நீத்து சந்திராவுடன் குத்தாட்டம் போடும் அமீர்!!

ஜெயம் ரவியை வைத்து இயக்கும் ஆதி பகவனின் இவரும் ஒரு முக்கிய வேடத்தில் நடிப்பது தெரிந்திருக்கும்.
இப்போது, மிஷ்கின் இயக்கும் யுத்தம் செய் படத்தில் ஒரு குத்தாட்டம் போடுகிறாராம் அமீர்.
பொதுவாகவே, மிஷ்கின் படங்களில் இடம் பெறும் இந்த ரக பாடல்கள் சூப்பர் ஹிட் ஆகிவிடும். மஞ்சள் சேலையில் கவர்ச்சியாக நடிகை ஆட்டம் போட, வில்லன் நடிகர் முன்னிலையில் அந்தப் பாட்டு அரங்கேறும். சித்திரம் பேசுதடி வாளமீனும், அஞ்சாதே 'கத்தாழக் கண்ணால...' பாடல்கள் அப்படிப்பட்டவைதான்.
யுத்தம் செய் படத்திலும் அதே ஸ்டைலில் மஞ்சள் சேலை அணியவிருப்பவர் நீத்து சந்திரா. அவருடன் ஆடப்போகிறவர்தான் அமீர்.
இந்தப் பாட்டுதான் படத்தின் ஹைலைட்டாக இருக்கும் என்கிறார் மிஷ்கின்.
என்னமோ போங்க... அமீர்னு ஒரு உருப்படியான இயக்குநர் இருந்தார்... அவரை முழு நேர ஐட்டம் டான்சரா மாத்தாம இருந்தா சரி!!
Comments
அமீர் குத்தாட்டம் நீத்து சந்திரா மிஷ்கின் யுத்தம் செய் director ameer kuthattam mysskin neetu chandra yudham sei


Click it and Unblock the Notifications