»   »  சந்திரமுகியை முந்தும் அந்நியன் வசூல்!

சந்திரமுகியை முந்தும் அந்நியன் வசூல்!

Subscribe to Oneindia Tamil

ஷங்கர் இயக்கம் மற்றும் விக்ரம் நடிப்பில் உருவாகி வெளியாகியுள்ள அந்நியன் திரையிடப்பட்டுள்ளதிரையரங்கங்கள் அனைத்தும் நிரம்பி வழிகின்றன. ரஜினிகாந்த்தின் சந்திரமுகி வசூலை அந்நியன் விரைவில்முறியடிக்கும் என்கின்றது தியேட்டர்கள் வட்டாரம்.

விக்ரம்-சதா நடிப்பில் ஷங்கர் இயக்கத்தில், சுஜாதா வசனத்தில் உருவாகியுள்ள அந்நியன் 3 நாட்களுக்கு முன்திரையிடப்பட்டது. தமிழகம், ஆந்திரம் மற்றும் உலகெங்கும் திரையிடப்பட்டுள்ள அந்நியன் அத்தனைதிரையரங்குகளிலும் அரங்கு நிறைந்த காட்சிகளாக ஓடி வருகிறது.

படம் சூப்பர் ஹிட் ஆகியுள்ளது. ஜென்டில்மேன், இந்தியன் படங்களின் பிரதிபலிப்பாக இருந்தாலும் கூடவிக்ரமின் நடிப்பை ரசிக்க ரசிகர்கள் படு ஆர்வம் காட்டுகிறார்கள்.


திரையிடப்பட்ட 3 நாட்களிலேயே வசூலிலும் சாதனை படைத்து விட்டது அந்நியன். சென்னை சங்கம் திரையரங்ககுழும மேலாளர் ஜெயக்குமார் கூறுகையில்,

பத்மம் திரையரங்கில் ரூ. 4 லட்சமும், சங்கத்தில் 8 லட்சமும் முதல் 3 நாட்களில் வசூலாகியுள்ளது. இது ஒருசாதனையாகும். இந்த நிலை தொடர்ந்தால் சந்திரமுகி வசூலை அந்நியன் முறியடித்து விடும். இருப்பினும் ஒருவாரத்திற்குப் பிறகே உண்மையான நிலவரம் தெரிய வரும் என்றார்.

முதலில் ஒரு வார டிக்கெட்டுகள் முன் பதிவு மூலம் புக் ஆகியிருந்த நிலையில் இப்போது அடுத்த பத்துநாட்களுக்கும் டிக்கெட்டுகள் விற்றுத் தீர்ந்துவிட்டன.


டிக்கெட் இல்லை என்று தெரிந்தாலும், பிளாக்கில் வாங்கலாம் என்ற ஆர்வத்தில் ஏராளமானவர்கள் குவிந்துவருகின்றனர். இதனால் திரையரங்குகளில் கூட்டம் கட்டுக்கடங்காமல் உள்ளது. இதனால் திரையரங்குகளில்போலீஸாரும் குவிக்கப்பட்டுள்ளனர்.

படத்தைப் பார்த்து விட்டு வெளியே வருபவர்களில் பெரும்பாலானவர்கள், விக்ரம் நன்றாக நடித்துள்ளார்.ஆனால், ஷங்கர் ஏன் ஒரே மாதிரியான கதையை திரும்பத் திரும்ப வேறு ரூபங்களில் கொடுக்கிறார் என்றேகருத்து தெரிவிக்கிறார்கள்.


எனவே கதையை விட விக்ரம்தான் ரசிகர்களைக் கவர்ந்துள்ளார்.

எது எப்படியோ.. படத்தைத் தயாரித்து தானே ரிலீஸ் செய்த ஆஸ்கர் பிலிம்ஸ் ரவிச்சந்திரனின் காட்டில் கரன்சிமழை.

Read more about: anniyan beats chandramukhi
Please Wait while comments are loading...

Tamil Photos

Go to : More Photos

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil