ராணாவில் அனுஷ்கா - அசின்?
ரஜினியின் ராணா பற்றிய செய்திகள் கிட்டத்தட்ட தினசரி வரத் தொடங்கிவிட்டன. குறிப்பாக வட இந்திய மீடியாவில் இந்தப் படம் ஒரு நேரடி இந்திப் படம் என்றே குறிப்பிடப்படுகிறது.
இந்த தகவலை படத்தின் ஒளிப்பதிவாளர் ரத்னவேலுவும் உறுதிப்படுத்தியுள்ளார்.
ராணாவில் ஒரு நாயகியாக தீபிகா படுகோன் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். அவருக்கு பெரும் தொகை சம்பளமாகப் பேசப்பட்டுள்ளது.
மேலும் இரு நாயகிகளும் படத்தில் உண்டு. இந்த வேடங்களுக்கு நடிகைகள் மத்தியில் பெரும் போட்டியே நடக்கிறதாம்.
படத்தில் எப்படியாவது இடம்பெற்று விட வேண்டும் என த்ரிஷா முயற்சி மேற்கொண்டு வரும் நிலையில், அனுஷ்கா மற்றும் அசினிடம் பேச்சு நடத்தப்பட்டு வருவதாக நம்பகமான வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
ராணாவை தமிழ் தவிர, தெலுங்கு மற்றும் இந்தியிலும் நேரடியாக எடுக்கிறார்களாம். இந்திப் பதிப்புக்கும் ரஜினியே டப்பிங் பேசுகிறாராம். இத்தகவலை ரத்னவேலு உறுதிப்படுத்தியுள்ளார்.


Click it and Unblock the Notifications











