»   »  அஞ்சலி தந்த நெஞ்சு வலி தன்னை வைத்து யாரும் படம் எடுக்காவிட்டால் தானே படம் எடுத்துக் கொள்ளும் நடிகர் அர்ஜூன்.யார் பார்த்தாலும் பார்க்காவிட்டாலும், படம் ஓடினாலும் ஓடாவிட்டாலும் அதைப் பற்றியெல்லாம்கவலைப்படாமல் தமிழ், தெலுங்கு, தாய் மொழியான கன்னடத்தில் தன்னையே ஹீரோவாகப் போட்டு படத்தைஎடுத்து விட்டுக் கொண்டே இருப்பார்.விஜய்காந்துக்கு அடுத்தபடியாக (சினிமாவில்) அதிகபட்ச தீவிரவாதிகளை பிடித்த ஹீரோ இவர் தான்.உள்நாட்டு, வெளிநாட்டு தீவிரவாதிகள், சமூக விரோதிகள், கடத்தல்காரர்கள் என யாரையும் விட மாட்டார்.காட்டுக்குள் போயாவது பிடித்துவிட்டுத் தான் வருவார். ஆனால், துணைக்கு குறைந்தபட்சம் 2ஹீரோயின்களையாவது கூட்டிக் கொண்டு தான் வேட்டைக்கே போவார்.சில காலமாக தமிழில் எந்தப் படமும் இல்லாமல் இருந்த அர்ஜூன் இப்போது வாத்தியார் என்ற படத்தில்நடிக்கிறார். இதில் ஹீரோயினை முதலில் கர்நாடகத்திலும், பின்னர் ஆந்திராவிலும் தேடினார்கள். யாரும்சிக்கவில்லை. இதையடுத்து மும்பையில் துலிப் ஜோஷி என்றொரு சந்தன மரத்தை பார்த்து அசந்து போய்தூக்கிக் கொண்டு வந்தார்கள்.துலிப்.. ஜோஷி... இதெல்லாம் தமிழ் மகா ஜனங்களுக்கு சரிப்படாது என்பதால் அவரது பெயரை அஞ்சலி என்றுமாற்றி இதில் ஹீரோயினாக்கினார்கள். ஆனால், சந்தன கட்டை அஞ்சலி தயாரிப்பாளரை வாட்டிவதைத்துவிட்டாராம்.பூஜைக்கு வந்தபோதும், போட்டோ செஷனுக்கு வந்தபோதும் பைவ் ஸ்டார் ஹோட்டல்களில் ரூம் போடச்சொன்ன அஞ்சலியை சூட்டிங்குக்காக ஹைதராபாத்துக்குக் கொண்டு போயிருக்கிறார்கள்.அங்கு போனவுடன், அஞ்சலி பாப்பா போட்ட கண்டிசன்களைப் பார்த்து ஆடிப் போய்விட்டார்களாம்.படம் முடியும் வரை பெர்மனன்டாக ஹைதாராபாத்தில் 5 ஸ்டார் ஹோட்டலில் ரூம் புக் பண்ண வேண்டும்.எப்போது நான் வந்தாலும் அந்த ரூம் எனக்கு ஒதுக்கப்பட வேண்டும்.அந்த ஹோட்டலில் ஸ்டீம் பாத் வசதி கொண்ட ஸ்விம்மிங் பூல் கட்டாயம் இருக்க வேண்டும்.என் பெயரை மீண்டும் துலிப் ஜோஷி என்றே மாற்ற வேண்டும், அஞ்சலி எனக்கு பிடிக்கல.என்னுடன் 5 பேர் எப்போதும் கூடவே வருவார்கள். அவர்கள் விரும்பும்போது மும்பை டூ அண்ட் ரிடர்ன்டிக்கெட்ஸ் வாங்கித் தர வேண்டும். அவர்கள் தங்குவதற்கு தனி ரூம்கள் வேண்டும், வந்து போக ஏசி கார்கள்வேண்டும்.இவ்வாறு துலிப் தனது கண்டிசன்களை துப்ப, வெறுத்துப் போய்விட்டதாம் தயாரிப்புத் தரப்பு.படத்தின் பட்ஜெட்டையே இந்த அம்மாவுக்கு செலவு செய்துவிட்டு பிலிம் வாங்க காசுக்கு எங்கே போவது என்றுயோசித்த இயக்குனர் வெங்கடேஷ், துலிப் ஜோஷி என்ற அஞ்சலிக்கு ஒரே ஒரு மும்பை ரிடர்ன் டிக்கெட் மட்டும்வாங்கித் தந்து போய்ட்டு வாம்மா, நீ நடிக்கவே வேணாம், போய் ஹாலிவுட்ல டிரை பண்ணு என்று சொல்லிதிருப்பி அனுப்பி வைத்துவிட்டாராம்.இயக்குனரின் இந்த நல்ல செயலால் படமும் தயாரிப்பாளரும் தப்பித்தார்கள் என்கிறார்கள் கோலிவுட்டில்.சந்தனக் கட்டையை மிஸ் பண்ணி விட்ட வருத்தத்தில் இருக்கிறார் அர்ஜூன். ஆனால், அவரை குஷிப்படுத்தும்வகையில் சேரனின் கண்டுபிடிப்பான அழகாய் இருக்கிறார் பயமாய் இருக்கிறது பட ஹீரோயின் மல்லிகாகபூரை புக் செய்துவிட்டார்கள். சூட்டிங்கும் தொடங்கிவிட்டது.சினிமான்னா எவ்ளோ கஷ்டம்...

அஞ்சலி தந்த நெஞ்சு வலி தன்னை வைத்து யாரும் படம் எடுக்காவிட்டால் தானே படம் எடுத்துக் கொள்ளும் நடிகர் அர்ஜூன்.யார் பார்த்தாலும் பார்க்காவிட்டாலும், படம் ஓடினாலும் ஓடாவிட்டாலும் அதைப் பற்றியெல்லாம்கவலைப்படாமல் தமிழ், தெலுங்கு, தாய் மொழியான கன்னடத்தில் தன்னையே ஹீரோவாகப் போட்டு படத்தைஎடுத்து விட்டுக் கொண்டே இருப்பார்.விஜய்காந்துக்கு அடுத்தபடியாக (சினிமாவில்) அதிகபட்ச தீவிரவாதிகளை பிடித்த ஹீரோ இவர் தான்.உள்நாட்டு, வெளிநாட்டு தீவிரவாதிகள், சமூக விரோதிகள், கடத்தல்காரர்கள் என யாரையும் விட மாட்டார்.காட்டுக்குள் போயாவது பிடித்துவிட்டுத் தான் வருவார். ஆனால், துணைக்கு குறைந்தபட்சம் 2ஹீரோயின்களையாவது கூட்டிக் கொண்டு தான் வேட்டைக்கே போவார்.சில காலமாக தமிழில் எந்தப் படமும் இல்லாமல் இருந்த அர்ஜூன் இப்போது வாத்தியார் என்ற படத்தில்நடிக்கிறார். இதில் ஹீரோயினை முதலில் கர்நாடகத்திலும், பின்னர் ஆந்திராவிலும் தேடினார்கள். யாரும்சிக்கவில்லை. இதையடுத்து மும்பையில் துலிப் ஜோஷி என்றொரு சந்தன மரத்தை பார்த்து அசந்து போய்தூக்கிக் கொண்டு வந்தார்கள்.துலிப்.. ஜோஷி... இதெல்லாம் தமிழ் மகா ஜனங்களுக்கு சரிப்படாது என்பதால் அவரது பெயரை அஞ்சலி என்றுமாற்றி இதில் ஹீரோயினாக்கினார்கள். ஆனால், சந்தன கட்டை அஞ்சலி தயாரிப்பாளரை வாட்டிவதைத்துவிட்டாராம்.பூஜைக்கு வந்தபோதும், போட்டோ செஷனுக்கு வந்தபோதும் பைவ் ஸ்டார் ஹோட்டல்களில் ரூம் போடச்சொன்ன அஞ்சலியை சூட்டிங்குக்காக ஹைதராபாத்துக்குக் கொண்டு போயிருக்கிறார்கள்.அங்கு போனவுடன், அஞ்சலி பாப்பா போட்ட கண்டிசன்களைப் பார்த்து ஆடிப் போய்விட்டார்களாம்.படம் முடியும் வரை பெர்மனன்டாக ஹைதாராபாத்தில் 5 ஸ்டார் ஹோட்டலில் ரூம் புக் பண்ண வேண்டும்.எப்போது நான் வந்தாலும் அந்த ரூம் எனக்கு ஒதுக்கப்பட வேண்டும்.அந்த ஹோட்டலில் ஸ்டீம் பாத் வசதி கொண்ட ஸ்விம்மிங் பூல் கட்டாயம் இருக்க வேண்டும்.என் பெயரை மீண்டும் துலிப் ஜோஷி என்றே மாற்ற வேண்டும், அஞ்சலி எனக்கு பிடிக்கல.என்னுடன் 5 பேர் எப்போதும் கூடவே வருவார்கள். அவர்கள் விரும்பும்போது மும்பை டூ அண்ட் ரிடர்ன்டிக்கெட்ஸ் வாங்கித் தர வேண்டும். அவர்கள் தங்குவதற்கு தனி ரூம்கள் வேண்டும், வந்து போக ஏசி கார்கள்வேண்டும்.இவ்வாறு துலிப் தனது கண்டிசன்களை துப்ப, வெறுத்துப் போய்விட்டதாம் தயாரிப்புத் தரப்பு.படத்தின் பட்ஜெட்டையே இந்த அம்மாவுக்கு செலவு செய்துவிட்டு பிலிம் வாங்க காசுக்கு எங்கே போவது என்றுயோசித்த இயக்குனர் வெங்கடேஷ், துலிப் ஜோஷி என்ற அஞ்சலிக்கு ஒரே ஒரு மும்பை ரிடர்ன் டிக்கெட் மட்டும்வாங்கித் தந்து போய்ட்டு வாம்மா, நீ நடிக்கவே வேணாம், போய் ஹாலிவுட்ல டிரை பண்ணு என்று சொல்லிதிருப்பி அனுப்பி வைத்துவிட்டாராம்.இயக்குனரின் இந்த நல்ல செயலால் படமும் தயாரிப்பாளரும் தப்பித்தார்கள் என்கிறார்கள் கோலிவுட்டில்.சந்தனக் கட்டையை மிஸ் பண்ணி விட்ட வருத்தத்தில் இருக்கிறார் அர்ஜூன். ஆனால், அவரை குஷிப்படுத்தும்வகையில் சேரனின் கண்டுபிடிப்பான அழகாய் இருக்கிறார் பயமாய் இருக்கிறது பட ஹீரோயின் மல்லிகாகபூரை புக் செய்துவிட்டார்கள். சூட்டிங்கும் தொடங்கிவிட்டது.சினிமான்னா எவ்ளோ கஷ்டம்...

Subscribe to Oneindia Tamil
தன்னை வைத்து யாரும் படம் எடுக்காவிட்டால் தானே படம் எடுத்துக் கொள்ளும் நடிகர் அர்ஜூன்.

யார் பார்த்தாலும் பார்க்காவிட்டாலும், படம் ஓடினாலும் ஓடாவிட்டாலும் அதைப் பற்றியெல்லாம்கவலைப்படாமல் தமிழ், தெலுங்கு, தாய் மொழியான கன்னடத்தில் தன்னையே ஹீரோவாகப் போட்டு படத்தைஎடுத்து விட்டுக் கொண்டே இருப்பார்.

விஜய்காந்துக்கு அடுத்தபடியாக (சினிமாவில்) அதிகபட்ச தீவிரவாதிகளை பிடித்த ஹீரோ இவர் தான்.உள்நாட்டு, வெளிநாட்டு தீவிரவாதிகள், சமூக விரோதிகள், கடத்தல்காரர்கள் என யாரையும் விட மாட்டார்.காட்டுக்குள் போயாவது பிடித்துவிட்டுத் தான் வருவார். ஆனால், துணைக்கு குறைந்தபட்சம் 2ஹீரோயின்களையாவது கூட்டிக் கொண்டு தான் வேட்டைக்கே போவார்.

சில காலமாக தமிழில் எந்தப் படமும் இல்லாமல் இருந்த அர்ஜூன் இப்போது வாத்தியார் என்ற படத்தில்நடிக்கிறார். இதில் ஹீரோயினை முதலில் கர்நாடகத்திலும், பின்னர் ஆந்திராவிலும் தேடினார்கள். யாரும்சிக்கவில்லை. இதையடுத்து மும்பையில் துலிப் ஜோஷி என்றொரு சந்தன மரத்தை பார்த்து அசந்து போய்தூக்கிக் கொண்டு வந்தார்கள்.

துலிப்.. ஜோஷி... இதெல்லாம் தமிழ் மகா ஜனங்களுக்கு சரிப்படாது என்பதால் அவரது பெயரை அஞ்சலி என்றுமாற்றி இதில் ஹீரோயினாக்கினார்கள். ஆனால், சந்தன கட்டை அஞ்சலி தயாரிப்பாளரை வாட்டிவதைத்துவிட்டாராம்.

பூஜைக்கு வந்தபோதும், போட்டோ செஷனுக்கு வந்தபோதும் பைவ் ஸ்டார் ஹோட்டல்களில் ரூம் போடச்சொன்ன அஞ்சலியை சூட்டிங்குக்காக ஹைதராபாத்துக்குக் கொண்டு போயிருக்கிறார்கள்.

அங்கு போனவுடன், அஞ்சலி பாப்பா போட்ட கண்டிசன்களைப் பார்த்து ஆடிப் போய்விட்டார்களாம்.

படம் முடியும் வரை பெர்மனன்டாக ஹைதாராபாத்தில் 5 ஸ்டார் ஹோட்டலில் ரூம் புக் பண்ண வேண்டும்.எப்போது நான் வந்தாலும் அந்த ரூம் எனக்கு ஒதுக்கப்பட வேண்டும்.

அந்த ஹோட்டலில் ஸ்டீம் பாத் வசதி கொண்ட ஸ்விம்மிங் பூல் கட்டாயம் இருக்க வேண்டும்.

என் பெயரை மீண்டும் துலிப் ஜோஷி என்றே மாற்ற வேண்டும், அஞ்சலி எனக்கு பிடிக்கல.

என்னுடன் 5 பேர் எப்போதும் கூடவே வருவார்கள். அவர்கள் விரும்பும்போது மும்பை டூ அண்ட் ரிடர்ன்டிக்கெட்ஸ் வாங்கித் தர வேண்டும். அவர்கள் தங்குவதற்கு தனி ரூம்கள் வேண்டும், வந்து போக ஏசி கார்கள்வேண்டும்.

இவ்வாறு துலிப் தனது கண்டிசன்களை துப்ப, வெறுத்துப் போய்விட்டதாம் தயாரிப்புத் தரப்பு.

படத்தின் பட்ஜெட்டையே இந்த அம்மாவுக்கு செலவு செய்துவிட்டு பிலிம் வாங்க காசுக்கு எங்கே போவது என்றுயோசித்த இயக்குனர் வெங்கடேஷ், துலிப் ஜோஷி என்ற அஞ்சலிக்கு ஒரே ஒரு மும்பை ரிடர்ன் டிக்கெட் மட்டும்வாங்கித் தந்து போய்ட்டு வாம்மா, நீ நடிக்கவே வேணாம், போய் ஹாலிவுட்ல டிரை பண்ணு என்று சொல்லிதிருப்பி அனுப்பி வைத்துவிட்டாராம்.

இயக்குனரின் இந்த நல்ல செயலால் படமும் தயாரிப்பாளரும் தப்பித்தார்கள் என்கிறார்கள் கோலிவுட்டில்.

சந்தனக் கட்டையை மிஸ் பண்ணி விட்ட வருத்தத்தில் இருக்கிறார் அர்ஜூன். ஆனால், அவரை குஷிப்படுத்தும்வகையில் சேரனின் கண்டுபிடிப்பான அழகாய் இருக்கிறார் பயமாய் இருக்கிறது பட ஹீரோயின் மல்லிகாகபூரை புக் செய்துவிட்டார்கள். சூட்டிங்கும் தொடங்கிவிட்டது.

சினிமான்னா எவ்ளோ கஷ்டம்...


Please Wait while comments are loading...

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil