»   »  தொடை தப்பிய அங்கீதா

தொடை தப்பிய அங்கீதா

Subscribe to Oneindia Tamil

ஷூட்டிங் போன இடத்தில் அட்டை கடித்து ரத்தம் இழந்து பத்திரமாகதிரும்பியுள்ளாராம் அங்கீதா.

ஐ லவ் யூ ரஸ்னா என்று அந்தக் காலத்தில் சொன்ன பேபி இப்போது அங்கீதாவாகமலர்ந்து, தமிழ் மற்றும் தெலுங்குப் படங்களில் நடித்து வருகிறது.

தமிழில் வேகமாக 2 படங்களில் நடித்த அங்கீதா அதன் பிறகு காணாமல் போனார்.இப்போது ஸ்ரீரங்கா என்ற படத்தில் நடித்து வருகிறார். படு கிளாமராக இதில்வருகிறார் அங்கீதா.

ஓவர் கிளாமரா இருக்கே என்று யாராவது கேட்டால், திறமை இருக்கிறது,காட்டுகிறேன், எனக்கு என்ன வயசா ஆச்சு என்று திருப்பிக் கேட்டு அசத்துகிறார்அங்கீதா.

சமீபத்தில் ஸ்ரீரங்கா படத்தின் ஷூட்டிங், அடர்ந்த காடு ஒன்றில் நடந்தது. இதில்அங்கீதா படு கிளாமரான டிரஸ் அணிந்து நடித்தார். அதாவது தலை முதல் பாதம் வரைஒரே ஒரு துணிதான். நீளமான அந்தத் துணியால் உடலை மீடியமாக மூடியபடிநடித்தார் அங்கீதா.

ஷாட் முடிந்து தனது சீட்டில் வந்து உட்கார்ந்தார் அங்கீதா. அப்போது அவரதுதொடையில் எதுவோ ஊர்வது போல இருக்கவே, ஆடையை விலக்கி தொடையைப்பார்த்துள்ளார் அங்கீதா.

அங்கே ஒரு அட்டை, படு தெனாவட்டாக அமர்ந்து, அங்கீதாவின் ரத்தத்தை உறிஞ்சிக்கொண்டிருந்தது. அட்டைக் கடிப்பதைப் பார்த்த அங்கீதா அலற ஆரம்பித்தார். இதைக்கேட்டதும் சற்று தள்ளி அமர்ந்திருந்த படத்தின் ஹீரோ வேகமாக ஓடி வந்தார்.

அங்கீதாவின் தொடையைக் கவ்விக் கொண்டிருந்த அட்டையை பட்டென்று தனதுகையால் தட்டி விட்டார். அப்புறம்தான் அங்கீதாவின் அலறல் நின்றது.

அட்டையை தட்டி தனது ரத்தத்தை காப்பாற்றிய ஹீரோவுக்கு பல நூறு தேங்க்ஸ்சொன்னார் அங்கீதா. ஷூட்டிங்கிலிருந்து வந்த பின்னரும் கூட தொடையைக் கவ்வியஅட்டையை இன்னும் மறக்க முடியாமல் அவதிப்படுகிறாராம் அங்கீதா.

Please Wait while comments are loading...

Tamil Photos

Go to : More Photos

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil