»   »  ரஜினி+கமல் = அந்நியன்!

ரஜினி+கமல் = அந்நியன்!

Posted By:
Subscribe to Oneindia Tamil

இயக்குனர் ஷங்கர் என்ன தான் கட்டிக் காத்தாலும் அந்நியன் கதை கொஞ்சம் கொஞ்சமாக வெளியில் கசியத் தொடங்கியுள்ளது. படத்தில் பெரிய அளவில் மேட்டர்ஏதும் இல்லை என்றும் பேச்சும் எழுந்துள்ளது.

வழக்கமான ஷங்கரின் சமூக கோபம் தான் இதிலும் படமாக்கப்பட்டுள்ளதாம். நடித்த நடிகர்களும், கதைக் களமும் புதிதே தவிர இதே பாணியில் முன்பே பல படங்கள்வந்து ஹிட்டும் ஆகியுள்ளன.

இயக்குனர் எஸ்.ஏ.சந்திரசேகரனின் சிஷ்யரான ஷங்கர், தனது குருவின் முந்தைய படமான "நான் சிகப்பு மனிதன் மற்றும் தனது முந்தைய படமான "இந்தியன் ஆகியஇரு படங்களையும் போட்டுக் குலுக்கி அதிலிருந்து கிடைத்த சாரத்தை வைத்துத் தான் அந்நியனை உருவாக்கியுள்ளார் என்கிறார்கள்.

இந்த இரு படங்களுமே கிட்டத்தட்ட ஒரே கதையம்சம் கொண்டவை தான். நான் சிகப்பு மனிதன் படத்தில் ரஜினி கெளரவமான பேராசியர். சமூக விரோதிகளால் தனதுகுடும்பம் பலியானதால் ஆவேசமடைந்து, அதேபோன்ற சமூக விரோதிகளை பழிவாங்குகிறார்.

பகலில் பேராசியர், இரவில் சமூக விரோதிகளை வேட்டையாடும் ராபின்ஹூட். இதே போலத் தான் இந்தியனும். பாடுபட்டு வாங்கிக் கொடுத்த சுதந்திரம் பரிதாபநிலையில் இருப்பதைப் பார்க்கும் இந்தியன் தாத்தா, சமூகத்தை சீரழிக்கும் சிலரால் தனது குடும்பம் சிதிலமடைவதைப் பார்த்து ஆவேசம் கொள்கிறார்.

இதுபோன்ற துரோகிகளை விட்டு வைப்பது சமூகத்திற்கு ஆபத்து என்று முடிவு செய்து பழி வாங்கப் புறப்படுகிறார்.

இந்த இரு கதைகளையும் கலந்து தான் அந்நியனை உருவாக்கியுள்ளாராம் ஷங்கர். இருப்பினும் கிட்டத்தட்ட நான் சிகப்பு மனிதன் கதையின் மறு தழுவலாகவேஅந்நியன் கதையும் அமைந்துள்ளதாம்.

அமைதியான, ஆச்சாரமான பிராமணக் குடும்பத்தைச் சேர்ந்தவர் விக்ரம். சமூகத்தின் சில கோளாறுகள் இவருக்குள் பூகம்பத்தை ஏற்படுத்துகின்றன. நேரடியாகஅவற்றால் பாதிக்கப்படும் அவர், பழி வாங்கப் புறப்படுகிறார்.


பகலில் அமைதியான அய்யங்கார்! இரவிலோ பழி தீர்க்கும் வேட்டை நாயாக மாறுகிறார். விதம் விதமான கெட்டப்புகளில் இரவு நேரங்களில் சமூக விரோதிகளையும்,சமூகத்தை சீரழிக்கும் சக்திகளையும் தேடித் தேடி அழிக்கிறார் விக்ரம்.

இப்படிக் கொலைகள் செய்யும் விக்ரம் கடைசியில் பிடிபடுகிறாரா, இல்லையா, அவரது செயல்கள் நியாயப்படுத்தப்படுகிறதா, இல்லையா என்பது தான் அந்நியன்படத்தின் கிளைமாக்ஸ் என்கிறார்கள்.

நான் சிகப்பு மனிதன், இந்தியன் படங்களின் மறு பதிப்பாக உருவாகியுள்ள அந்நியனில், கதையை விட ரசிகர்கள் அதிகம் எதிர்பார்ப்பது விக்ரமின் நடிப்பைத் தான்.அது எப்படி இருக்கப் போகிறது என்பதுதான் மில்லியன் டாலர் கேள்வியாக எழுந்துள்ளது.

சும்மா எப்போதும் முறைத்துக் கொண்டே உவ்வா, உவ்வா என ஆக்ஷன் காட்டும், நடிப்பே வராத அர்ஜூனையே முதல்வன் படத்தில் நன்றாக நடிக்க வைத்திருந்தார்ஷங்கர். இதனால் இதில் விக்ரமை அவர் நிச்சயம் முடிந்த அளவுக்கு நன்றாகவே பயன்படுத்தியிருப்பார்.

ஸ்டில்களிலும், டிரைலரிலும் இருக்கும் மிரட்டல் உண்மையிலேயே படத்திலும் இருந்தால் இது நிச்சயம் பெரிய ஹிட்டாகும் என்கிறது கோடம்பாக்கம்.

புலி வருகிறது கதையாக இதோ, அதோ என்று இந்தப் படத்தின் ரிலீஸ் தேதி தள்ளிப் போடப்பட்டு வந்த நிலையில் ஒரு வழியாக வருகிற 17ம் தேதி நாள் பார்த்தாகிவிட்டது. உலகம் முழுவதும் அன்றைய தினம் அந்நியன் ஒரு வழியாக ரிலீஸ் ஆகிறான். படத்துக்கான ரிசர்வசேன் இன்று முதல் தொடங்கிவிட்டது.

இந்தப் படம் ரூ. 35 கோடிக்கு விற்பனையாகி இருக்கிறதாம். போட்ட காசை விட ரூ. 10 கோடியை எடுத்துவிட்டார் தயாரிப்பாளர் ஆஸ்கார் பிலிம்ஸ் ரவிச்சந்திரன்.

Read more about: anniyans story

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil