ஆடுகளம் படத்தில் நடித்த 83 வயது பாட்டி நிஜமாகவே அங்கு வாழ்ந்தவர்.. இயக்குநர் வெற்றிமாறன்!

சென்னை: உண்மைக்கு மிக அருகாமையில் இருக்கின்றது போலாம் தன்னுடைய ஒவ்வொரு படங்களையும் கொடுத்து வருகிறார் இயக்குநர் வெற்றிமாறன்

ஆடுகளம் , விசாரணை,அசுரன் உள்ளிட்ட படங்களுக்கு தேசிய விருதுகளையும் வென்றுள்ளார்.

இப்பொழுது விடுதலை மற்றும் வாடிவாசல் என இரண்டு படங்களை அடுத்தடுத்து இயக்கிவரும் வெற்றிமாறன் ஆடுகளம் படத்தில் நடித்த 83 வயது பாட்டி உண்மையாகவே அங்கு வாழ்ந்தவர் என்ற தகவலை தனியார் யூடியூப் சேனல் ஒன்றிற்கு அளித்த பேட்டியில் பகிர்ந்துள்ளார்

 வெற்றிமாறனுக்கு தனி ரசிகர்கள்

வெற்றிமாறனுக்கு தனி ரசிகர்கள்

இயக்குநர் வெற்றிமாறன் இயக்கத்தில் வெளியாகும் திரைப்படங்கள் என்றாலே அது தரமானதாக இருக்கும். ரசிகர்கள் ஹீரோக்களுக்காக படம் பார்த்து வரும் சூழலில் வெற்றிமாறனுக்கு என்று தனி ரசிகர்கள் பட்டாளம் உள்ளது. எந்த ஒரு நடிகரின் ரசிகராக இருந்தாலும் வெற்றிமாறன் படங்களை பார்க்க வேண்டும் என ஆவலுடன் உள்ளனர். அந்த அளவிற்கு வெற்றிமாறன் இயக்கத்தில் வெளியாகும் திரைப்படங்கள் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. தனுஷ் நடிப்பில் வெளியான பொல்லாதவன் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குனராக அறிமுகமான வெற்றிமாறன் அதைத் தொடர்ந்து ஆடுகளம்,விசாரணை, வடசென்னை ,அசுரன் என தொடர் வெற்றிப் படங்களை இயக்கியுள்ளார்.

 நாவல்களின் கதைகளை

நாவல்களின் கதைகளை

இதில் ஆடுகளம், விசாரணை ,அசுரன் சர்வதேச அளவில் மிகப்பெரிய கவனத்தைப் பெற்று விருதுகளை அள்ளியது. நாவல்களின் கதைகளை கொண்டு உண்மைக்கு மிக அருகாமையில் இருக்கின்றவாறு படங்களைக் கொடுத்து வரும் வெற்றிமாறன் இப்பொழுது விடுதலை, வாடிவாசல் உள்ளிட்ட படங்களை இயக்கி வருகிறார்.

 ஆடுகளம் ஆங்லோஇந்தியன் பாட்டி

ஆடுகளம் ஆங்லோஇந்தியன் பாட்டி

இந்த நிலையில் தனியார் யூடியூப் சேனல் ஒன்றில் நேர்காணலில் ஆடுகளம் படத்தில் நடித்த 83 வயது பாட்டி குறித்து வெற்றிமாறன் சுவாரசிய தகவலை பகிர்ந்துள்ளார் . சேவல் சண்டையை மையமாக வைத்து மதுரை பின்னணியில் எடுக்கப்பட்ட திரைப்படம் ஆடுகளம் இந்த படத்தில் கதாநாயகி டாப்ஸியின் ஆங்லோஇந்தியன் பாட்டியாக நடித்தவருக்கு அப்போது 83 வயது. இந்த 83 வயதில் ஒரே ஒரு வருடம் மட்டும் அவர் திருச்சியில் இருந்துள்ளார். மீதமுள்ள 82 வருடங்களும் மதுரையில் வாழ்ந்துள்ளார்.

 நிஜமாகவே அங்கு வாழ்ந்தவர்

நிஜமாகவே அங்கு வாழ்ந்தவர்

அந்த நேரத்தில் இவரைப்போல மதுரை தன்மையுடன் இருக்கும் ஒருவரை அங்கு நான் பார்க்கவில்லை. மதுரையில் நடந்த அவ்வளவு விஷயங்கள் அவருக்கு தெரிந்திருந்தது. 1930,40களின் மதுரை எப்படியெல்லாம் இருந்தது என நிறைய சொல்லுவார். மேலும் ஆடுகளம் படத்தில் டாப்ஸி மற்றும் பாட்டிக்கு இடையே ஒரு உரையாடலில் நான் உன் வயசு இருக்கும்போது இந்த காலணியில 50 ஆங்லோ இந்தியன் குடும்பங்கள் இருந்துச்சு, இப்போ 3 தான் இருக்கு இனிமே இந்த நாட்டுல நமக்கு இடம் இல்ல என அந்த பாட்டி கூறும் வசனம் உண்மையாகவே அவருக்கு நடந்தது பற்றி சொன்னது என ஆடுகளம் படத்தில் 83 வயது நிஜ பாட்டியை நடிக்க வைத்து அனுபவம் குறித்து வெற்றிமாறன் பகிர்ந்துள்ள வீடியோ இப்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X