகர்கள் மட்டுமே ரூபாய் 300 கோடிகள் பாக்ஸ் ஆபிஸில் வசூல் செய்த நடிகர்களாக உள்ளனர். இதில் சிவகார்த்திகேயனும் ஒருவர். சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், கமல்ஹாசன், தளபதி விஜய் என இருந்த இந்த பட்டியலில் சிவகார்த்திகேயன் என தனது பெயரினையும் சேர்த்துக் கொண்டுள்ளார் சிவா. சிவகார்த்திகேயன் நடிப்பில் ரூபாய் 50 கோடிகள் வசூல் செய்த முதல் படம் மான் கரத்தே. அதன் பின்னர், ரூபாய் 75 கோடிகள் வசூல் செய்த படம் ரெமோ.
பாக்ஸ் ஆபீஸ் மன்னன்: 2016ஆம் ஆண்டு ரெமோ படம் வெளியானது. அதன் பின்னர் சுமார் 5 ஆண்டுகளுக்கு சிவகார்த்திகேயனின் மார்க்கெட் டீசெண்ட்டாகவே இருந்தது. இவர் எப்போது ரூபாய் 100 கோடிகள் கிள்ப்பில் இணைவார் என பலரும் எதிர்பார்த்துக் கொண்டு இருந்தனர். 2021ஆம் ஆண்டு கொரோனா கால கட்டத்திற்கு மத்தியில் ரிலீஸ் செய்யப்பட்ட படம் டாக்டர். இந்தப் படம் வசூலில் ரூபாய் 100 கோடிகள் அள்ளி, சிவாவை ரூபாய் 100 கோடிகள் கிளப்பிலும் சேர்த்தது. அடுத்த ஆண்டே வெளியான டான் படம் பெரும் வெற்றிப் படமாக மாறியது. மேலும் படம் ரூபாய் 125 கோடிகளை பாக்ஸ் ஆபிஸில் வசூல் செய்தது. அதன் பின்னர் கடைசியாக வெளியான அமரன், சிவகார்த்திகேயனை தற்போது 300 கோடிகள் வசூல் பட்டியலில் சேர்த்துள்ளது. மேலும் வசூல் செய்தும் வருகின்றது. அமரன் படத்தில் துப்பாக்கிகளில் விளையாடியுள்ளார் என்றுதான் கூறவேண்டும். இதனால் தமிழ் சினிமாவின் பாக்ஸ் ஆபீஸ் மன்னனாக சிவகார்த்திகேயன் மாறியுள்ளார். அடுத்து இவரது நடிப்பில் ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் இவரது 23வது படம் உருவாகிக் கொண்டு உள்ளது. படத்தினை அடுத்த ஆண்டு மே மாதத்தில் ரிலீஸ் செய்ய படக்குழு திட்டமிட்டு வருவதாக கூறப்படுகின்றது.


Click it and Unblock the Notifications











