ஸ்பெஷல்ஸ்
தற்போது சரணின் இயக்கத்தில் ஜேஜே படத்தில் மாதவனுக்கு ஜோடியாக நடித்து வரும் அமோகா விரைவில் இந்தித் திரையுலகில் நுழையப் போகிறாராம்.
அஜீத்துக்கு ஜோடியாக ஜி என்ற படத்தில் புக் ஆகியிருக்கிறார். அஜீத் தனது ஆஞ்சநேயாவை முடித்த பிறகு இந்தப் படத்தில் கவனம் செலுத்தப் போகிறார்.
இந் நிலையில் இந்தியில் நடிக்க இயக்குனர் ராம்கோபால் வர்மாவிடம் இருந்து அமோகாவுக்கு அழைப்பு வந்துவிட்டது. ஆனால், அஜீத்துடன் ஜி படத்தை முடித்து விட்டு வருவதாகக் கூறிவிட்டாராம் அமோகா.
ஆனால், அமோகா நடிக்கும் ஜேஜே படம் வெளி வருமா என்பதே இப்போது சந்தேகத்துக்குரியதாகியுள்ளது. அந்தப் படம் Serendipity என்ற ஆங்கிலப் படத்தில் தழுவலாம்.
ஜான் குசேக், கேத் பெக்கின்சேல் ஆகியோர் நடித்த இந்தப் படத்தின் ரீ-மேக் உரிமையை தெலுங்கு நடிகரும் தெலுங்கு தேசம் எம்.பியுமான மோகன்பாபு வாங்கி வைத்துள்ளாராம்.
அடவடிக்குப் பெயர் போன மோகன்பாபு (சமீபத்தில், முத்தக் காட்சியில் சரியாக நடிக்கவில்லை என்று நடிகை ஷில்பாவையும் அவரதும் அம்மாவையும் அறைந்தவர்) இப்போது ஜேஜே கதை தான் உரிமை வாங்கி வைத்துள்ள படத்தின் கதை என்று சொல்லி பிரச்சனை கிளப்பியுள்ளாராம்.
சரணோ இது என் கதை என் ரீதியில் பேச பிரச்சனை இப்போது மோகன்பாபுவின் நண்பர் ரஜினிகாந்திடம் வந்துள்ளது.
இது தொடர்பாக ஜேஜே படத் தயாரிப்பாளர் ஆஸ்கர் பிலிம்ஸ் ரவிச்சந்திரனிடம் ரஜினி பேசிக் கொண்டிருக்கிறார் என்கிறார்கள்.


Click it and Unblock the Notifications











