'அம்மா'வின் 'டுவென்டி 20'
| Click here for more images |
மலையாள நடிகர் சங்கமான 'அம்மா' தனது சங்க நல நிதிக்காக புதிய படம் ஒன்றைத் தயாரிக்கிறது. இப்படத்துக்கு டுவென்டி 20 என வித்தியாசமாக பெயர் சூட்டியுள்ளனர்.
லேட்டஸ் நாட்டு நடப்புகளை வைத்து படமாக்கி கலக்குவது இந்திய சினிமாத்துறையினரின் வழக்கம். அந்த வகையில், இப்போது இந்தியாவிலேயே ரொம்ப பாப்புலராகியுள்ள டுவென்டி 20 கிரிக்கெட் மோகத்தை மையமாக வைத்து ஒரு படம் தயாரிக்கவுள்ளது 'அம்மா'.
டுவென்டி 20 என பெயரிடப்பட்டுள்ள இப்படம் குறித்து 'அம்மா'வின் தலைவரும், நடிகருமான இன்னொசன்ட் சமீபத்தில் அறிவிப்பு வெளியிட்டார். இப்படத்தின் ஷூட்டிங் அடுத்த மாதம் தொடங்குகிறதாம்.
இப்படத்தை நடிகர் சங்கம் சார்பில் நடிகர் திலீப் தயாரிக்கிறார். ஜோஷி இக்கவுள்ளார். படத்தின் தயாரிப்புச் செலவுக்காக திலீப் முதல் கட்டமாக ரூ. 10 லட்சம் நிதியைக் கொடுத்துள்ளாராம்.
படத்தின் டைட்டில் டுவென்டி 20 என்று இருப்பதால் இதற்கும், கிரிக்கெட்டுக்கும் ஏதாவது தொடர்பு இருக்கலாம் என சந்தேகம் வரும். ஆனால் அப்படி எதுவும் இல்லையாம். அதேசமயம், 20 - 20 கிரிக்கெட் போட்டியில் உள்ளதைப் போன்ற விறுவிறுப்பு படத்திலும் இருக்குமாம். அதனால்தான் இப்படி பெயர் சூட்டியுள்ளனராம்.
இப்படத்தில் மலையாள சூப்பர் ஸ்டார்களான மம்முட்டி, மோகன்லால், சுரேஷ் கோபி, ஜெயராம் உள்ளிட்ட 65க்கும் மேற்பட்ட முன்னணிக் கலைஞர்கள் நடிக்கவுள்ளனராம்.


Click it and Unblock the Notifications