இன்று 'தல'க்கு மட்டும் அல்ல திருமதி கோஹ்லிக்கும் பிறந்தநாள்: அதுவும்...
பெங்களூர்: அனுஷ்கா சர்மா திருமதி கோஹ்லியான பிறகு தனது முதல் பிறந்தநாளை இன்று கொண்டாடியுள்ளார்.
பாலிவுட் நடிகை அனுஷ்கா சர்மா கிரிக்கெட் வீரர் விராட் கோஹ்லியை திருமணம் செய்த பிறகு தனது முதல் பிறந்தநாளை இன்று கொண்டாடியுள்ளார்.
இந்த பிறந்தநாளை கணவருடன் கொண்டாட வேண்டும் என்பதற்காகவே அவர் பெங்களூருவுக்கு வந்துள்ளார்.
வாழ்த்து
தனது மனைவிக்கு கேக் வெட்டி ஊட்டிவிட்டு அதை புகைப்படம் எடுத்து ட்விட்டரில் வெளியிட்டுள்ளார் கோஹ்லி.

படம்
முன்னதாக கோஹ்லி நேற்று மாலை தனது மனைவி மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியை பெங்களூரில் உள்ள ஓரியன் மாலுக்கு அழைத்துச் சென்று அவெஞ்சர்ஸ் படம் பார்க்க வைத்துள்ளார்.

அமெரிக்கா
பெங்களூரில் இருந்து கிளம்பும் அனுஷ்கா நேராக அமெரிக்கா செல்கிறார். அங்கு ஒரு மாத காலம் படப்பிடிப்பில் கலந்து கொள்கிறார். வேலை காரணமாக கோஹ்லி, அனுஷ்கா ஒன்றாக இருப்பது கடினமாகியுள்ளது.

மும்பை
விலங்குகள் பிரியையான அனுஷ்கா அவற்றுக்காக மும்பைக்கு வெளியே காப்பகம் ஒன்றை கட்டி வருவதாக தனது பிறந்தநாள் அன்று அறிவித்துள்ளார். அவர் செய்யும் நல்ல காரியத்திற்காக அவரை பலரும் பாராட்டியுள்ளனர்.


Click it and Unblock the Notifications











