லண்டன் நண்பரை மணந்தார்.. அனு க்ரஹாம் ஆனார் அனு ஹாஸன்!

By Shankar

Anu Haasan and Kamal Haasan
நடிகை அனு ஹாஸன் தனது லண்டன் நண்பர் கிரஹாமை திருமணம் செய்தார். அவரை கமல்ஹாஸனும் கவுதமியும் நேரில் வாழ்த்தினர்.

இந்திரா படத்தில் அறிமுகமானவர் அனு ஹாஸன். இவர் நடிகர் கமல்ஹாசனின் அண்ணன் சந்திரஹாஸனின் மகள். அனுஹாசனுக்கும், விகாஷ் என்பவருக்கும் பத்து ஆண்டுகளுக்கு முன்னர் திருமணம் நடந்தது. ஆனால் கருத்து வேறுபாடு காரணாக விவாகரத்து பெற்று தனியே வாழ்ந்துவந்தார்.

மீண்டும் படங்களில் நடிக்கத் தொடங்கினார். விஜய் டி.வி.யின் காபி வித் அனு மூலம் பிரபலமானார். அப்போதுதான் அனுவுக்கு இணையதளம் மூலம் லண்டனை சேர்ந்த கிரகாம் என்பவரது அறிமுகம் ஏற்பட்டது. முதலில் நட்பாக ஆரம்பித்தது, பின்னர் காதலாக வளர்ந்தது. கிரகாம் பெரிய முதலீட்டாளராக உள்ளாராம்.

இவர்களது காதலுக்கு இருவரது பெற்றோரும் சம்மதம் தெரிவித்தனர். இதனையடுத்து கடந்தாண்டு ‌திருமண நிச்சயதார்த்தமும் நடந்தது. இவர்களின் திருமணம் சில தினங்களுக்கு முன் சென்னையில் நடந்தது.

ஐயங்கார் முறைப்படி நடந்த இந்த திருமணத்துக்கு கமல்ஹாசன், கெளதமி, ஸ்ருதிஹாசன், அக்ஷராஹாசன், மணிரத்னம், சுஹாசினி மற்றும் இருவீட்டராது நெருங்கிய உறவினர்கள் மட்டும் பங்கேற்று மணமக்களை வாழ்த்தினர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X