ஜில்ஜில் அபர்ணா அபர்ணா ஒரு வழியாக ஓபனாகவே களத்தில் குதிக்கிறார். தப்பு தப்பாக எதையாவது யோசிக்காதீர்கள். மேலேபடியுங்கள்.. புதுக்கோட்டை படத்தில் அறிமுகமான அபர்ணாவுக்கு சரிவர படங்கள் வராததால் தானே மறைமுகமாகதயாரிப்பில் இறங்க முடிவு செய்தார். குடும்பத்தின் ஏகப்பட்ட சொத்துக்களில் கொஞ்சத்தை எடுத்து தனக்குத்தானே பைனான்ஸ் செய்து கொள்ள திட்டமிட்டார்.இதை அறிந்த கோலிவுட் ராசாக்கள் அவரை அப்படியே மடக்கிப் போட்டு துட்டு அடிக்கும் சிந்தனையோடு ஓடிப்போய் கதை சொன்னார்கள். ஆனால் ஏதும் சரிப்படவில்லை.நீண்ட யோசனைக்குப் பின் நெஞ்சில் ஜில்ஜில் என்ற படத்தில் தற்போது நடித்து வருகிறார் அபர்ணா. இந்தப்படத்துக்கும் அபர்ணா தான் பைனான்ஸ் என்று கோடம்பாக்கத்தில் குசுகுசுக்கிறார்கள்.ஆனால், தனது படங்களுக்கு தானே பைனான்ஸ் பண்ணுவதாக வரும் நியூஸ்களை எல்லாம் அபர்ணா மறுத்தேவந்தார்.இந் நிலையில் தானே ஒரு சொந்த படக் கம்பெனி தொடங்க முடிவு செய்துள்ளாராம். அண்டக்கிரவுண்ட்பைனான்ஸ், மறைமுக பைனான்ஸ் என்று இதுவரை தனது படங்களுக்கு முட்டு குடுத்து வந்த அபர்ணா இனிதானே சொந்தப் படத்தையும் எடுக்கப் போகிறார்.ஜீவன், ரிச்சர்ட், பிரசன்னா ஆகிய இளம் மற்றும் வித்தியாச ஹீரோக்களை வைத்து அபர்ணா படங்களைதயாரிக்கவுள்ளாராம்.முன்னணி ஹீரோக்கள் மண்டை கனம் காரணமாக அபர்ணா போன்ற அழகிய கருப்பு நிலாக்களை ஒதுக்கிவிட்டுதமிழ் பேசத் தெரியாத வெள்ளைத் தோல்களின் பின்னால் அலைந்து வருவதால் அவர்களுக்கு பாடம் கற்பிக்கும்விதமாக பாய் நெக்ஸ்ட் டோர் இமேஜ் கொண்ட ஹீரோக்களைப் போட்டு படங்களை எடுக்க முடிவுசெய்துள்ளார் போல அபர்ணா.அபர்ணாவின் குடும்பத்துக்கு இந்தியாவில் மட்டுமின்றி சில வெளிநாடுகளிலும் கல்விக் கூடங்கள் இருப்பதுதெரியும் தானே. இதனால் அபர்ணாவுக்கு பணம் பெரிய பொருட்டில்லை.நல்ல கதையோடு வரும் இயக்குனர்களை கை தூக்கிவிடவும் இவரது தயாரிப்பு நிறுவனம் உதவுமாம்.அபர்ணாவைப் போலவே விரைவாக சினிமா தயாரிப்பு நிறுவனங்கள் ஆரம்பிக்கப் போகிறவர்கள் சூர்யாவும்,தனுசும் என்கிறார்கள். ஜில்லுனு ஒரு காதல் படத்தை சூர்யா-ஜோ இருவரும் இணைந்து தான் தயாரிக்கிறார்கள்என்ற பேச்சு உள்ளது. இந் நிலையில் கல்யாணத்துக்குப் பின் சூர்யாவே ஒரு நிறுவனத்தை தொடங்கலாம்என்கிறார்கள்.அதே போல சூப்பர் ஸ்டார் மருமகனான தனுசும் தயாரிப்பு பக்கமாக வரப் போகிறார் என்கிறார்கள்.

By Staff

அபர்ணா ஒரு வழியாக ஓபனாகவே களத்தில் குதிக்கிறார். தப்பு தப்பாக எதையாவது யோசிக்காதீர்கள். மேலேபடியுங்கள்..

புதுக்கோட்டை படத்தில் அறிமுகமான அபர்ணாவுக்கு சரிவர படங்கள் வராததால் தானே மறைமுகமாகதயாரிப்பில் இறங்க முடிவு செய்தார். குடும்பத்தின் ஏகப்பட்ட சொத்துக்களில் கொஞ்சத்தை எடுத்து தனக்குத்தானே பைனான்ஸ் செய்து கொள்ள திட்டமிட்டார்.

இதை அறிந்த கோலிவுட் ராசாக்கள் அவரை அப்படியே மடக்கிப் போட்டு துட்டு அடிக்கும் சிந்தனையோடு ஓடிப்போய் கதை சொன்னார்கள். ஆனால் ஏதும் சரிப்படவில்லை.

நீண்ட யோசனைக்குப் பின் நெஞ்சில் ஜில்ஜில் என்ற படத்தில் தற்போது நடித்து வருகிறார் அபர்ணா. இந்தப்படத்துக்கும் அபர்ணா தான் பைனான்ஸ் என்று கோடம்பாக்கத்தில் குசுகுசுக்கிறார்கள்.

ஆனால், தனது படங்களுக்கு தானே பைனான்ஸ் பண்ணுவதாக வரும் நியூஸ்களை எல்லாம் அபர்ணா மறுத்தேவந்தார்.

இந் நிலையில் தானே ஒரு சொந்த படக் கம்பெனி தொடங்க முடிவு செய்துள்ளாராம். அண்டக்கிரவுண்ட்பைனான்ஸ், மறைமுக பைனான்ஸ் என்று இதுவரை தனது படங்களுக்கு முட்டு குடுத்து வந்த அபர்ணா இனிதானே சொந்தப் படத்தையும் எடுக்கப் போகிறார்.

ஜீவன், ரிச்சர்ட், பிரசன்னா ஆகிய இளம் மற்றும் வித்தியாச ஹீரோக்களை வைத்து அபர்ணா படங்களைதயாரிக்கவுள்ளாராம்.

முன்னணி ஹீரோக்கள் மண்டை கனம் காரணமாக அபர்ணா போன்ற அழகிய கருப்பு நிலாக்களை ஒதுக்கிவிட்டுதமிழ் பேசத் தெரியாத வெள்ளைத் தோல்களின் பின்னால் அலைந்து வருவதால் அவர்களுக்கு பாடம் கற்பிக்கும்விதமாக பாய் நெக்ஸ்ட் டோர் இமேஜ் கொண்ட ஹீரோக்களைப் போட்டு படங்களை எடுக்க முடிவுசெய்துள்ளார் போல அபர்ணா.

அபர்ணாவின் குடும்பத்துக்கு இந்தியாவில் மட்டுமின்றி சில வெளிநாடுகளிலும் கல்விக் கூடங்கள் இருப்பதுதெரியும் தானே. இதனால் அபர்ணாவுக்கு பணம் பெரிய பொருட்டில்லை.

நல்ல கதையோடு வரும் இயக்குனர்களை கை தூக்கிவிடவும் இவரது தயாரிப்பு நிறுவனம் உதவுமாம்.

அபர்ணாவைப் போலவே விரைவாக சினிமா தயாரிப்பு நிறுவனங்கள் ஆரம்பிக்கப் போகிறவர்கள் சூர்யாவும்,தனுசும் என்கிறார்கள். ஜில்லுனு ஒரு காதல் படத்தை சூர்யா-ஜோ இருவரும் இணைந்து தான் தயாரிக்கிறார்கள்என்ற பேச்சு உள்ளது. இந் நிலையில் கல்யாணத்துக்குப் பின் சூர்யாவே ஒரு நிறுவனத்தை தொடங்கலாம்என்கிறார்கள்.

அதே போல சூப்பர் ஸ்டார் மருமகனான தனுசும் தயாரிப்பு பக்கமாக வரப் போகிறார் என்கிறார்கள்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X