»   »  காவிய நாயகி அபர்ணா

காவிய நாயகி அபர்ணா

Subscribe to Oneindia Tamil

தனது கனவுப் படம் இது என்று தான் நடித்து வரும் காவியம் குறித்து பெருமையாக கூறி வருகிறார் அபர்ணா.

செம துட்டு பார்ட்டியான அபர்ணா இதுவரை குறுந்தொழிலதிபராக இருந்து வந்தார். இப்போது பெரும்தொழிலதிபராகி விட்டார்.

சினிமாவில் நடிக்காமல் இருந்த இடைப்பட்ட காலத்தில் பல புதிய நிறுவனங்களை உருவாக்கி விட்டார்.சொந்தமாக சென்னையில் 13 மாடிகளைக் கொண்ட ஒரு சூப்பர் வர்த்தக வளாகத்தையும் கட்டி முடித்துள்ளார்.இதன் மதிப்பே ரூ. 30 கோடி என்கிறார்கள்.

தொழிலதிபராக வெற்றிக் கொடி நாட்டியுள்ள அபர்னா சினிமாவில் இன்னும் சின்னப் புள்ளையாகவேஇருக்கிறார். இருந்தாலும் அவருக்குக் கவலை இல்லையாம்.

நான் பணத்துக்காக நடிக்க வரவில்லை. எனக்கென்று சில லட்சியங்கள், கொள்கைகள் உள்ளன. அதற்கு பங்கம்வராத படங்களில்தான் நடிப்பேன் என்று நெஞ்சு நிறைந்த சந்தோஷத்துடன் கூறுகிறார் அபர்ணா.

அபர்ணா இப்போது காவியம் என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்தப் படத்தைப் பற்றிக் கேட்டாலே, பச்சப்புள்ளையைப் போல படு குஷியாகி விடுகிறார் அபர்ணா. இந்தப் படம் எனது கனவுப் படம். இதில் பரதநாட்டியக் கலைஞராக நடிக்கிறேன் (பாப்பாவுக்கு பரதம் பால்கோவா மாதிரி,நன்னாவே ஆடும்!)

பரதம் என்றால் எனக்கு உயிர். நான் பெரிய தொழிலதிபராக வேண்டும் என்பதற்காகத்தான் பிசினஸ்மேனேஜ்மென்ட் படிச்சேன். இடையில் நேரம் கிடைத்தபோது பரதம் கற்கப் போனேன். அது கடைசியில்வெறியாகி விட்டது.

அப்படியே, விளம்பரங்கள், மல்டி மீடியா, நடிகை என்று பல அவதாரங்களுக்கு கொண்டு போய் விட்டுவிட்டது. இத்தனை முகங்கள் இருந்தும் எனக்கு ரொம்பப் பிடித்த முகம் பரத கலைஞர் என்பதுதான்.

பரதம் எனக்கு உயிர். அந்த வேடத்தில் எனக்கு ஒரு படமும் வரலையேன்னு ரொம்ப ஏங்கிக் கொண்டிருந்தேன்.அப்ப வந்ததுதான் இந்த காவியம் பட வாய்ப்பு என்று நிறுத்தி கொஞ்சம் மூச்சு விட்டுக் கொண்டு தொடர்ந்தார்.

இந்தப் படம் மலையாளத்திலும் தயாராகிறது. கிட்டத்தட்ட சலங்கை ஒலி, சங்கராபரணம் போன்ற டைப்பிலானகதை. முழுக்க முழுக்க எனக்குத்தான் முக்கியத்துவம் இப்படத்தில். நான் வாய் பேச முடியாத பரத நாட்டியக்கலைஞராக வருகிறேன்.

சக பாடகர் ஒருவரைக் காதலிக்கிறேன். எனக்கு ஒரு கட்டத்தில் பேச்சு வந்து விடுகிறது, ஆனால் எனதுகாதலருக்கு பேச்சு போய் விடுகிறது. அப்புறம் என்ன ஆகிறது (நாம் என்னாகிறோம்?) என்பதுதான் படத்தின்கதை.

கதையைக் கேட்கும்போதே நெகிழ்ச்சியாக இருக்குல்ல?. நடிக்கும் எனக்கும் அதே நெகிழ்ச்சிதான். இந்தப்படத்துக்காக மறுபடியும் பரதநாட்டியத்தை தீவிரமாக பிராக்டிஸ் செய்து வருகிறேன். இந்தப் படத்துக்காகஎனக்கு விருது கூட கிடைக்குமாம். யூனிட்டில் சிலாகித்துச் சொல்கிறார்கள் என்று புல்லரித்துப் பேசுகிறார்அபர்ணா.

இந்தப் படத்துக்கும் நீங்க தான் பைனான்ஸா? என்று அபர்ணாவிடம் கேட்க ஆசை தான். ஆனால், தெகிரியம்இல்லை.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil