'அழகு' அஞ்சலி

By Staff


முற்றிலும் மேக்கப் இல்லாமல் கற்றது தமிழ் படத்தின் மூலம் தமிழ் சினிமாவைக் கலக்க வந்திருக்கும் அஞ்சலி, பக்கத்து வீட்டு அழகுப் பெண் போல படு பாந்தமாக இருக்கிறார்.

Click here for more images

அஞ்சலி பிறந்தது சென்னை என்றாலும் கூட, அவரைப் பெற்றவர்களின் பூர்வீகம் ஆந்திர தேசம். இதனால் தெலுங்கை விட தமிழ் நன்றாகப் பேச வருமாம் அஞ்சலிக்கு. அந்த வகையில் தான் ஒரு பக்கா தமிழ்ப் பெண்தான் என்று புன்னகையுடன் கலாய்க்கிறார்.

இயக்குநர் ராம், எதேச்சையாகத்தான் அஞ்சலியைப் பார்த்தாராம். கற்றது தமிழ் படத்திற்கு நாயகியைத் தேடிக் கொண்டிருந்த நேரம் அது. அஞ்சலியின் இயல்பான அழகைப் பார்த்த ராம், இவர்தான் நாம் தேடிய சீதை அதாவது நாயகி என்று முடிவு செய்து அஞ்சலியிடம் விருப்பத்தைக் கேட்டுள்ளார்.

வீட்டில் கேட்டு விட்டு ஓ.கே. சொன்னாராம் அஞ்சலி. அதன் பின்னர் மேக்கப் டெஸ்ட் போட்டுப் பார்த்து விட்டு திருப்தி அடைந்த ராம், ஜீவாவுக்கு ஜோடியாக அஞ்சலியை நடிக்க வைத்தார்.

இதில் மேக்கப் எதுவும் இல்லாமல் இயல்பான தோற்றத்திலேயே படம் முழுக்க வந்துள்ளார் அஞ்சலி. படத்தில் சொந்தக் குரலில் பேசி நடித்துள்ளாராம் அஞ்சலி. தனது கேரக்டருக்கு விருது நிச்சயம் என்று யூனிட் ஆட்கள் குஷிப்படுத்தியதால் சந்தோஷமாக உள்ளார் அஞ்சலி.

அஞ்சலிக்கு வீட்டில் வேறு பெயராம், அதாவது பாலாதான் அஞ்சலியின் வீட்டுப் பெயராம். அம்மாதான், அஞ்சலி என அழகிய பெயரைச் சூட்டி ஆசிர்வதித்து நடிக்க அனுப்பி வைத்தாராம்.

முதல் படத்தில் அஞ்சலியின் நடிப்பு திரையுலகின் எட்டு திக்கிலும் பேசப்பட அடுத்தடுத்து சில பட வாய்ப்புகள் வந்துள்ளதாம். அதிலிருந்து ஆயுதம் செய்வோம் என்ற படத்தை மட்டும் செலக்ட் செய்து நடிக்க ஒப்புக் கொண்டிருக்கிறாராம் அஞ்சலி.

சிறகடித்துப் பறக்கும் வண்ணத்துப் பூச்சியைப் பார்ப்பது போலவே இருக்கிறது அஞ்சலியின் பேச்சும், அழகும். பெஸ்ட் ஆப் லக் அஞ்சு!

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X