»   »  ஸ்பெஷல்ஸ்

ஸ்பெஷல்ஸ்

Subscribe to Oneindia Tamil

சூப்பர்டா படத்தில் கவர்ச்சிக்கென்றே அறிமுகமாகிறார் அனு.

தமிழில் சும்மாவே ஏகப்பட்ட கவர்ச்சி டிக்கெட்டுகள் சான்சுக்காக அலை பாயந்து கொண்டிருக்க, அவர்களுக்குப்போட்டியாய் ஹீரோயின்களும் களத்தில் கலக்கி வரும் நிலையில் அனு என்ற பெயரில் கோடம்பாக்கத்தில் லேண்ட்ஆகியிருக்கிறார் இந்த ஆந்திர இறக்குமதி.

வயசுப் பசங்க, சேட்டை வகையறாவைச் சேர்ந்தது தான் இந்த சூப்பர்டா படமும்.

மிகக் குறைவான செலவு,ஹீரோயினுக்கு மிகக் குறைவான துணி என தெள்ளத் தெளிவாய் பட்ஜெட் போட்டு படத்தை எடுத்துக்கொண்டிருக்கிறார்கள்.

படம் எடுக்கப்பட்டு வரும் நிலையிலேயே வினியோகஸ்தர்களுக்கு அனுவின் காட்சிகளைப் போட்டுக் காட்டி,மெய்மறக்க வைத்து, அவர்களிடம் அட்வான்ஸையும் வாங்கிவிட்டார் தயாரிப்பாளர்.

படத்தில் அந்த அளவுக்குதாராளமயக் கொள்கையை அமல்படுத்தியிருக்கிறாராம் அனு.

பார்க்க படு ஹோம்லி முகம். ஆனால், கிடைத்ததோ கவர்ச்சி சான்ஸ். விடக் கூடாது என்பதால் துணந்து நடிக்கஒப்புக் கொண்டு விட்டாராம்.

படத்தை அப்படியே தெலுங்குக்கும் டப் செய்தும் விடத் திட்டமிட்டிருக்கிறார்கள்.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil