»   »  அம்பிக்கு வந்த ஆசை! சூப்பர் ஸ்டாரின் முன்னாள் நாயகிகளில் முக்கியமானவரான அம்பிகாவுக்கு விபரிதமான ஆசை வந்துள்ளதாம். அதாவதுரஜினிக்கு அக்கா அல்லது அம்மா வேடத்தில் நடிக்க வேண்டும் என்பது தான் அந்த பயங்கர ஆசை!

அம்பிக்கு வந்த ஆசை! சூப்பர் ஸ்டாரின் முன்னாள் நாயகிகளில் முக்கியமானவரான அம்பிகாவுக்கு விபரிதமான ஆசை வந்துள்ளதாம். அதாவதுரஜினிக்கு அக்கா அல்லது அம்மா வேடத்தில் நடிக்க வேண்டும் என்பது தான் அந்த பயங்கர ஆசை!

Posted By:
Subscribe to Oneindia Tamil

சூப்பர் ஸ்டாரின் முன்னாள் நாயகிகளில் முக்கியமானவரான அம்பிகாவுக்கு விபரிதமான ஆசை வந்துள்ளதாம். அதாவதுரஜினிக்கு அக்கா அல்லது அம்மா வேடத்தில் நடிக்க வேண்டும் என்பது தான் அந்த பயங்கர ஆசை!

ரஜினியின் ஆரம்ப கால நாயகிகளில் ஒருவர் அம்பிகா. ரஜினியுடன் சேர்ந்து தொடர்ந்து பல படங்களில் நடித்துள்ளார்.அம்பிகாவின் சூப்பர் ஒத்துழைப்பு மற்றும் நெளிவு சுளிவுடன் நடந்து கொண்ட பாங்கினால் தொடர்ந்து சூப்பர் ஸ்டார்மட்டுமல்லாது கமலஹாசனுடனும் பல படங்களில் நடித்துள்ளார்.

அம்பிகாவுக்கு சற்றும் சளைக்காத அவரது தங்கையான ராதாவும், ரஜினி, கமலுடன் நிறையப் படங்களில் நடித்துள்ளனர். காலம்மாறியது. ஹீரோயின்களுக்கு வயசானது, இதனால் ரஜினி, கமலுடன் ஜோடி சேரும் வாய்ப்பை இழந்தனர் அம்பிகா, ராதா போன்றமுன்னாள் நாயகிகள்.

இப்போதெல்லாம் ரஜினியும், கமலும் புத்தம் புது சிட்டுக்களுடன் வேடம் கட்டி கலக்கி வருகின்றனர். நாயகிகளுக்கு ஆகும்வயது, இவர்களுக்கு மட்டும் ஏறாமல் அப்படியே இருப்பதுதான் ஆச்சரியத்திலும் பேராச்சர்யம்.


இப்போது ரஜினியுடன் ஜோடி போட்ட முன்னாள் நாயகிகள் சிலர், மீண்டும் ரஜினியுடன் சேர்ந்து நடிக்க பேரார்வம் கொண்டுபல்வேறு வழிகளில் தூது விட ஆரம்பித்துள்ளனராம். அதில் முக்கியமானவர் அம்பிகா.

ரஜினியுடன் சேர்ந்து கவர்ச்சியாகவும், இழைவாகவும் நடித்து ரசிகர்களைக் கவர்ந்த அம்பிகா, இப்போது அம்மா வேடங்களிலும்,அக்கா வேடங்களிலும் நடித்துக் காலம் தள்ளி வருகிறார். இடையில் வடிவேலுவுடன் சேர்ந்து இவர் கிசுகிசுக்கப்பட்டார்.

ரஜினி ஜோடியே எனது கஸ்டடியில் என்று வடிவேலு பெருமையாக கூறிக் கொள்ளும் அளவுக்கு இருவருக்கும் இடையே நட்புஏற்பட்டதாகவும் கூறப்பட்டது. இந்த நிலையில் அதிமுகவில் சேர்ந்து கேரள மாநில அதிமுக பொறுப்பையும் பெற்ற அம்பிகாதற்போது படங்கள் அதிகம் இல்லாமல் வீட்டில் ரெஸ்ட் எடுத்து வருகிறார்.

இந்த நிலையில் ரஜினியுடன் மீண்டும் சேர்ந்து நடிக்க முயற்சிகளை எடுத்து வருகிறாராம் அம்பி. பல முன்னாள்நடிகைகளுக்கு (சுஜாதா, ஸ்ரீவித்யா போன்றோருக்கு) ரஜினி வாய்ப்பு கொடுத்துள்ளார். அதேபோல எங்களுக்கும் ஒரு வாய்ப்புகொடுக்கலாமே? ஹீரோயினாக நடிக்கும் வாய்ப்பு கிடைக்காவிட்டாலும் பரவாயில்லை, அக்கா ரோல், அம்மா ரோல், அண்ணிரோல் என சின்னச் சின்ன ரோல்கள் கொடுத்தாலும் நடிக்க நாங்கள் தயாராகவே இருக்கிறோம்.


இதையெல்லாம் ரஜினி காதுக்குக் கொண்டு செல்வோம் என்று அம்பிகா தரப்பில் கூறப்படுகிறது. ரஜினியின் சிவாஜி படத்தில்எப்படியாவது ஒரு துக்கடா ரோலையாவது பிடித்து விட வேண்டும் என்று அம்பிகா படு தீவிரமாக முயற்சித்து வருகிறாராம்.

இதற்காக ரஜினியின் நெருங்கிய நண்பர்களான தெலுங்கு மோகன்பாபு, கன்னடம் அம்பரீஷ் ஆகியோரையும் அவர்ரெக்கமண்டேஷனுக்காக அணுகியுள்ளாராம். கன்னட அம்பியும், அம்பிகாவும் சேர்ந்து சில கன்னடப் படங்களில் நடித்துள்ளனர்,

அதேபோல மோகன்பாபுவுடனும் அம்பிகா சில படங்களில் ஜோடி போட்டுள்ளார். இந்த முன்னாள் நட்பைப் பயன்படுத்திசூப்பர் ஸ்டாரை அணுக முயற்சித்து வருகிறாராம் அம்பிகா. ரஜினிக்கு அக்காவாக அம்பியை நினைக்கவே பயமா கீது மாமே!

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil