பால்கி-அமிதாப்-இசைஞானி!

By Staff

சீனி கும் (Cheeni Kum) படத்தின் வெற்றியைத் தொடர்ந்து தமிழகத்தின் பால்கியும், பிக் பீ அமிதாப் பச்சனும் மீண்டும் இணைந்து இன்னொரு இந்திப் படத்தைக் கொடுக்கவுள்ளனர். இந்தப் படத்திற்கும் இசைஞானி இளையராஜாதான் இசையமைக்கவுள்ளார்.

தமிழகத்தைச் சேர்ந்த பால்கி என்கிற பாலகிருஷ்ணன் முதல் முறையாக இந்தியில் நடிகை தபு, அமிதாப் பச்சனை வைத்து சீனி கும் என்ற படத்தை இயக்கினார். இந்தப் படத்திற்கு இளையராஜா இசையமைத்திருந்தார்.

சீனி கும் மாபெரும் வெற்றி பெற்றது. பாடல்களும், பால்கியின் இசையும் வெகுவாக பேசப்பட்டது.

இதையடுத்து பால்கிக்கு டிமாண்ட் அதிகரித்தது. கலைஞானி கமல்ஹாசன் பால்கியை அழைத்து தன்னை வைத்து ஒரு படம் இயக்கித் தர வேண்டும் என்று கோரிக்கை விடுத்தார். அதை பால்கியும் ஏற்றுக் கொண்டார்.

ஆனால் அதற்கு முன்பு அமிதாப் பச்சனை வைத்து இன்னொரு இந்திப் படத்தை இயக்கவுள்ளார் பால்கி. இப்படத்திற்கு பா என்று பெயரிட்டுள்ளார் அவர். தந்தைக்கும், மகனுக்கும் இடையிலான உறவை விளக்கும் படம் இது என்று கூறியுள்ளார் பால்கி.

இப்படத்துக்கும் இளையராஜாதான் இசையமைக்கிறார். நேற்று இளையராஜாவை நேரில் சந்தித்து பா படம் குறித்து பால்கி விவாதித்தார். இதையடுத்து பா படத்துக்கும் இசையமைக்க ராஜா ஒத்துக் கொண்டுள்ளாராம்.

அமிதாப் பச்சனின் மகனாக அவரது நிஜ மகன் அபிஷேக் பச்சனே நடிக்கவுள்ளார். பி.சி.ஸ்ரீராம் கேமராவை கையாளுகிறார். மற்ற தொழில்நுட்பக் கலைஞர்களை விரைவில் அறிவிக்கவுள்ளார் பால்கி.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X