twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    நீத்து சந்திராவுடன் குத்தாட்டம் போடும் அமீர்!!

    By Chakra
    |

    Neethu Chandra
    யோகி படத்தில் ஹீரோ வேஷம் கட்டியதோடு ஒரு குத்தாட்டமும் போட்டவர் இயக்கநர் அமீர். ஆனால் அந்தப் படம் தேறாததால் இனி இயக்கம் மட்டுமே என்று கூறி வந்தவர், இப்போது மீண்டும் நடிப்பில் குதித்துள்ளார்.

    ஜெயம் ரவியை வைத்து இயக்கும் ஆதி பகவனின் இவரும் ஒரு முக்கிய வேடத்தில் நடிப்பது தெரிந்திருக்கும்.

    இப்போது, மிஷ்கின் இயக்கும் யுத்தம் செய் படத்தில் ஒரு குத்தாட்டம் போடுகிறாராம் அமீர்.

    பொதுவாகவே, மிஷ்கின் படங்களில் இடம் பெறும் இந்த ரக பாடல்கள் சூப்பர் ஹிட் ஆகிவிடும். மஞ்சள் சேலையில் கவர்ச்சியாக நடிகை ஆட்டம் போட, வில்லன் நடிகர் முன்னிலையில் அந்தப் பாட்டு அரங்கேறும். சித்திரம் பேசுதடி வாளமீனும், அஞ்சாதே 'கத்தாழக் கண்ணால...' பாடல்கள் அப்படிப்பட்டவைதான்.

    யுத்தம் செய் படத்திலும் அதே ஸ்டைலில் மஞ்சள் சேலை அணியவிருப்பவர் நீத்து சந்திரா. அவருடன் ஆடப்போகிறவர்தான் அமீர்.

    இந்தப் பாட்டுதான் படத்தின் ஹைலைட்டாக இருக்கும் என்கிறார் மிஷ்கின்.

    என்னமோ போங்க... அமீர்னு ஒரு உருப்படியான இயக்குநர் இருந்தார்... அவரை முழு நேர ஐட்டம் டான்சரா மாத்தாம இருந்தா சரி!!

    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X