twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    மனிதாபிமானத்தின் தூதர் அமிதாப்! - கனடிய தமிழ்ப் பேரவை பாராட்டு

    By Sudha
    |

    Amitabh Bachchan
    டொரன்டோ: மனித இனத்தின், மனிதாபிமானத்தின் தூதுவராக உயர்ந்து நிற்கிறார் அமிதாப் பச்சன் என்று கனடிய தமிழ்ப் பேரவை பாராட்டு தெரிவித்துள்ளது.

    கனடாவில் வாழும் மூன்று லட்சம் கனடிய தமிழ் மக்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் கனடியத் தமிழர் பேரவை இலங்கையில் நடைபெறும் ஐஃபா திரைப்பட விழாவை பகிஷ்கரித்தமைக்காக தென்னிந்திய தமிழ்த்திரை உலகத்தினருக்கும் அமிதாப்பச்சன் குடும்பம் உட்பல பல பாலிவுட் திரை உலகத்தினருக்கும் தனது நன்றியினை தெரிவித்துள்ளது.

    இதுகுறித்து அந்த அமைப்பு விடுத்துள்ள ஒரு அறிக்கையில், "ஈழத் தமிழினத்தை காலம் காலமாக இரண்டாந்தரப் பிரஜைகளாக நடத்தி பல ஆண்டு காலமாக அவர்களுக்கு சொல்லொண்ணாத் துயரங்களை இழைத்து இறுதியில் கடந்த ஆண்டு ஒட்டு மொத்த ஈழத் தமிழ் இனத்தின் வாழ்விருப்பினைக் கேள்விக் குறியாக்கி மூன்று லட்சத்திற்கு மேற்பட்ட தமிழ் மக்களின் வாழ்வாதாரங்களை அழித்து அவர்களை ஊனமாக்கி அதில் 40,000க்கும் மேற்பட்ட மக்களின் உயிரையும் பறித்து அழித்தொழித்த இலங்கை அரசு இன்று சர்வதேச சமூகத்தினால் சர்வதேச அரங்கிலே போர்க் குற்றவாளி என குற்றஞ்சாட்டப்பட்டு யுத்தகால போர்க்குற்ற விசாரணையினை எதிர்நோக்க வேண்டும் என்று சொல்லப்படுவது யாவருமறிந்ததே.

    ஈழத் தமிழரின் ரத்தத்தினால் தோய்ந்த சிங்கள ஏகாதிபத்தியத்தின் கறை படிந்த வரலாற்றினை மறைப்பதற்கு இலங்கை அரசினர் இத் திரைப்பட விழாவினைப் பயன்படுத்த முயன்றனர்.

    இலங்கை அரசின் வஞ்சக நோக்கினை நன்கு அறிந்த தென்னிந்திய தமிழ்த் திரையுலகமும் அமிதப் பச்சன் உட்பட பல இந்திப் பட பிரபலங்களும் இத் திரைப்பட விழாவினைப் பகிஷ்கரித்திருப்பது, அவர்கள் தமிழ் மக்கள் மீது கொண்ட அபிமானத்தினையும் கரிசனையினையும் மட்டுமல்லாது மனித நேயத்தின் மீது அவர்களுக்குள்ள அசைக்க முடியாத உறுதியான நம்பிக்கையினையும் காட்டுவதாக அமைகின்றது.

    இதற்கு புலம் பெயர் வாழ் தமிழ் மக்கள் இந்திய தென்னிந்தியத் திரைப்படத் துறையினருக்கும் அமிதாப் பச்சன் குடும்பத்தினருக்கும் தங்கள் மனமார்ந்த நன்றியினைத் தெரிவித்துக் கொள்கின்றனர்..." என்று கூறப்பட்டுள்ளது.

    கனடிய தமிழ்ப் பேரவை செய்தித் தொடர்பாளர் பூபாலன் பிள்ளை கூறுகையில், "பிக் பி எனப்படும் அமிதாப் பச்சன் அவர்கள் பெயருக்கேற்ப உயர்ந்த மனிதராகக் காட்சி தருகிறார். தமிழர் மனதில் அவர் மிக உயரிய இடத்தைப் பெற்றுவிட்டார். மனித உரிமைகள் நசுக்கப்பட்ட ஒரு நாட்டுக்குச் செல்கிறோம் என்ற உண்மையை உணர்ந்த பிறகு அவர் தனது நிலையை மாற்றிக் கொண்ட விதம் பாராட்டுக்குரியது. மனித இனத்துக்கும் மனிதாபிமானத்துக்கும் தூதுவராகத் திகழ்கிறார்.

    அவருக்கு உரிய நேரத்தில் தமிழ்ச் சமூகம் தங்கள் மரியாதையைச் செய்யும்..." என்று கூறியுள்ளார் பூபாலன் பிள்ளை.

    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X