»   »  அந்நியன் ரிலீஸ்: ஷங்கருக்கும் கட்-அவுட்!

அந்நியன் ரிலீஸ்: ஷங்கருக்கும் கட்-அவுட்!

Subscribe to Oneindia Tamil

ஷங்கரின் பிரமாண்ட படைப்பான அந்நியன் நேற்று உலகெங்கும் முழுவதும் வெளியானது.

ஆஸ்கர் பிலிம்ஸ் ரவிச்சந்திரன் மிகப் பெரும் பொருட் செலவில் தயாரித்து, ஷங்கர் இயக்கத்தில் விக்ரம், சதா நடிப்பில்உருவாகியுள்ள அந்நியன், நீண்ட காலமாக தயாப்பில் இருந்து வந்தது.

இப் படத்திற்கான டிக்கெட் முன் பதிவு சில நாட்களுக்கு முன் தொடங்கியது. முதல் நாளான நேற்று படத்துக்கு தமிழகம் முழுவதும்தியேட்டர்களில் பெரும் கூட்டம் கூடியது. சென்னை உள்ளிட்ட பெரும்பாலான நகர்களில் ஒரு வாரத்திற்கான அனைத்துக்காட்சிகளும் புக் ஆகி விட்டன.


ரூ. 26.38 கோடி செலவில் இப்படம் தயாராகியுள்ளது. படத்திற்காக 170 வகையான விளம்பரப் பலகைகள் சென்னை நகரில்வைக்கப்பட்டுள்ளன.

தமிழ்ப் புத்தாண்டுக்கே அந்நியன் திரைக்கு வந்திருக்க வேண்டும். ஆனால் ரஜினியின் சந்திரமுகி வெளியானதாலும் ரஜினியின்கோரிக்கையை ஏற்றும் தனது படத்தை தள்ளிப் போட்டார் ஷங்கர்.

மிகப் பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்திய அந்நியன் குறித்து விக்ரம் பூரண திருப்தி அடைந்துள்ளார். அந்நியனில் தனது கேரக்டர்குறித்து அவர் கூறுகையில்,


மிகவும் திருப்தியாக உள்ளது. இதுவரை இப்படிப்பட்ட கேரக்டரில் நான் நடித்ததில்லை. மிகுந்த ஆவலுடன் ரசிகர்களின்ரியாக்ஷனுக்காக காத்துள்ளேன். நீண்ட காலத் தயாரிப்பாக இருந்தாலும் கூட அந்நியன் அனைத்துத் தரப்பினரையும்திருப்திப்படுத்தும் வகையில் உருவாகியுள்ளது.

இந்தப் படத்திற்காக எனது முழு திறமையையும் வெளிப்படுத்தி நடித்துள்ளேன். இந்தப் படத்திற்காக எனது பல படங்களைதியாகம் செய்துள்ளேன். ஷங்கருடன் இணைந்து பணியாற்றியது பெரும் பாக்கியம், நல்ல அனுபவம் கிடைத்தது.

அதேபோல ஆஸ்கர் பிலிம்ஸ் அதிபர் ரவிச்சந்திரனும் மிகுந்த ஒத்துழைப்பு கொடுத்தார். நாங்கள் கேட்டதையெல்லாம் கொடுத்துஎங்களை உற்சாகப்படுத்தினார். செய்திகளுடன் வரும் திரைப்படங்கள் பெரும்பாலும் போர் அடிப்பவையாகவே இருக்கும்.ஆனால் இந்தப் படம் அனைவரையும் யோசிக்க வைக்கும்.


வர்த்தகரீதியிலும் அந்நியன் பெரும் வெற்றி அடையும். இந்தப் படம் தமிழ்நாட்டுக்கும், தமிழ் ரசிகர்களுக்கும் மட்டுமானதுஅல்ல. இந்தியா முழுமைக்கும் இந்தப் படத்தின் கருத்துக்கள் பொருந்தும் என்றார் விக்ரம்.

அந்நியன் திரையிடப்பட்டுள்ள திரையரங்குகளில் விக்ரமோடு சேர்த்து, ஷங்கரின் பிரமாண்ட கட் அவுட்களும்வைக்கப்பட்டுள்ளன. ஒரு இயக்குனருக்கு ஹீரோவுக்கு இணையாக கட்-அவுட்களை ரசிகர்களே வைத்துள்ளது இதுவே முதல்முறையாகும்.


ரஜினி+கமல் = அந்நியன்!

Please Wait while comments are loading...

Tamil Photos

Go to : More Photos