சிவாஜி பார்க்க வந்த அனார்கலி
ரஜினிகாந்த்தான் உலகிலேயே மிகப் பெரிய நடிகர். அவருடன் நடிக்க ஆர்வமாக இருக்கிறேன் என்று சிவாஜி படம் பார்ப்பற்காக இலங்கையிலிருந்து சென்னைக்கு ஓடோடி வந்த சிங்கள நடிகை அனார்கலி ஆகர்ஷா கூறியுள்ளார்.
சிங்களத்தில் பிரபலமாக உள்ள நடிகை அனார்கலி. அங்கு 10க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளாராம். 2004ம் ஆண்டு மிஸ் இலங்கையாக தேர்வும் ஆனவர்.சிவாஜி படம் குறித்து இலங்கையிலும் பெரும் எதிர்பார்ப்பு நிலவி வந்ததால் படம் பார்ப்பதற்காக சென்னைக்கு வந்தார் அனார்கலி.
சிவாஜி படத்தை பார்த்து மகிழ்ந்தார் அனார்கலி. பின்னர் அவரைப் பிடித்து எப்படி இருந்தது சிவாஜி என்று கேட்டபோது, படு சந்தோஷமாக பேசினார் அனார்கலி.
மிகப் பிரமாண்டமாக இருந்தது. இப்படி ஒரு படத்தை நான் பார்த்ததே இல்லை. டான்ஸ், ஸ்டண்ட் அற்புதமாக படமாக்கப்பட்டுள்ளன. ரஜினியின் நடிப்பும் சிறப்பாக இருந்தது.
அவர்தான் உலகிலேயே மிகச் சிறந்த நடிகர், பெரிய நடிகர். ரசிகர்கள் ரஜினி மீது கொண்டுள்ள அன்பு என்னை ஆச்சரியப்படுத்தி விட்டது. ரஜினியை சந்திக்க ஆர்வமாக உள்ளேன். அவருடைய படத்தில் ஒரு காட்சியிலாவது நடிக்கும் வாய்ப்பு கிடைத்தால் போதும், பெருமை அடைவேன் என்றார் அனார்கலி.


Click it and Unblock the Notifications











