»   »  ஸ்பெஷல்ஸ்

ஸ்பெஷல்ஸ்

Posted By:
Subscribe to Oneindia Tamil

அந்தக் கால கவர்ச்சி மோகனி அனுராதாவும், அவரது கவர்ச்சி வாரிசு அபிநயஸ்ரீயும் சேர்ந்து சூப்பர்டா படத்தில்அட்டாகசமான கலக்கல் ஆட்டம் போட்டிருக்கிறார்களாம்.

கமல், விஜயகாந்த், மோகன் என மூத்த நடிகர்களுடன் சேர்ந்து முன்பொரு காலத்தில் முக்காலே மூணு வீசம்அளவுக்கு தம்பிடி துணியுடன் தப்பாட்டம் போட்டவர் அனுராதா. இப்போது ஓய்வு பெற்று விட்டார்.

ஓய்வு பெற்றாலும் தனது கவர்ச்சி வாரிசாக மகள் அபிநயஸ்ரீயை களம் இறக்கி விட்டு கலக்கி வருகிறார்.அம்மாவுக்கு சற்றும் சளைக்காமல், தனது உடலை வளைத்து, குலுக்கி, தளுக்கி வாலிப உள்ளங்களை வதைத்துவருகிறார் அபி.

இப்போது இரண்டு பேரும் சேர்ந்து ஒரு படத்தில் படு ஆட்டம் போட்டிருக்கிறார்கள். சூப்பர்டா என்ற பெயரில்தயாராகும் ஒரு படத்தில் இருவருக்கும் மஜாவான பாட்டாம்.

இதே படத்தில் இன்னொரு பாட்டும் உண்டு. அதில் ஷகீலாவும், வையாபுரியும் இணைந்து பின்னிஎடுக்கிறார்களாம். ஷகீலா மீது வையாபுரி மோதி கீழே விழ, இருவருக்கும் கனவு ஸ்டார்ட் ஆகிறது. அதில் மன்மதராசா பாடல் வருகிறது. அதே பாடலுக்கு ஷகீலாவும், வையாபுரியும் அட்டகாசமான பீட்டில் ஆடுகிறார்களாம்.

இன்னொரு பக்கம், ஹீரோயின் அனுவும் அட்டகாசமான கவர்ச்சி காட்டி வருவதால், படத்தின் முதல் ரீலில் இருந்துவணக்கம் வரைக்கும் கவர்ச்சி கன மழையாக இருக்கிறதாம்.

சூப்பரோ, சூப்பர்டா!

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil