»   »  ஸ்பெஷல்ஸ்

ஸ்பெஷல்ஸ்

Subscribe to Oneindia Tamil

இவரிடம் எல்லாமே அமோகமாய் இருக்கிறது. பார்க்கவும் அமோகமாய் இருக்கிறார். பெயரும் அமோகாதானாம்.

வட புலத்தில் இருந்து தமிழ் சினிமாவுக்கு வந்துள்ள இன்னொரு கலக்கல் ஹீரோயின் இவர்.

ஊர் டெல்லியாம். இந்தி சினிமாவில் நடிக்க ஆசைப்பட்டு மும்பைக்கு வந்தார். உடைகளை நழுவ விட்டுபோட்டோக்கள் எடுத்து ஆல்பங்கள் தயார் செய்து தயாரிப்பாளர்களிடம் சுற்றவிட்டார்.

அதில் ஒரு ஆல்பம் டைரக்டர் சரணிடம் சிக்க, ஆளை படத்தில் பார்த்து சொக்கிய சரண் உடனே வரச்சொல்லிவிட்டார்.

இப்போது ஆஸ்கர் பிலிம்ஸ் ரவிச்சந்திரன் தயாரிக்க சரண் இயக்கப் போகும் ஜே.ஜே. படத்தில் இவர் தான்ஹீரோயின்.

சரணை விட ரவிச்சந்திரனை ரொம்பவே கவர்ந்துவிட்டாராம் அமேகா. சென்னையின் நட்சத்திர ஹோட்டலில் ரூம்போட்டுக் கொடுத்து, உபயோகத்துக்கு விலை உயர்ந்த காரும் தந்து அமோகாவை பூ போல பார்த்துக்கொள்கிறார்களாம்.

கிரணைக் கண்டுபிடித்து தமிழுக்கு இழுத்து வந்தவரும் சரண் தான். கிரண் மாதிரியே அமோகாவும் தமிழர்கள்உள்ளங்களை அள்ளுவாரா என்று பார்ப்போம்.

அமோகா என்றால் சமஸ்கிருதத்தில் மோகமில்லா ஞானம் என்று அர்த்தமாம்.

Please Wait while comments are loading...