முனி ஆகும் அமிதாப்!
தமிழில் ஹிட் ஆன முனி படத்தை இந்திக்குக் கொண்டு போகிறார்கள். ராஜ்கிரண் வேடத்தில் அமிதாப் பச்சன் நடிக்கவுள்ளாராம்.
டான்ஸ் மாஸ்டர், பிறகு நடிகர் என அவதாரம் எடுத்த லாரன்ஸ் ராகவேந்திராவின் இயக்கம் மற்றும் நடிப்பில் உருவான படம்தான் முனி. ஹீரோவாகவும், இயக்குநராகவும் அவர் நடித்த முதல் தமிழ்ப் படம் இதுதான்.பெரிய அளவில் போகவில்லை என்றாலும் கூட படம் ஹிட் வரிசையில் சேர்ந்து விட்டதால் லாரன்ஸுக்கு சந்தோஷம்தானாம். இப்போது முனியை இந்திக்குக் கொண்டு போகிறார்கள்.
முனி கதையைக் கேள்விபட்ட இந்தி வாலாக்கள் படத்தின் ரீமேக் உரிமையை வாங்கியுள்ளனர். விரைவில் இந்தி முனியின் படப்பிடிப்பு தொடங்கவுள்ளதாம்.
ராஜ்கிரண் நடித்த முனி கேரக்டரில் அமிதாப் பச்சன் நடிக்கவுள்ளாராம். லாரன்ஸ் கேரக்டரில் அக்ஷய் குமார் நடிக்கிறார். வேதிகா வேடத்தில் யாரைப் போடப் போகிறார்கள் என்று தெரியவில்லை. படத்தை லாரன்ஸ் இயக்கவில்லை.
தமிழில் பயமுறுத்திய முனி, இந்திக்காரர்களையும் பீதிக்குள்ளாக்குமா?
Comments
amitabh அமிதாப் இந்தி தமிழ் பச்சன் முனி ராகவேந்திரா ராஜ்கிரண் லாரன்ஸ் ஹிட் bachan director hindi muni raghevendra lawrence remake saran vedika


Click it and Unblock the Notifications