அடேங்கப்பா.. அப்பாவுடன் டூயட்.. மகனுடனும் ஜோடி போட்ட பிரபல நடிகைகள் பற்றி தெரியுமா?

சென்னை: ரஜினிகாந்த் உடன் கைக்குழந்தையாக நடித்த நடிகை மீனா அவருடனே தில்லான தில்லான என ஆடியது எல்லாம் ஏகப்பட்ட ட்ரோல்களை சந்தித்தன.

ஆனால், நடிகர்கள் சினிமாவில் கிடைக்கும் வாய்ப்பை பயன்படுத்திக் கொண்டு எந்த கதாபாத்திரம் கிடைத்தாலும் நடிக்க வேண்டும் என்பது தான் அவர்களது பணி. மீனாவை விட அப்பா மற்றும் மகன் நடிகர்களுடன் ஜோடி போட்ட இரண்டு பிரபல நடிகைகள் நடித்துள்ளனர்.

நடிகர் திலகம் என பாராட்டப்பட்ட சிவாஜி கணேசன் மற்றும் அவரது மகன் பிரபு இருவருடன் தான் அந்த இரண்டு நடிகைகளும் ஜோடி போட்டு டூயட் பாடி ஆடி நடித்துள்ளனர்.

ரஜினியுடன் மீனா

ரஜினியுடன் மீனா

எங்கேயோ கேட்ட குரல் மற்றும் அன்புள்ள ரஜினிகாந்த் படங்களில் குழந்தை நட்சத்திரமாக ரஜினி அங்கிள் நடித்த காட்சிகளை பார்த்து வியந்த ரசிகர்கள் 1993ம் ஆண்டு எஜமான் படத்தில் ஜோடி போட்டு நடித்ததை பார்த்து ஷாக் ஆனார்கள். எஜமான், வீரா மற்றும் முத்து என அடுத்தடுத்து ரஜினிகாந்த் உடன் இணைந்து நடித்த மீனா பற்றி ஏகப்பட்ட ட்ரோல்களும் வெளியாகின. அதன் பின்னர் ரஜினியுடன் இணைந்து நடிக்காமலே போய்விட்டார் மீனா. கடைசியாக அண்ணாத்த படத்தில் ரஜினியின் மாமா பொண்ணாக நடித்திருப்பார்.

அப்பா மகனுடன்

அப்பா மகனுடன்

மீனாவை விடுங்க பாஸ் அதுக்கு முன்னாடியே தமிழ் சினிமாவில் அப்பாவுடனும் மகனுடன் ஜோடி போட்டு நடித்த இரு பிரபல நடிகைகள் பற்றி தெரியுமா என இரு நடிகைகள் பற்றிய தகவல்கள் வலம் வருகின்றன. சிவாஜி கணேசன் மற்றும் பிரபுவுடன் தான் அவர்கள் ஜோடி போட்டு நடித்துள்ளனர்.

அம்பிகா, ராதா

அம்பிகா, ராதா

80களில் தமிழ் சினிமாவில் ஹீரோயின்களாக கலக்கியவர்கள் அக்கா தங்கைகளான அம்பிகா மற்றும் ராதா. அவர்கள் இருவரும் தான் சிவாஜி கணேசன் உடனும் அவரது மகன் பிரபுவுடனும் ஜோடி சேர்ந்து நடித்துள்ள நடிகைகள் என்பது சினிமா வரலாற்று பக்கங்களில் மறக்க முடியாத ஒன்றாக பதிவாகி உள்ளது.

முதல் மரியாதை

முதல் மரியாதை

இயக்குநர் பாரதிராஜா இயக்கத்தில் சிவாஜி, வடிவுக்கரசி நடித்த முதல் மரியாதை படத்தில் பூங்காற்று திரும்புமா.. என் பாட்ட விரும்புமா என சிவாஜி பாட அதற்கு எசப்பாட்டாக ராசாவே வருத்தமா.. ஆகாயம் சுருங்குமா.. என பாட்டுப் பாடி ஒட்டுமொத்த தமிழ் சினிமா ரசிகர்களையும் இப்படி ஒரு ஜோடி சிவாஜிக்கா என வியக்க வைத்து இருந்தது.

24 வயது குறைவு

24 வயது குறைவு

வாழ்க்கை படத்தில் சிவாஜி கணேசன் 56 வயதில் 22 வயதான நடிகை அம்பிகாவுடன் ஜோடி போட்டு நடித்த நிலையில், என்ன சிவாஜி 24 வயசு சின்ன பொண்ணுக்கூட ஜோடி போட்டு நடிக்கிறாரே என அப்போதே கடும் விமர்சனங்கள் கிளம்பின. அப்பா நடித்த நடிகைகளுடன் மகன் பிரபுவும் ஜோடி போட்டு நடித்ததும் அப்போது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

பிரபுவுடன் ஜோடி

பிரபுவுடன் ஜோடி

அக்கா, தங்கை இருவருமே சிவாஜியுடன் ஜோடி போட்டு நடித்ததை போலவே மகன் பிரபுவுக்கும் ஜோடியாக நடித்துள்ளனர். தலைமகன், வெள்ளை ரோஜா படங்களில் பிரபுவுடன் இணைந்து அம்பிகா நடித்துள்ளார். அதே போல ஆனந்த், அண்ணா நகர் முதல் தெரு, நீதியின் நிழல் உள்ளிட்ட படங்களில் பிரபுவுடன் ராதா ஜோடி போட்டு நடித்துள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X