'கரிகாலனி'ல் புரட்சிக்கார பெண்ணாக அஞ்சலி!
விக்ரம் நடிக்கும் கரிகாலன் படத்தில் முக்கிய வேடத்தில் நடிக்கிறார் அஞ்சலி.
எங்கேயும் எப்போதும் பட வெற்றிக்குப் பிறகு அஞ்சலிக்கு பெரிய வாய்ப்புகள் வரத் தொடங்கியுள்ளன. இதைப் புரிந்து கொண்டுதான் ஜெய்யுடனான தனது நட்பைத் துண்டித்துக் கொண்டார் அஞ்சலி.
இதற்கு இப்போது நல்ல பலன் கிடைத்துள்ளது. விக்ரம் நடிக்கும் வரலாற்றுப் படமான கரிகாலனில் அவர் விக்ரமின் ஹீரோயின்களில் ஒருவராக ஒப்பந்தமாகியுள்ளார்.
இதில் அவர் புரட்சிப் பெண்ணாக நடிக்கிறாராம். சோழமன்னன் கரிகாலனாக விக்ரம் நடிக்கிறார்.
"விக்ரமுடன் நடிக்க வேண்டும் என்ற என நீண்ட நாள் கனவு இந்தப் படம் மூலம் நிறைவேறுகிறது. டிசம்பர் 10-ம் தேதி முதல் ஹைதராபாதில் படப்பிடிப்பு இருக்கிறது," என்றார்.
ஏற்கேனவே, ஜரின் கான், மித்ரா குரியன், ராதிகா ஆப்தே என மூன்று நடிகைகள் இந்தப் படத்தில் உள்ளது குறிப்பிடத்தக்கது.
ஜிவி பிரகாஷ் இசையில், கண்ணன் இயக்கும் படம் இது.


Click it and Unblock the Notifications











