»   »  ஸ்பெஷல்ஸ்

ஸ்பெஷல்ஸ்

Subscribe to Oneindia Tamil

சூப்பர்டா படத்தில் அறிமுகமாகும் அனுவுக்கும், ஒருமுறை சொல்லிவிடு படத்தில் எஸ்.எஸ். சந்திரனின் மகன்ரோஹித்துக்கு ஜோடியாக அறிமுகாகும் ஜனப்பிரியாவுக்கும் இப்போதே கோலிவுட்டில் ஏகப்பட்ட எதிர்பார்ப்புஏற்பட்டுவிட்டது.

கவர்ச்சிப் புறாக்களாக இருவரும் ரெக்கை கட்டிப் பறக்கும் இவர்கள் தங்களைப் பாத்தாலே பெருமூச்சு விடவைக்கும் வகையிலான ஸ்டில்கள் எடுத்து பி.ஆர்.ஓக்கள் மூலம் தயாரிப்பாளர்கள், இயக்குனர்களிடம்ஆல்பங்களை திணித்து வருகிறார்களாம்.

முதல் படம் வெளிவரும் முன்பே அடுத்ததடுத்த படங்களுக்கு தூண்டில் போட ஆரம்பித்திருக்கும் இருவருமேகவர்ச்சியின் எல்லைக் கோட்டுக்கே போய் வரத் தயார் என்பதையும் குறிப்பெழுதி அனுப்பி வருகிறார்கள்.

இதில் அனுவுக்கு சொந்த ஊர் கோயம்புத்தூர் தானாம். ஆனால், பிறந்தது வளர்ந்தது பெங்களூர்.

சூப்பர்டாபடத்தில் முதலில் சத்யராஜுக்குத் தான் ஜோடியாக அனுவை புக் செய்தார்கள்.

அறிமுகமே மூத்த நடிகருடனா என்றவருத்தத்தில் இருந்தார் அனு.

ஆனால், நல்ல வேளையாக அவரது கால்ஷீட் தேதிகள் ஒத்துவராததால் குணாலைப் பிடித்துப் போட்டுள்ளார்கள்.

இளம் நாயகனுக்கு ஜோடியாக அறிமுகமாவதில் பெரு மகிழ்ச்சியில் இருக்கிறார்.

தூள் படத்தில் கலக்கிய சொர்ணக்கா சகுந்தலாவும் இதில் நடிக்கிறார். இதில் அனுவுக்கு மிக ஜாலியானபெண்ணின் ரோல்.

இதனால் காஸ்ட்யூம்சும் ரொம்ப குஜாலாகவே அமைத்திருக்கிறார்கள். படம் பூராவும்கவர்ச்சியைக் கொட்டி வருகிறார். சூப்பர்டா!.

ஜலஜலப்பிரியா...

அனுவுக்கு சற்றும் சளைக்காதவர் தான் ஜனப்பிரியாவும். ரோஹித்துடன் ஒருமுறை சொல்லிவிடு படத்தில் அறிமுகமாகும் இவரதுபாலிஸியே, என்ன வேணும்னாலும் செய்யலாம்... எப்படியும் நடிக்கலாம் என்பதே.

இவரும் அடுத்தடுத்த படங்களைக் குறி வைத்து கவர்ச்சியில் ரகளை பண்ணிக் கொண்டிருக்கிறார்.

என்ன காஸ்ட்யூம் என்றாலும்கஷ்டமே இல்லாமல் போட்டுக் கொண்டு வந்து நின்று சூட்டிங் ஸ்பாட்டைக் கலக்குகிறார்.

ஜனப்ரியாவுக்கு பூர்வீகம் ஆந்திராவாம். இந்தப் படம் வெளிவந்தால் தமிழில் நிச்சயம் முக்கிய இடத்தைப் பிடிப்பேன் என்று மிகநம்பிக்கையோடு பேசும் ஜனப்பிரியா கவர்ச்சியாக நடித்தாலும் கூட முகம் கொள்ளை அழகு.

Please Wait while comments are loading...

Tamil Photos

Go to : More Photos

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil